நவ்தீப் சைனியின் ஹார்லி-டேவிட்சன் பைக்கை பார்த்துள்ளீர்களா? இன்னும் என்னென்ன வித்தையை கையில் வெச்சிருக்காரோ!!

இந்திய தேசிய ஆண்கள் கிரிக்கெட் அணியின் வேகபந்து வீச்சாளர் நவ்தீப் சைனி, தற்சமயம் எந்தவொரு கிரிக்கெட் போட்டியும் இல்லாவிடினும் ரசிகர்களின் கவனத்தை அவர் பக்கம் திருப்பியுள்ளார்.

நவ்தீப் சைனியின் ஹார்லி-டேவிட்சன் பைக்கை பார்த்துள்ளீர்களா? இன்னும் என்னென்ன வித்தையை கையில் வெச்சிருக்காரோ!!

28 வயதாகும் நவ்தீப் சைனி இளம் வேகப்பந்து வீச்சாளராக இந்திய கிரிக்கெட் அணியில் அங்கம் வகித்து வருகிறது. குறிப்பாக கடந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலிய சுற்று பயணத்தில் சைனி மிக சிறப்பாக செயல்பட்டார்.

நவ்தீப் சைனியின் ஹார்லி-டேவிட்சன் பைக்கை பார்த்துள்ளீர்களா? இன்னும் என்னென்ன வித்தையை கையில் வெச்சிருக்காரோ!!

இந்திய அணி நீண்ட வருடங்களுக்கு பிறகு ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் கோப்பையை கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்தவர்களுள் நவ்தீப் சைனியும் ஒருவராகும். இதனால் தான் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியதற்காக மஹிந்திரா நிறுவனம் பரிசாக அறிவித்த 6 தார் வாகனங்களுள் ஒன்று நவ்தீப் சைனிக்கும் வழங்கப்பட்டது.

நவ்தீப் சைனியின் ஹார்லி-டேவிட்சன் பைக்கை பார்த்துள்ளீர்களா? இன்னும் என்னென்ன வித்தையை கையில் வெச்சிருக்காரோ!!

சைனி தனது தார் வாகனத்தை சகதிகள் நிறைந்த ஆஃப்-ரோடு சாலையில் ஓட்டி பார்த்ததை சமீபத்தில் நமது செய்திதளத்தில் பார்த்திருந்தோம். இந்த நிலையில் தற்போது ஹார்லி-டேவிட்சன் பைக்கின் மூலமாக மீண்டும் நவ்தீப் சைனி ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளார்.

நவ்தீப் சைனியின் ஹார்லி-டேவிட்சன் பைக்கை பார்த்துள்ளீர்களா? இன்னும் என்னென்ன வித்தையை கையில் வெச்சிருக்காரோ!!

‘பயத்தை உணர என் பைக்கில் என்னுடன் செல்லுங்கள்' என்கிற வாக்கியங்களுடன் சைனி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள வீடியோவில் அவரது ஹார்லி-டேவிட்சன் பைக்கை பார்க்கலாம். முழு கியரில் முறுக்கிவிட்டப்படி, எக்ஸாஸ்ட் குழாயில் இருந்து கிளம்பிவரும் புகை உடன் தனது ஹார்லி-டேவிட்சன் பைக்கை மிகவும் ஸ்டைலாக வீடியோவில் சைனி காட்டியுள்ளார்.

வேகமாக இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவினை இதுவரையில் மட்டுமே 3.60 லட்ச பார்வையாளர்கள் கண்டுகளித்துள்ளனர். பைக்கில் இருந்து புகையை அதிகளவில் கக்கவிடுவதால், உங்களை போன்ற பிரபலம் இவ்வாறு காற்று மாசுவுக்கு துணை போகக்கூடாது என சில ரசிகர்கள் நவ்தீப் சைனியை கேட்டு கொண்டுள்ளனர்.

நவ்தீப் சைனியின் ஹார்லி-டேவிட்சன் பைக்கை பார்த்துள்ளீர்களா? இன்னும் என்னென்ன வித்தையை கையில் வெச்சிருக்காரோ!!

பெரும்பாலும் கிரிக்கெட் வீரர்கள் கார் & பைக் ரசிகர்களே உள்ளனர். முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் மஹிந்திர சிங் தோனி இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. குறிப்பாக தோனிக்கு கார்களை காட்டிலும் ப்ரீமியம் தரத்திலான மோட்டார்சைக்கிள்கள் மீதே ஆர்வம் அதிகம்.

நவ்தீப் சைனியின் ஹார்லி-டேவிட்சன் பைக்கை பார்த்துள்ளீர்களா? இன்னும் என்னென்ன வித்தையை கையில் வெச்சிருக்காரோ!!

தோனியிடம் இல்லாத காஸ்ட்லீ மோட்டார்சைக்கிள்களை இல்லை என்று தான் சொல்ல வேண்டும். நவ்தீப் சைனியிடம் உள்ள ஹார்லி-டேவிட்சன் பைக் எந்த மாடல் என்பது சரியாக தெரியவில்லை. இந்தியாவில் ஹார்லி-டேவிட்சன் பிராண்டில் இருந்து மொத்த 12 மோட்டார்சைக்கிள்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

நவ்தீப் சைனியின் ஹார்லி-டேவிட்சன் பைக்கை பார்த்துள்ளீர்களா? இன்னும் என்னென்ன வித்தையை கையில் வெச்சிருக்காரோ!!

இவற்றின் விலைகள் ரூ.34.99 லட்சம் வரையில் உள்ளன. இந்தியாவில் தொழிற்சாலையை மூடிவிட்டதால் இவற்றை ஹீரோ மோட்டோகார்பின் உதவியுடன் ஹார்லி-டேவிட்சன் நிறுவனம் நம் நாட்டில் விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
India pacer Navdeep Saini kicks up dirt in Harley-Davidson bike.
Story first published: Monday, May 31, 2021, 16:22 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X