ரோஹித் சர்மாவின் கனவு கார் பிராண்டு எது தெரியுமா?

By Saravana

இரண்டு முறை இரட்டை சதங்களை அடித்து பெருமை சேர்த்திருக்கும் ரோஹித் சர்மாவுக்கு பாராட்டு மழை சற்று ஓய்ந்துள்ளது. இரட்டை சதம் என்ற இமாலய ரன் இலக்கத்தை இரண்டு முறை அனாயசமாக தொட்டு சாதனை படைத்திருக்கும் ரோஹித் சர்மாவுக்கு கார், பைக்குகள் மீது அலாதி பிரியம் கொண்டவர்.

குறிப்பாக, சச்சின் போன்றே ரோஹித் சர்மாவும் பிஎம்டபிள்யூ காரை தனது கனவு பிராண்டாக தெரிவிக்கிறார். சிறு வயதிலிருந்தே பிஎம்டபிள்யூ கார் படங்களை தனது அறைக்குள் ஒட்டி அழகு பார்த்ததோடு, நண்பர்களிடமும் நிச்சயம் ஒருநாள் பிஎம்டபிள்யூ கார் வாங்குவேன் என்று கூறி வந்திருக்கிறார்.

இந்தநிலையில், கிரிக்கெட்டில் புகழ்பெற்று, பொருளாதாரத்தில் நல்ல நிலைக்கு வந்தவுடன் தனது கனவான பிஎம்டபிள்யூ காரை வாங்கிவிட்டார். இன்றும் அவர் விரும்பி பயன்படுத்தும் கார் மாடல் பிஎம்டபிள்யூ எம்5 கார். இதுபற்றிய கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.


உற்பத்தி துவக்கம்

உற்பத்தி துவக்கம்

கடந்த 1972ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் காரின் பெர்ஃபார்மென்ஸ் வெர்ஷனாக எம்5 அறிமுகம் செய்யப்பட்டது. இதன் உற்பத்தி 1986ல் துவங்கியது.

அதிவேக மாடல்

அதிவேக மாடல்

அறிமுகம் செய்யப்பட்ட தருணத்தில், உலகின் அதிவேக தயாரிப்பு நிலை மாடல் என்ற பெருமை இந்த காருக்கு உண்டு. பிஎம்டபிள்யூவின் மோட்டார்ஸ்போர்ட் பிரிவு இந்த காரை தயாரிக்கிறது.

கோடீஸ்வர்களின் செல்லப்பிள்ளை

கோடீஸ்வர்களின் செல்லப்பிள்ளை

கோடீஸ்வரர்களின் எண்ணங்களையும், எதிர்பார்ப்புகளையும் கச்சிதமாக பூர்த்தி செய்யும் டிசைன், செயல்திறன் சிறப்பம்சங்களை கொண்டது.

எஞ்சின்

எஞ்சின்

பிஎம்டபிள்யூ எம்5 காரில் 4.4 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக இந்த எஞ்சின் 560 எச்பி பவரையும், 680 என்எம் டார்க்கையும் வழங்கும். 7 ஸ்பீடு டியூவல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்டது.

செயல்திறன்

செயல்திறன்

இந்த கார் 0- 100 கிமீ வேகத்தை 4.4 வினாடிகளில் எட்டிப் பிடிக்கும். அதிகபட்சமாக மணிக்கு 305 கிமீ வேகம் வரை எட்டும் வல்லமை கொண்டது.

விலை மதிப்பு

விலை மதிப்பு

ரோஹித் சர்மாவிடம் இருக்கும் பிஎம்டபிள்யூ 5 சீரஸ் காரின் மதிப்பு ரூ.1.30 கோடி என தெரிவிக்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, November 17, 2014, 16:21 [IST]
English summary
Rohit Sharma favorite car is BMW M5 in white edition. This is only one car is dream of rohit sharma. BMW M5 white edition car is wroth of RS 1.30 crore.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+