கேப்டன் ரோகித் சர்மாவின் புதிய லம்போர்கினி உருஸ் கார்!! விலை ரூ.3.10 கோடியை தாண்டுது!

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா புதியதாக லம்போர்கினி உருஸ் எஸ்யூவி காரினை வாங்கியுள்ளார். இதுகுறித்தும், ரோகித் சர்மாவின் கேரேஜில் இணைந்துள்ள இந்த லம்போர்கினி கார் குறித்தும் இனி இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

கேப்டன் ரோகித் சர்மாவின் புதிய லம்போர்கினி உருஸ் கார்!! விலை ரூ.3.10 கோடியை தாண்டுது!

விலையுயர்ந்த லக்சரி & ஸ்போர்ட்ஸ் கார்களை யாருக்குத்தான் பிடிக்காமல் இருக்கும். சொந்தமாக வாங்க முடியாவிடினும் ஒருமுறையேனும் தனக்கு பிடித்த சூப்பர் காரை ஓட்டி பார்த்துவிட வேண்டும் என்கிற ஆசை நிச்சயம் அனைவருக்குள்ளும் இருக்கும் என நினைக்கிறேன். அல்லது குறைந்தப்பட்சம் இத்தகைய கார்களில் ஒருமுறையாவது பயணம் செய்து பார்க்க வேண்டும் என சிலர் இருப்பீர்கள்.

கேப்டன் ரோகித் சர்மாவின் புதிய லம்போர்கினி உருஸ் கார்!! விலை ரூ.3.10 கோடியை தாண்டுது!

ஆனால் பிரபலங்களுக்கு இவ்வாறான எதிர்பார்ப்பு எல்லாம் பெரியதாக இருக்காது. ஏனெனில் நினைக்கும் காரை வாங்கிவிடும் அளவிற்கு அவர்களிடம் பணம் இருக்கும். அதிலிலும் கிரிக்கெட் வீரர்களை பற்றி கூறவே வேண்டாம். ஏனென்றால் பெரும்பாலான கிரிக்கெட் வீரர்கள் ஆட்டோமொபைல் வாகனங்களின்மீது மிகுந்த ஈடுப்பாட்டுடன் உள்ளனர். இதற்கு உதாரணம் எம்.எஸ் தோனி.

கேப்டன் ரோகித் சர்மாவின் புதிய லம்போர்கினி உருஸ் கார்!! விலை ரூ.3.10 கோடியை தாண்டுது!

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான மகேந்திரசிங் தோனியிடம் உள்ள ஆட்டோமொபைல் வாகனங்களுக்கான கேரேஜ் மிக பெரியது. இதனை பற்றி பல முறை நமது செய்தித்தளத்தில் பார்த்துள்ளோம். இந்த வகையில் தற்போதைய இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா தனது கேரேஜில் புதியதாக லம்போர்கினி உருஸ் கார் ஒன்றினை இணைத்து கொண்டுள்ளார்.

கேப்டன் ரோகித் சர்மாவின் புதிய லம்போர்கினி உருஸ் கார்!! விலை ரூ.3.10 கோடியை தாண்டுது!

இதுதொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள படத்தினை தான் மேலே காண்கிறீர்கள். தற்சமயம் உலகம் முழுவதும் பிரபலமான கிரிக்கெட் வீரர்களுள் ஒருவராக விளங்கும் ரோகித் சர்மா புதிய உருஸ் ஸ்போர்ட்ஸ்-எஸ்யூவி காரினை கவர்ச்சிகரமான ப்ளூ எலேயோஸ் மெட்டாலிக் பெயிண்ட்டில் வாங்கியுள்ளார். இந்த காரில் 22-இன்ச் நத் டைமண்ட்-கட் ரிம்களை கொண்ட சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

கேப்டன் ரோகித் சர்மாவின் புதிய லம்போர்கினி உருஸ் கார்!! விலை ரூ.3.10 கோடியை தாண்டுது!

ரோகித் சர்மாவின் இந்த உருஸ் காரின் உட்புற கேபின் நெரோ அடே (கருப்பு)/ ரோஸ்ஸோ அலாலா (செர்ரி சிவப்பு) என்கிற இரட்டை-நிறங்களில் பிரத்யேகமான ஸ்போர்டிவோ லெதரால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் இருந்து இந்த குறிப்பிட்ட லம்போர்கினி உருஸ் காரின் கேபினை ரோகித் சர்மா தனிப்பயனாக்கி பெற்றுள்ளார் என்பது தெரிய வருகிறது. அதாவது இவரது விருப்பத்திற்கு ஏற்ப காரின் உட்புற கேபின் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கேப்டன் ரோகித் சர்மாவின் புதிய லம்போர்கினி உருஸ் கார்!! விலை ரூ.3.10 கோடியை தாண்டுது!

உட்புறத்தில் டேஸ்போர்டு மற்றும் கதவு பேனல்களின் மேற்பகுதி கருப்பு நிறத்தில் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் டேஸ்போர்டு மற்றும் கதவு பேனல்களின் கீழ்பகுதி செர்ரி பழத்தின் சிவப்பு நிறத்தில் உள்ளது. இவற்றிற்கு மத்தியில் பளிச்சிடும் நிறத்தில் ஹைலைட்டாக சில்வர் நிறம் செல்கிறது. இந்த சில்வர் நிறத்தை காரின் உட்புறத்தில் மைய கன்சோல் பகுதியிலும் பார்க்க முடிகிறது.

கேப்டன் ரோகித் சர்மாவின் புதிய லம்போர்கினி உருஸ் கார்!! விலை ரூ.3.10 கோடியை தாண்டுது!

இவற்றுடன் டேஸ்போர்டு & மைய கன்சோல் பகுதிகளில் பியானோ கருப்பு நிற தொடுதல்களும் நம்மை வசீகரிக்கின்றன. லம்போர்கினி உருஸ், ஆடி ஆர்.எஸ்.க்யூ.8, பெண்ட்லீ பெண்டைகா மற்றும் போர்ஷே கேயேன்னே என உலகளவில் தற்சமயம் பிரபலமாக உள்ள லக்சரி எஸ்யூவி கார்கள் அனைத்தும் ஒரே ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் தான் உருவாக்கப்படுகின்றன.

கேப்டன் ரோகித் சர்மாவின் புதிய லம்போர்கினி உருஸ் கார்!! விலை ரூ.3.10 கோடியை தாண்டுது!

ஏனெனில் லம்போர்கினி, ஆடி, பெண்ட்லீ மற்றும் போர்ஷே பிராண்ட்கள் அனைத்தும் ஃபோக்ஸ்வேகன் க்ரூப்பின் கீழ்தான் செயல்படுகின்றன. லம்போர்கினி உருஸ் எஸ்யூவி காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், உலகளவில் எஸ்யூவி உடலமைப்பில் ஸ்போர்ட்ஸ் கார் பிரிவில் வெளிவந்த முதல் மாடல் உருஸ் எனலாம். இத்தகைய காரில் 4.0 லிட்டர் இரட்டை-டர்போசார்ஜ்டு வி8 பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது.

கேப்டன் ரோகித் சர்மாவின் புதிய லம்போர்கினி உருஸ் கார்!! விலை ரூ.3.10 கோடியை தாண்டுது!

அதிகப்பட்சமாக 650 பிஎஸ் மற்றும் 850 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 8-ஸ்பீடு இசட்.எஃப் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது. 0-வில் இருந்து 100kmph வேகத்தை வெறும் 3.6 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய லம்போர்கினி உருஸ் காரின் அதிகப்பட்ச வேகம் மணிக்கு 190mph ஆகும். பந்தய களத்தில் இருந்து மணல், பனிக்கட்டி, சகதி மற்றும் பாறை என எந்தவொரு பாதைக்கும் எடுத்து செல்லக்கூடிய எஸ்யூவி கார் உருஸ் என லம்போர்கினி தெரிவித்து வருகிறது.

கேப்டன் ரோகித் சர்மாவின் புதிய லம்போர்கினி உருஸ் கார்!! விலை ரூ.3.10 கோடியை தாண்டுது!

உருஸ் லக்சரி எஸ்யூவி காரின் இந்திய எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.3.10 லட்சம் என்கிற அளவில் உள்ளது. லம்போர்கினி நிறுவனம் கடந்த 2021 ஆகஸ்ட் மாதத்தில்தான் இந்தியாவில் உருஸ் மாடலின் புதிய கிராஃபைட் கேப்சூல் எடிசனை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. ஆங்காங்கே ஆரஞ்ச் நிற ஹைலைட்களுடன் முற்றிலும் கருப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டு உருஸ் கிராஃபைட் கேப்சூல் எடிசன் கார் வழங்கப்படுகிறது.

கேப்டன் ரோகித் சர்மாவின் புதிய லம்போர்கினி உருஸ் கார்!! விலை ரூ.3.10 கோடியை தாண்டுது!

இத்தகைய முரட்டுத்தனமான தோற்றத்திற்கு ஏற்ப 23-இன்ச்சில் நன்கு பெரியதாக மல்டி-ஸ்போக் அலாய் சக்கரங்கள் இந்த ஸ்பெஷல் எடிசன் காரில் பொருத்தப்படுகின்றன. ஆனால் ரோகித் சர்மா வாங்கியிருப்பது உருஸின் இந்த ஸ்பெஷல் எடிசனை அல்ல. ஸ்டாண்டர்ட் உருஸ் காரை அவர் டீலர்ஷிப் மூலமாக கஸ்டமைஸ்ட் செய்து பெற்றுள்ளார். ரோகித் சர்மாவின் லம்போர்கினி உருஸ் காரை பற்றி என்ன நினைக்கிறீர்கள் கீழே கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்.

Article Published On: Wednesday, March 2, 2022, 7:30 [IST]
English summary
Cricketer rohit sharma buys lamborghini urus suv in blu eleos metallic paint
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+