வாங்கும் கார் கூட சீனா கம்பெனி தானா? 56 வயதை தொட்ட கிரிக்கெட் வீரரின் வீட்டிற்கே கொண்டுவந்து விடப்பட்ட கார்!!

சனத் ஜெயசூர்யா (Sanath Jayasuriya), பிரபலமான இலங்கை கிரிக்கெட் வீரர். க்ளென் மெக்ராத், அனில் கும்பிளே போன்ற டாப் கிளாஸ் பவுலர்கள் விளையாடிய காலக்கட்டத்தில் அதிரடி மட்டை பந்து வீரராக வலம்வந்தவர். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தவர். பதவி காலம் முடிந்த பின் மீண்டும் கிரிக்கெட்டுக்கு வந்த ஜெயசூர்யா, தற்சமயம் இலங்கை கிரிக்கெட் ஆண்கள் அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ளார். இவரது தலைமைக்கு பிறகே உள்நாட்டு கலவரங்களினால் பாதிக்கப்பட்டு இருந்த இலங்கை கிரிக்கெட் அணி மெல்ல மெல்ல மீண்டுவர ஆரம்பித்துள்ளது. சமீபத்தில், இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை இலங்கை வென்றது சனத் ஜெயசூர்யா தலைமை ஏற்ற பின்பே ஆகும்.

இந்த அளவிற்கு செல்லும் இடங்களில் எல்லாம் தனது திறமையை காட்டிவரும் சனத் ஜெயசூர்யா கடந்த ஜூன் 30ஆம் தேதி தனது 56வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்த நிலையில், பிறந்தநாளை முன்னிட்டு வாங்கிய பிஒய்டி சீலயன் 6 (BYD Sealion 6) எலக்ட்ரிக் காரை டெலிவிரி பெற்றுள்ளார்.

cricketer sanath jayasuriya bought byd sealion 6

சனத் ஜெயசூர்யாவின் வீட்டிற்கே சென்று காரை டெலிவிரி செய்துள்ளதை பிஒய்டி இலங்கை நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் படங்களுடன் தெரிவித்துள்ளனர். சனத் ஜெயசூர்யா வாங்கியிருக்கும் காரின் சிறப்பம்சம் என்னவென்றால், இவர் வாங்கியிருப்பது இலங்கையின் முதல் பிளக்-இன் ஹைப்ரீட் (Plug-in Hybrid) கார் ஆகும்.

சீனாவை சேர்ந்த பிஒய்டி நிறுவனம் இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களை மட்டுமே விற்பனை செய்து வருகிறது. ஆனால் இலங்கையில் சீலயன் 6 என்கிற பிளக்-இன் ஹைப்ரீட் காரையும் விற்பனை செய்கிறது. இலங்கையில், சுப்பீரியர் (Superior) மற்றும் பிரீமியம் (Premium) என இரு விதமான வேரியண்ட்களில் சீலயன் 6 ஹைப்ரீட் கார் விற்பனை செய்யப்படுகிறது.

cricketer sanath jayasuriya bought byd sealion 6

சீலயன் 6 காரின் இந்த வேரியண்ட்களின் விலைகள் இலங்கையில் 2.17 கோடி ஸ்ரீலங்கன் ரூபாய் மற்றும் 2.53 கோடி ஸ்ரீலங்கன் ரூபாய் ஆக உள்ளன. இந்திய ரூபாயாக இவற்றை மாற்றினால் தற்போதைய நிலவரப்படி ரூ.61.83 லட்சம் மற்றும் ரூ.72.1 லட்சம் ஆகும். இந்த இரு வேரியண்ட்களில் எந்த வேரியண்ட்டை கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யா வாங்கியுள்ளார் என்பது தெரியவில்லை.

இலங்கையில் விற்பனை செய்யப்படும் பிஒய்டி சீலயன் 6 ஹைப்ரீட் காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் இணைக்கப்படுகிறது. இந்த எலக்ட்ரிக் மோட்டாரில் 18.3kWh திறன் கொண்ட பேட்டரி பேக் பொருத்தப்படுகிறது. 60 லிட்டர்கள் கொள்ளளவில் பெட்ரோல் டேங்கை கொண்ட இந்த காரின் டேங்கை முழுவதுமாக நிரப்பிக் கொண்டு, பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பிக் கொண்டு அதிகப்பட்சமாக சுமார் 1,092கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம்.

சீலயன் 6 காரின் பிரீமியம் வேரியண்ட்டில் அதிகப்பட்சமாக 238 எச்பி மற்றும் 550 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை பெறலாம். இந்த காரின் நீளம் 4,775மிமீ, அகலம் 1,890மிமீ மற்றும் உயரம் 1,670மிமீ ஆகும். காரின் முன் மற்றும் பின் சக்கரங்களுக்கு இடையேயான தொலைவு 2,765மிமீ ஆக உள்ளது.

மஹிந்திரா எக்ஸ்இவி 9இ (Mahindra XEV 9e) எலக்ட்ரிக் காரில் வழங்கப்படுவதை போன்று 19 இன்ச்சில் நன்கு பெரிய அளவிலான அலாய் சக்கரங்கள் வழங்கப்படுகின்றன. சீலயன் 6 காரினுள் டேஸ்போர்டில் 15.6 இன்ச்சில் சுழற்றக்கூடிய செண்ட்ரல் டச் ஸ்க்ரீன், ஹெட்-அப் டிஸ்பிளே, ஒசனிக் கிரிஸ்டல் கியர் லிவர், 13-இன்ச் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் தன்னை எலக்ட்ரிக் கார் நிறுவனமாகவே அறிமுகப்படுத்திக் கொண்ட பிஒய்டி நிறுவனம் வரும் ஆண்டுகளில் சீலயன் 6 பிளக்-இன் ஹைப்ரீட் காரையும் அறிமுகம் செய்யலாம். இருப்பினும், இலங்கையில் விற்பனை செய்யப்படுவதற்கு இணையான விலையில் இந்தியாவில் இந்த ஹைப்ரீட் கார் அறிமுகம் செய்யப்படுவதற்கு வாய்ப்பில்லை. இதில் இருந்து இலங்கையை காட்டிலும் இந்தியா எந்த அளவிற்கு பொருளாதாரத்தில் முன்னேறியுள்ளது என்பதை அறியலாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, July 2, 2025, 20:02 [IST]
English summary
Cricketer sanath jayasuriya bought byd sealion 6 plug in hybrid car for his birthday
மேலும்... #car delivery #sri lanka
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+