மாஸாக எண்ட்ரீ கொடுத்த கிரிக்கெட் வீரருக்கு குவியும் லைக்குகள்!! 2.5 கோடி ரூபாய் காரில் தரிசனம்!
ஷ்ரேயஸ் அய்யர் (Shreyas Iyer), பிரபல இந்திய கிரிக்கெட் வீரர். இந்திய அணியின் கிரிக்கெட் நம்பிக்கை நட்சத்திரங்களுள் ஒருவராக விளங்கும் ஷ்ரேயஸ் அய்யர் தனது விலையுயர்ந்த மெர்சிடிஸ் ஏஎம்ஜி காரில் மும்பையில் ஒரு நிகழ்ச்சிக்கு வந்துள்ளார். இந்தியாவில் மிகவும் விலையுயர்ந்த மெர்சிடிஸ் கார்களுள் ஒன்றாக விளங்கும் அதில், ஷ்ரேயஸ் அய்யர் செல்லும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. அதனை பற்றியும், ஷ்ரேயஸ் அய்யரிடம் உள்ள அந்த விலையுயர்ந்த காரை பற்றியும் இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
கிரிக்கெட் வீரர்களும் சரி, சினிமா நட்சத்திரங்களும் சரி அவ்வப்போது சொகுசு கார் மற்றும் காஸ்ட்லீயான பைக்குகளை வாங்குவதை பலமுறை பார்த்துள்ளோம். இந்த விஐபி-கள் பெரும்பாலும் வாங்குவது மெர்சிடிஸ் கார்களாக உள்ளன. இதன் காரணமாகவே, இந்தியாவில் சொகுசு கார்களை விற்பனை செய்வதில் பிஎம்டபிள்யூ, ஆடி உள்ளிட்டவை அனைத்தையும் முந்திக் கொண்டு மெர்சிடிஸ் நிறுவனம் முன்னிலையில் உள்ளது.

மாருதி சுஸுகி கார்களை போல், மெர்சிடிஸ் கார்களும் 20க்கும் அதிகமான மாடல்கள் தற்சமயம் இந்திய சந்தையில் விற்பனையில் உள்ளன. பென்ஸ், மேபக், ஏஎம்ஜி என 3 விதமாக மெர்சிடிஸ் கார்கள் இந்தியா உள்பட உலகளவில் விற்பனை செய்யப்படுகின்றன. இதில், பென்ஸ் பிரிவில் மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி-கிளாஸ் உள்ளது. இதன் ஏஎம்ஜி வெர்சன் மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜி63 ஆகும்.
இந்தியாவில் தற்சமயம் இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2.55 கோடியாக உள்ளது. ஆன்-ரோடு விலை ரூ.3 கோடியை தாண்டி வரும். இத்தகைய விலையுயர்ந்த காரை தான் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஷ்ரேயஸ் அய்யர் வைத்துள்ளார். 2021ஆம் ஆண்டில் நியூசிலாந்துக்கு எதிரான தனது முதல் போட்டியில் அரை சதம் அடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த கிரிக்கெட் வீரர் ஷ்ரேயஸ் அய்யர் ஐபிஎல்-இல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
இந்த நிலையில், மும்பையில் ஜூஹு என்கிற பகுதியில் ஷ்ரேயஸ் அய்யர் தனது மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜி63 காரில் வந்துள்ளார். இதுதொடர்பாக யூடியூப்பில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், நிகழ்ச்சி முடிந்த பின் காருக்குள் ஏற வரும் ஷ்ரேயஸ் அய்யரை ரசிகர்கள் சூழ்ந்துக் கொண்டு போட்டோக்கள் எடுத்துக் கொள்வதை காணலாம். அவர்களிடம் இருந்து எப்படியோ வெளியே வந்த ஷ்ரேயஸ் அய்யர் பின்னர் தனது ஏஎம்ஜி ஜி63 காரில் புறப்பட்டு சென்றுள்ளார்.
ஷ்ரேயஸ் அய்யர் காரை ஓட்டவில்லை; அவர் முன் இருக்கையில் அமர்ந்தார். இந்த எஸ்யூவி வாகனத்தை 2022ஆம் ஆண்டில் ஷ்ரேயஸ் அய்யர் வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. பிராபஸ் கிட் உடன் மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜி63 காரை ஷ்ரேயஸ் அய்யர் வைத்துள்ளார். இந்த மெர்சிடிஸ் காரில் 4.0 லிட்டர் ட்வின-டர்போ வி8 பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது.

அதிகப்பட்சமாக 585 எச்பி மற்றும் 850 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ஏஎம்ஜி ஸ்பீடுஷிஃப்ட் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. இது, மெர்சிடிஸின் 4மேட்டிக் டெக்னாலஜி மூலமாக என்ஜினின் இயக்க ஆற்றலை காரின் 4 சக்கரங்களுக்கும் வழங்குகிறது. 0-இல் இருந்து 100kmph வேகத்தை வெறும் 4.5 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய இந்த காரின் டாப்-ஸ்பீடு மணிக்கு 220kmph ஆகும்.
கிரிக்கெட் வீரர் ஷ்ரேயஸ் அய்யரிடம் ஆடி எஸ்5 மற்றும் லம்போர்கினி ஹூராகென் கார்கள் உள்ளன. இதில், ஹூராகென் ஆனது உலகளவில் பிரபலமான ஸ்போர்ட்ஸ் காராக விளங்குகிறது. இதில் இருந்து ஷ்ரேயஸ் அய்யர் உலக தரம் வாய்ந்த ஸ்போர்ட்ஸ் கார்களை விரும்பக்கூடியவர் என்பதை அறிய முடிகிறது. ஆடி எஸ்5 ஆனது எந்தவொரு கார் டிரைவரும் ஓட்ட மிகவும் விரும்பக்கூடிய கார் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தனக்கு பிடித்த விலையுயர்ந்த கார்களை வாங்கி குவிப்பதை மிகவும் விரும்பக்கூடிய கிரிக்கெட் வீரர்களுள் ஷ்ரேயஸ் அய்யரும் ஒருவர் ஆவார். ஏனெனில், இதற்கு முன் சிலமுறை ஷ்ரேயஸ் அய்யர் புதியதாக கார் வாங்குவதை பார்த்துள்ளோம். ஏஎம்ஜி ஜி63 காரில் மும்பை நிகழ்ச்சிக்கு வந்திருப்பதன் மூலம் ஷ்ரேயஸ் அய்யருக்கு பிடித்த கார்களுள் இதுவும் ஒன்று என்பதை அறிய முடிகிறது.


Click it and Unblock the Notifications








