கார் டயர் வெடித்தாலும் பெரும் விபத்திலிருந்து சுரேஷ் ரெய்னா தப்பியது எப்படி?

Written By:

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா துலிப் கோப்பை கிரிக்கெட் போட்டியில் புளூ அணியின் கேப்டனாக இருக்கிறார். இந்த நிலையில், கான்பூரில் உள்ள க்ரீன் பார்க் ஸ்டேடியத்தில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ள திட்டமிட்டார்.

கார் டயர் வெடித்தாலும் பெரும் விபத்திலிருந்து சுரேஷ் ரெய்னா தப்பியது எப்படி?

இதற்காக, காஸியாபாத் நகரிலிருந்து கான்பூருக்கு ரேஞ்ச்ரோவர் சொகுசு எஸ்யூவி காரில் சுரேஷ் ரெய்னா நேற்று முன்தினம் இரவு பயணித்தார். நள்ளிரவு 2 மணி அளவில் எட்டாவா நகரில் உள்ள ஃப்ரண்ட்ஸ் காலனி பகுதியில் கார் சென்று கொண்டிருந்தது.

கார் டயர் வெடித்தாலும் பெரும் விபத்திலிருந்து சுரேஷ் ரெய்னா தப்பியது எப்படி?

அப்போது எதிர்பாராதவிதமாக காரின் பின்புற டயர்களில் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்தது. ஆனால், கார் லாவகமாக நிறுத்தப்பட்டதால், விபத்தில் இருந்து சுரேஷ் ரெய்னா அதிர்ஷ்டவமாக தப்பினார்.

கார் டயர் வெடித்தாலும் பெரும் விபத்திலிருந்து சுரேஷ் ரெய்னா தப்பியது எப்படி?

அந்த ரேஞ்ச்ரோவர் காரில் ஸ்பேர் வீல் இல்லாததால், நடுவழியில் சுரேஷ் ரெய்னா நீண்ட நேரம் உதவி கிடைக்காமல் நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்தவர்கள் உதவியுடன் அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

Recommended Video - Watch Now!
Tata Nexon Review: Specs
கார் டயர் வெடித்தாலும் பெரும் விபத்திலிருந்து சுரேஷ் ரெய்னா தப்பியது எப்படி?

தகவல் அறிந்து வந்த போலீசார் ரெய்னாவுக்கு மாற்று கார் ஏற்பாடு செய்து கொடுத்து அனுப்பி வைத்தனர். கார் டயர் வெடித்தது சாதாரணமான விஷயமாக இருந்தாலும், சுரேஷ் ரெய்னாவின் கார் சீரான வேகத்தில் சென்றதாலேயே அவர் உயிர் தப்பி இருக்கிறார்.

கார் டயர் வெடித்தாலும் பெரும் விபத்திலிருந்து சுரேஷ் ரெய்னா தப்பியது எப்படி?

அவரது கார் அதிவேகத்தில் சென்றிருந்தால், நிச்சயம் பெரிய அளவிலான விபத்தில் சிக்கி இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர். நிதானமான வேகமே அவரது உயிரை காப்பாற்றி இருக்கிறது என்றும் குறிப்பிட்டனர்.

கார் டயர் வெடித்தாலும் பெரும் விபத்திலிருந்து சுரேஷ் ரெய்னா தப்பியது எப்படி?

இந்த சம்பவத்தின் மூலமாக அதிவேகம் என்பது உயிரை கொல்லும் காரணியாக கூற முடியும். சீரான வேகம் இதுபோன்ற இக்கட்டான தருணங்களில் இருந்து உயிரை காப்பாற்ற உதவும்.

கார் டயர் வெடித்தாலும் பெரும் விபத்திலிருந்து சுரேஷ் ரெய்னா தப்பியது எப்படி?

கடந்த சில நாட்களுக்கு முன் பெங்களூர் சர்வதேச விமான நிலையத்திற்கு செல்லும் எக்ஸ்பிரஸ் சாலையில் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ காரும் டயர் வெடித்து பயங்கர விபத்தில் சிக்கியது. டயர் வெடித்த வேகத்தில் கார் கட்டுப்பாட்டை இழந்ததால், பின்னால் வந்த வாகனங்களும் மோதி பெரும் விபத்தாக மாறியது. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்ததோடு, பலர் காயமடைந்தனர்.

கார் டயர் வெடித்தாலும் பெரும் விபத்திலிருந்து சுரேஷ் ரெய்னா தப்பியது எப்படி?

எனவே, கார் ஓட்டும்போது ரெய்னா போன்று நிதான வேகத்தை கடைபிடித்தால், இதுபோன்று உயிர் பிழைக்க வாய்ப்பு இருக்கிறது என்பதை மனதில் வைப்பது அவசியம்.

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Cricketer Suresh Raina Escapes Major Car Accident in Uttarpradesh.

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark