காரே மினி தியேட்டர் அளவுக்கு இருக்கு... மனைவி உடன் காஸ்ட்லீயான டொயோட்டா காரில் வந்து இறங்கியது இவரா?
சூர்யகுமார் யாதவ் (Suryakumar Yadav), இந்த பெயருக்கு அறிமுகமே தேவை இருக்காது என நினைக்கிறேன். ஏனெனில், அந்த அளவிற்கு பிரபலமான இந்திய கிரிக்கெட் வீரர் (Indian Cricket Player) சூர்யகுமார் யாதவ் ஆவார். குறிப்பாக, சமீப காலமாக டி20 கிரிக்கெட் போட்டிகளிலும், ஐபிஎல் (IPL) கிரிக்கெட் தொடரிலும் தனது தனித்துவமான பேட்டிங் ஸ்டைல் (Batting Style) மூலமாக சூர்யகுமார் யாதவ் ஜொலித்து வருகிறார்.
விரைவில் நடைபெற்றவுள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய ஆண்கள் கிர்க்கெட் அணியின் கேப்டனாக விளையாடவுள்ள சூர்யகுமார் யாதவ், அதற்கு முன்னதாக தற்போது மும்பை (Mumbai) விமான நிலையத்தில் காட்சி தந்துள்ளார். விவிஐபி (VVIP)-கள் பயன்படுத்துவதற்கான மும்பை தனி விமான நிலையத்தில் மனைவி உடன் கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ் காட்சி தந்துள்ளார்.

இது தொர்டர்பான விபரங்கள் 'இன்ஸ்டண்ட் பாலிவுட்' (Instantbollywood) என்கிற இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், மனைவி உடன் டொயோட்டா வெல்ஃபையர் (Toyota Vellfire) என்கிற விலையுயர்ந்த காரில் கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ் வந்து இறங்கினார்.
விலையுயர்ந்த கார் என்பது மட்டுமின்றி, வெல்ஃபையர் ஆனது அதன் விலைக்கு ஏற்ப பிரம்மாண்டமானது ஆகும். எந்த அளவிற்கு பிரம்மாண்டமானது என்றால், காருக்கு உள்ளே 2வது வரிசையில் அதிக லெக்ரூம் மற்றும் ஹெட்ரூம் வசதிகள் உடன் இருக்கை செட்-அப் வழங்கப்படுகிறது. அப்படியிருந்தும் அவற்றிற்கு பின்னாலும் இருக்கைகள் வழங்கப்படுகின்றன.

அதிக லெக்ரூம் மற்றும் ஹெட்ரூம் இடவசதிகள் உடன், மசாஜ் உள்ளிட்ட வசதிகளும் இந்த காரில் 2வது வரிசை இருக்கைகளில் வழங்கப்படுவதால், அவை 'கேப்டன் இருக்கைகள்' (Captain Seats) என அழைக்கப்படுகின்றன. இத்தகைய இருக்கை அமைப்பிற்காகவே விவிஐபிகள் பல பேர் டொயோட்டா வெல்ஃபையர் காரை விரும்பி பயன்படுத்துகின்றனர்; மேலும் அவ்வப்போது வெல்ஃபையர் கார்களை வாங்குகின்றனர்.
அந்த வகையில்தான், கிரிக்கெட் சூர்யகுமார் யாதவ் அவர்களும் இந்த விலையுயர்ந்த டொயோட்டா காரை முற்றிலும் கருப்பு நிறத்தில் வாங்கி பயன்படுத்தி வருகிறார். கார் முழுவதும் கருப்பு நிறத்தில் இருந்தாலும், காரை சுற்றிலும் ஆங்காங்கே க்ரோம் ஹைலைட்கள் (Chrome Highlights) இருப்பதை படங்களில் காணலாம்.

இந்த கருப்பு நிற கலர் ஆப்ஷன் மட்டுமின்றி, பிளாட்டினம் வெள்ளை பேர்ல் மற்றும் பிரீசியஸ் மெட்டல் என்கிற கலர் ஆப்ஷன்களிலும் டொயோட்டா வெல்ஃபையர் கார் விற்பனை செய்யப்படுகிறது. வெல்ஃபையர் காரின் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், அதன் தாழ்வான ஜன்னல் கண்ணாடி செட்-அப் ஆகும். இதனால், காருக்குள் இருந்து வெளியே விசாலமாக பார்க்க முடிகிறது. விவிஐபிகளை இந்த கார் கவர்ந்ததற்கு இதுவும் ஒரு காரணம் ஆகும்.
வெல்ஃபையர் காரில் அதன் பெரிய அளவிலான தோற்றத்திற்கு ஏற்ப 19 இன்ச்சில் அலாய் சக்கரங்கள் பொருத்தப்படுகின்றன. முன்பு விற்பனையில் இருந்த வெல்ஃபையர் கார் உடன் ஒப்பிடுகையில், தற்சமயம் விற்பனையில் இருக்கும் வெல்ஃபையர் கார் ரீடிசைனிலான எல்இடி டெயில்லேம்ப்கள் மற்றும் அவற்றை ஒன்றோடு ஒன்று இணைக்கக்கூடிய எல்இடி லைட் பாரை கொண்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே கூறியதுபோல், இந்தியாவில் விவிஐபி-களின் பிரதானமாக தேர்வாக வெல்ஃபையர் கார் உள்ளது. கிரிக்கெட் வீரர்களில் சூர்யகுமார் யாதவ் மட்டுமின்றி, ஹர்த்திக் பாண்டியாவிடமும் பளிச்சிடும் வெள்ளை நிறத்தில் வெல்ஃபையர் கார் உள்ளது. அதில் ஹர்த்திக் பாண்டியா சிலமுறை பொது வெளியில் காட்சி தந்துள்ளார் என்றாலும், சூர்யகுமார் யாதவ் தனது டொயோட்டா வெல்ஃபையர் காரில் காட்சி தருவது இதுவே முதல்முறை ஆகும்.


Click it and Unblock the Notifications









