இவ்ளோ பெரிய பொறுப்பை தூக்கி கொடுத்திருக்காங்களா!.. திலக் வர்மா இதை கொஞ்சம் கூட எதிர்பார்த்திருக்க மாட்டாரே!

மின்சார இரண்டு சக்கர வாகனங்களைச் சார்ந்து இயங்கி வரும் நிறுவனமான இ-பைக்-கோ (eBikeGo), அதன் பிராண்டு அம்பாசிடராக பிரபல கிரிக்கெட் விளையாட்டு வீரர் திலக் வர்மா-வை நியமித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நிறுவனம் தொடங்கி 6 ஆண்டுகள் ஆகிவிட்டதைக் கொண்டாடும் விதமாக சமீபத்தில் ஓர் நிகழ்ச்சியை இ-பைக்-கோ நடத்தியது. அந்த நிகழ்ச்சியேலேயே கிரிக்கெட் வீரர் திலக் வர்மாவை தனது புதிய பிராண்ட் தூதராக அது அறிவித்தது. இ-பைக்-கோ அதன் பிராண்டு அம்பாசிடராக திலக் வர்மாவை தேர்வு செய்திருப்பது அவரின் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் வகையில் அமைந்திருக்கின்றது.

எனவே இனி வரும் நாட்களில் பிராண்டை விளம்பரப்படுத்துவது தொடங்கி பல்வேறு முக்கிய பணிகளில் திலக் வர்மாவின் தலையீடு மிகப் பெரிய அளவில் அந்நிறுவனத்தில் இருக்கும். திலக் வர்மா-வை பிராண்டு தூதராக நியமித்தது குறித்து இ-பைக்-கோ நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சிஇஓ-ஆன இர்பான் கான் கூறியதாவது, "கிரிக்கெட் உலகில் குறிப்பிடத்தக்க திறமையான திலக் வர்மா, எங்கள் நிறுவனத்தின் முகமாக எங்களுடன் இணைந்ததில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம்" என்று தன்னுடைய உற்சாகத்தை வெளிப்படுத்தினார்.

Tilak varma joins ebikego as brand ambassador

திலக் வர்மா, உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் மிகுந்த நிலைத்தன்மைக்காக அறியப்படுகிறார். இவர் இந்த பிராண்டுடன் இணைந்திருப்பதால், அவருடைய ரசிகர்கள் தரப்பில் இருந்து இ-பைக்-கோ-விற்கு கணிசமான அளவு வரவேற்புக் கிடைக்கும் என நம்பப்படுகின்றது. இ-பைக்-கோ மின்சார இரண்டு சக்கர வாகன உற்பத்தி மற்றும் மின்சார வாகனங்களை வாடகைக்கு விடும் பணி ஆகியவற்றை மேற்கொண்டு வருகின்றது.

இந்த பணிகளுக்கு வலுசேர்க்கும் நோக்கிலேயே கிரிக்கெட் வீரரை தன்னுடன் இணைத்திருக்கின்றது. இந்த நிறுவனம் சமீபத்திலேயே முவி 125 5ஜி (Muvi 125 5G) எனும் புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை நாட்டில் வெளியீடு செய்தது. பெங்களூருவில் உள்ள 'ஆர்ட் ஆஃப் லிவிங் இன்டர்நேஷனல் சென்டர்' (Art of Living International Center)-இல் வைத்தே இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அது வெளியீடு செய்தது.

இந்த ஸ்கூட்டரில் சக்திவாய்ந்த 5 kWh பேட்டரி பயன்படுத்தப்பட்டு இருப்பதாக இ-பைக்-கோ தெரிவித்து உள்ளது. இதை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 100 கிமீட்டருக்கும் அதிகமான ரேஞ்ஜை பெற்றுக் கொள்ள முடியுமாம். தொடர்ந்து, முவி 125 5ஜி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஸ்மார்ட் எல்இடி டிஜிட்டல் டிஸ்ப்ளே, மொபைல் ஆப் இணைப்பு வசதியுடன் வழங்கப்பட்டு இருப்பதாகவும் நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது.

இதுபோன்று இன்னும் பல்வேறு சிறப்பம்சங்களை இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வாரி வழங்கி இருப்பதாக இ-பைக்-கோ தெரிவித்து இருக்கின்றது. ஆனால், அதுபற்றிய அனைத்து முக்கிய விபரங்களையும் வெளியிடவில்லை. மேலும், இது எப்போது விற்பனைக்குக் கொண்டு வரப்படும் என்கிற விபரத்தையும் அது துள்ளியமாக அறிவிக்கவில்லை.

இப்போது சந்தையில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பதால் சீக்கிரமே முவி 125 5ஜி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்குக் கொண்டு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது விற்பனைக்கு வரும் எனில் வழக்கமான மின்சார இரண்டு சக்கர வாகனங்களுக்கு மட்டுமின்றி, பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கும் போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: முவி 125 5ஜி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இ-பைக்-கோ நிறுழனம் எப்போது விற்பனைக்குக் கொண்டு வரும் என்கிற விபரங்கள் வெளியாகவில்லை. இருப்பினும், இதன் வருகையை எதிர்நோக்கி இப்போதே இந்தியர்கள் காத்திருக்க தொடங்கிவிட்டனர். இது விற்பனைக்கு வரும் எனில் ஓலா எலெக்ட்ரிக், ஏத்தர் எனெர்ஜி, ஹீரோ எலெக்ட்ரிக் மற்றும் பஜாஜ் மற்றும் டிவிஎஸ் ஆகிய நிறுவனங்களின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கும் மிகப் பெரிய போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, July 3, 2024, 5:00 [IST]
English summary
Cricketer tilak varma joins ebikego as brand ambassador
மேலும்... #electric vehicles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+