விராட் கோலி திடீரென இந்த நிலைமைக்கு வருவார் என எதிர்பார்க்கல!! ஆசை, ஆசையாய் வாங்கிய கார்!
விராட் கோலி (Virat Kohli), இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் வீரர் என்பது ஊரறிந்த விஷயம். பொதுவாகவே கிரிக்கெட் வீரர்கள் சொகுசு கார்களை வாங்குவதை மிகவும் விரும்பக்கூடியவர்களாக இருப்பர். விராட் கோலி இந்த விஷயத்தில் ஒருபடி மேல் என்றுதான் சொல்ல வேண்டும். அதேநேரம், பழைய கார்களை அவ்வப்போது விற்பனை செய்துவிடும் பழக்கமும் விராட் கோலியிடம் உள்ளது. அந்த வகையில், விராட் கோலி தனது விலையுயர்ந்த ஆடி காரை விற்பனை செய்ய உள்ளார். இதுகுறித்தும், விராட் கோலியின் ஆடி க்யூ8 காரை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
100 வருடங்களுக்கும் மேற்பட்ட கிரிக்கெட் வரலாற்றில் உலகளவில் சிறந்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி எனலாம். மாடர்ன்-டே உலகின் பிராட்மேன் என கூறும் அளவிற்கு கடந்த 15 வருடங்களாக இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விராட் கோலி விளங்கி வருகிறார். அதேநேரம், விலையுயர்ந்த கார் & பைக்குகளிலும் ஆர்வமிக்கவர் விராட் கோலி ஆவார்.

குறிப்பாக, சொகுசு கார்களில் விராட் கோலிக்கு ஈடுப்பாடு அதிகம். இதன் காரணமாகவே, ஆடி இந்தியா நிறுவனத்தின் பிராண்ட் தூதராக விராட் கோலி நியமிக்கப்பட்டார். இதனால், கடந்த காலங்களில் ஆடி க்யூ7, ஆர்.எஸ்5, ஆர்.எஸ்6, ஏ8 எல், ஆர்8 வி10 எல்.எம்.எக்ஸ் என பல்வேறு ஆடி கார்களை விராட் கோலி வாங்கியுள்ளார். அந்த வரிசையில் 2020ஆம் ஆண்டில் இவர் வாங்கிய ஆடி கார் தான் க்யூ8 எஸ்யூவி ஆகும்.
அறிமுகமான சமயத்தில் இந்த ஆடி காரை இந்தியாவில் வாங்கிய முதல் கஸ்டமர் விராட் கோலி ஆவார். இந்த காரில் சிலமுறை விராட் கோலி பொது வெளியில் காட்சி தந்துள்ளார். இந்த நிலையில், தனது ஆடி க்யூ8 காரை விற்கும் முடிவிற்கு விராட் கோலி வந்துள்ளார். அதன்படி, 3ஆம் தரப்பினர் மூலமாக விராட் கோலி தனது ஆடி க்யூ8 காரை விற்கவுள்ளார்.

இதுகுறித்து யூடியூப்பில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், விராட் கோலியின் க்யூ8 கார் குறித்த விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதாவது, இந்த காரின் பெயிண்ட்டிற்காக மட்டும் ரூ.12 லட்சம் செலவழிக்கப்பட்டு உள்ளது. ஒட்டுமொத்தமாக கிட்டத்தட்ட 16 ஆயிரம் கிமீ தொலைவிற்கு ஓடியுள்ள இந்த காருக்கு ரூ.88 லட்சத்தை விலையாக நிர்ணயித்துள்ளனர். இது தற்காலிகமான விலையே.
அதாவது, காரை வாங்க கஸ்டமர் ஆட்சேபனை தெரிவித்தால் விலை குறைத்துக் கொள்ளப்படும். விராட் கோலி வாங்கிய சமயத்தில் ரூ.1.33 கோடி விலையில் ஆடி க்யூ8 கார் விற்பனை செய்யப்பட்டு கொண்டிருந்தது. இந்த டீலிங்கிற்காக காரை விற்றுக் கொடுக்கும் நிறுவனத்திடம் விராட் கோலி தனது தொடர்பு எண்ணை வழங்கியுள்ளார்.
இதனால், காரை வாங்க விருப்பப்படுவோரிடம் விராட் கோலி சார்பில் யாரேனும் பேசுவார்கள். காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இது ஆடி நிறுவனத்தின் மாடர்ன் எஸ்யூவி கார் ஆகும். தோற்றத்தை பொறுத்தவரையில், காருக்கு முன்பக்கத்தில் எச்டி மேட்ரிக்ஸ் எல்இடி டெக்னாலஜி உடன் எல்இடி ஹெட்லைட்கள் பொருத்தப்படுகின்றன.
இந்த காரில் 3.0 லிட்டர் வி6 டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 335 பிஎச்பி மற்றும் 500 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. இது என்ஜினின் இயக்க ஆற்றலை காரின் அனைத்து சக்கரங்களுக்கும் வழங்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இத்தகைய ஆடி காரை கிரிக்கெட் வீரர் விராட் கோலி எதற்காக விற்கவுள்ளார் என்பது தெரியவில்லை. ஒருவேளை, புதிய காரை வாங்குவதற்காக இந்த காரை விற்கும் மனநிலைக்கு அவர் வந்திருக்கலாம். அல்லது பராமரிக்க நேரம் இல்லாததால் காரை விராட் கோலி விற்கலாம்.


Click it and Unblock the Notifications








