எவ்வளவு பெரிய மனுஷன்... புது காரை வாங்கியதும் குழந்தை போல துள்ளி குதிக்கிறாரு!!

சினிமா பிரபலங்களுக்கு அடுத்து, அதிக எண்ணிக்கையில் சொகுசு கார்களை வாங்கி குவிப்பது என்று பார்த்தால், கிரிக்கெட் பிரபலங்கள் தான். ஏனெனில், நம் நாட்டில் சினிமாவுக்கு இணையாக மக்கள் விரும்பி பார்ப்பது கிரிக்கெட்டை தான். இதனால்தான், ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்/ வீராங்கனைகள் கூட புது, புது விலையுயர்ந்த கார்களை அவ்வப்போது வாங்குவதை நம் நாட்டில் பார்க்க முடிகிறது. இந்த வகையில், இந்திய கிரிக்கெட் வீரர் விரித்திமான் சஹா புதியதாக லக்சரியான பிஎம்டபிள்யூ காரை வாங்கியுள்ளார். சஹா வாங்கியிருப்பது எந்த மாதிரியான பிஎம்டபிள்யூ கார் என்பதையும், அதன் விலை உள்பட சிறப்பம்சங்களை பற்றியும் இனி பார்க்கலாம்.

ஒரு காலத்தில் தோனிக்கு அடுத்து இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பராக பார்க்கப்பட்டவர் விருத்திமான் சஹா. அதற்கேற்ப சில வருடங்கள் இந்திய அணியின் தவிர்க்க முடியாத விக்கெட் கீப்பராக வலம் வந்தார். ஆனால், அதன்பின் காலங்கள் ஓட, ஓட இளம் விக்கெட் கீப்பர்கள் வர துவங்கினர். விருத்திமான் சஹாவின் தேவை சர்வதேச அணியில் இருந்து படிப்படியாக குறைய துவங்கியது.

wriddhiman saha buys bmw x7

இருப்பினும், அதற்குள்ளாக 40 டெஸ்ட்கள் மற்றும் 9 ஒருநாள் போட்டிகளில் விருத்திமான் சஹா ஆடிவிட்டார். இந்திய பிரீமியர் லீக்கில் இப்போதும் குஜராத் டைட்டான்ஸ் அணிக்காக தொடர்ந்து ஆடிக் கொண்டிருக்கிறார். 39 வயதாகும் விருத்திமான் சஹா தற்போது புதியதாக விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ காரை வாங்கியுள்ளார். சஹா வாங்கியிருப்பது பிஎம்டபிள்யூ எக்ஸ்7 என்கிற லக்சரி எஸ்யூவி கார் ஆகும்.

புதியதாக பிஎம்டபிள்யூ எக்ஸ்7 காரை வாங்கியிருப்பதை தனது எக்ஸ் தள பக்கத்தில் விருத்திமான் சஹா படத்துடன் பதிவிட்டுள்ளார். இந்த படத்தில், ஷோரூம் ஒன்றில் கருப்பு நிறத்திலான பிஎம்டபிள்யூ எக்ஸ்7 காருடன் விருத்திமான் சஹா நிற்பதை காணலாம். இதுகுறித்த அவரது எக்ஸ் பதிவில், "12 வயது சிறுவனாக கனவு கண்டதில் இருந்து, எனது தொழில் நிறைவடையும் தருவாயில் தற்போது அதனை நினைவாக்கும் வரையில்...

இந்த பிஎம்டபிள்யூ காரை வீட்டிற்கு கொண்டு செல்வது என்பது காத்திருப்பவர்களுக்கு நல்லவை கிடைக்கும் என்பதற்கு சான்றாகும். எனக்கும் என் குடும்பத்தாருக்கும் உணர்ச்சிக்கரமான தருணம்" என குறிப்பிடப்பட்டு உள்ளது. விருத்திமான் சஹாவின் புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்7 காரில் மேற்கு வங்காள மாநிலத்தின் நம்பர் பிளேட் இருப்பதை காணலாம். ஏற்கனவே கூறியதுபோல், இந்த பிஎம்டபிள்யூ காரை கருப்பு நிறத்தில் விருத்திமான் சஹா வாங்கியுள்ளார்.

இந்த கருப்பு நிறத்தை சாப்பையர் பிளாக் என பிஎம்டபிள்யூ நிறுவனம் அழைக்கிறது. இந்த பிஎம்டபிள்யூ காரின் உட்பக்கத்தை டார்டுஃபோ அல்லது ஐவாரி வெள்ளை அல்லது கருப்பு நிறத்தில் அலங்கரித்து பெறலாம். எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள படத்தை வைத்து பார்க்கும்போது, வெளிப்பக்கத்தை போல் காரின் உட்பக்கத்தையும் கருப்பு நிறத்தில் விருத்திமான் சஹா தேர்வு செய்து வாங்கி உள்ளார்.

இந்தியாவில் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் விலையுயர்ந்த எஸ்யூவி கார் எக்ஸ்7 ஆகும். எக்ஸ் டிரைவ்40ஐ எம் ஸ்போர்ட், எக்ஸ் டிரைவ்40டி டிசைன் ப்யூர் மற்றும் எக்ஸ் டிரைவ்40டி எம் ஸ்போர்ட் என 3 விதமான வேரியண்ட்களில் பிஎம்டபிள்யூ எக்ஸ்7 கார் நம் நாட்டில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் டீசல் வேரியண்ட்டை கிரிக்கெட் வீரர் விருத்திமான் சஹா வாங்கியுள்ளார்.

இந்த காரில் 3.0 லிட்டர் இன்லைன் 6-சிலிண்டர் ட்வின்-டர்போ டீசல் என்ஜின் பொருத்தப்பட்டு உள்ளது. 48 வோல்ட் மைல்ட் ஹைப்ரீட் சிஸ்டத்துடன் வழங்கப்படும் இந்த டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 340 பிஎஸ் மற்றும் 700 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. பிஎம்டபிள்யூ எக்ஸ்7 காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.1.27 கோடியில் இருந்து ரூ.1.30 கோடி வரையில் தற்சமயம் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய கிரிக்கெட் அணியின் பிரபலமான வீரர்களுள் ஒருவராக விளங்கும் விருத்திமான் சஹா இந்த அளவிற்கு உணர்ச்சிவசப்பட்டு எக்ஸ் பதிவை வெளியிட்டுள்ளார் எனும்போது, இதுதான் அவரது முதல் சொகுசு காரா? என்கிற சந்தேகம் எழுகிறது. ஐபிஎல் போன்ற பணம் புரளும் கிரிக்கெட் தொடரில் பல ஆண்டுகளாக விளையாடுபவர் இப்போதுதான் அவரது முதல் லக்சரி காரை வாங்கியுள்ளார் என்பது நம்பும் அளவிற்கு இல்லை.

More from DriveSpark

Article Published On: Friday, June 14, 2024, 18:50 [IST]
English summary
Cricketer wriddhiman saha takes delivery of bmw x7 check all details here
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+