Just In
- 52 min ago
மாருதியின் இந்த 3 தயாரிப்புகளுக்குதான் இந்தியாவில் டிமாண்ட் மிக மிக அதிகம்... வேற லெவல்ல விற்பனையாகியிருக்கு!
- 12 hrs ago
மஹிந்திரா எக்ஸ்யூவி300 கார் விற்பனையில் ஷங்கர் படம்போல் பிரம்மாண்ட வளர்ச்சி! உண்மையான காரணம் என்னனு தெரியுமா?
- 15 hrs ago
நடிகர் அஜித் விரும்பி ஃபோட்டோ எடுத்து கொண்ட காரில் இத்தனை ஸ்பெஷல் இருக்கா!! ஃபேன்ஸ் ஆராய்ச்சில இறங்கிட்டாங்க!
- 15 hrs ago
5 விதமான ட்ரிம், 40 விதமான வேரியண்ட்... பிரமாண்டமான தேர்வுகளில் விற்பனைக்கு வருகிறது புதிய ஸ்கார்பியோ என்!
Don't Miss!
- News
கேரளாவில் ஆயுத பயிற்சி எடுத்த வழக்கு..விருதுநகரில் என்.ஐ.ஏ. அதிகாரிகளால் மாவோயிஸ்டு ஐயப்பன் கைது
- Sports
ரோகித் சர்மாவுக்கு கொரோனா உறுதி.. இங்கிலாந்து தொடரில் அடுத்தடுத்த சர்ச்சை.. எப்படி பரவியது??
- Technology
பழைய பாஸ்போர்ட் செல்லுபடியாகுமா? இ-பாஸ்போர்ட் குறித்து அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!
- Movies
குட் பை... ஹனிமூன் கடைசிநாள் போட்டோக்களை வெளியிட்ட நயன்தாரா – விக்னேஷ் சிவன்
- Finance
ஒரே வாரத்தில் ரூ.1000 சரிவில் தங்கம் விலை.. இது வாங்க சரியான நேரமா?
- Lifestyle
வார ராசிபலன் 26.06.2022-02.07.2022 - இந்த வாரம் நீண்ட பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது....
- Travel
இந்தியாவின் கடைசி கிராமமாம் இது - எவ்வளவு அழகாக இருக்கிறது என்று பாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
ஸ்பெயினில் விபத்திற்குள்ளான ரொனால்டோவின் புகாட்டி வெய்ரான்!! ஷோரூம் விலை மட்டுமே ரூ.16 கோடியாம்!
பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ரூ.16 கோடி மதிப்பிலான புகாட்டி கார் ஸ்பெயினில் விபத்திற்குள்ளாகி உள்ளது. இணையத்தில் வைரலாகி வரும் இந்த சம்பவத்தை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

உலகளவில் பிரபலமான கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவை பற்றி தெரியாதவர்களே இருக்க மாட்டீர்கள் என்றுதான் நினைக்கிறேன். ஏனெனில் உலகளவில் அதிகளவில் சம்பளத்தை ஈட்டக்கூடிய விளையாட்டு வீரராக ரொனால்டோ உள்ளார்.

மான்செஸ்டர் யுனிடெட் கால்பந்து குழுவின் நட்சத்திர வீரரான ரொனால்டோ அதிவேக லக்சரி கார் பிரியரும் ஆவார். இதனாலேயே இவரது கேரேஜில் பல லக்சரி கார்கள் வரிசைக்கட்டி நிற்கின்றன. அவற்றில் பலவற்றில் ரொனால்டோ அவ்வப்போது தனக்கு பிடித்த இடங்களுக்கு சென்றுவந்துள்ளார். அதுபற்றிய பல சுவாரஸ்ய தகவல்களை இதற்குமுன் நமது செய்திதளத்தில் பார்த்துள்ளோம்.

இந்த நிலையில் ஸ்பெயினில் ரொனால்டோவின் புகாட்டி வெய்ரான் கார் விபத்திற்குள்ளாகி உள்ளது. கால்பந்து போட்டிகள் எதுவும் தற்போதைக்கு இல்லாததால் தற்சமயம் குடும்பத்துடன் ஸ்பெயினில் ரொனால்டோ தனது விடுமுறை நாட்களை செலவிட்டு வருகிறார். இதற்கிடையில் கடந்த ஜூன் 20ஆம் தேதி ரொனால்டோவிற்கு சொந்தமான புகாட்டி வெய்ரான் லக்சரி கார் ஸ்பெயினின் தீவு நகரமான மஜோர்கா-வில் உள்ள வீடு ஒன்றின் மீது மோதியுள்ளது.

அந்த சமயத்தில் காரினுள் ரொனால்டோ மற்றும் குடும்பத்தினர் யாரும் இல்லை. வேறொரு ஊழியர் மட்டுமே இருந்துள்ளார். அந்தசமயத்தில் ரொனால்டோ வேறொரு காரில் பயணித்திருந்துள்ளார். ரொனால்டோவின் காருக்கு முன்னாலும், பின்னாலும் கான்வே போல் அவரது பாதுகாப்பு கவச கார்கள் சென்றுள்ளன. அதில் ஒன்றே விபத்தில் சிக்கியுள்ளது.

நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, சாலையின் வளைவில் அதிவேகத்தில் திரும்பும்போது கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த வீட்டின் மீது மோதி விபத்திற்குள்ளாகி உள்ளது. மேலும் இந்த விபத்தில் ஓட்டுனருக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்துள்ளது.

விபத்தில் சிக்கிய ஓட்டுனர் பின்னர் வேறொரு காரில் அழைத்து செல்லப்பட்டுள்ளார். விபத்திற்குள்ளான கார் அப்படியே விடப்பட்டு, போலீஸாரின் விசாரணைக்காக சிலரை ரொனால்டோ அங்கேயே இருக்கும்படி கூறிவிட்டு சென்றுள்ளார். தற்போதைய நிலவரப்படி, இந்திய ரூபாய் மதிப்பில் புகாட்டி வெய்ரோன் லக்சரி காரின் விலை ஏறக்குறைய ரூ.16.25 கோடி ஆகும்.

மஜோர்கா ஓர் தீவு நகரம் என்பதால் நிச்சயமாக இந்த புகாட்டி வெய்ரோன் கார் கப்பல் மூலமாகவே கொண்டுவரப்பட்டிருக்கும். இந்த புகாட்டி கார் மட்டுமின்றி, தனது குடும்பத்தினரின் பயன்பாட்டிற்காக மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி-கிளாஸ் லக்சரி வேனையும் மஜோர்கா தீவிற்கு ரொனால்டோ வரவழைத்துள்ளார். ஏற்கனவே கூறியதுதான், கிறிஸ்டியானோ ரொனால்டோவிடம் ஏகப்பட்ட சொகுசு கார்கள் உள்ளன.

லம்போர்கினி அவெண்டேடார், புகாட்டி செண்டோடிசி மற்றும் ரோல்ஸ்-ராய்ஸ் கல்லினன் என சொல்லிக்கொண்டே போகலாம். சர்வதேச சந்தைகளில் வெய்ரான் 16.4, வெய்ரான் கிராண்ட் ஸ்போர்ட், வெய்ரான் சூப்பர் ஸ்போர்ட், வெய்ரான் புகாட்டி எடிசன்ஸ், வெய்ரான் கிராண்ட் ஸ்போர்ட் விட்டேஸ்ஸே என ஏகப்பட்ட புகாட்டி வெய்ரான் வெர்சன்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

இவற்றில் 4 டர்போசார்ஜர்களுடன் 8 லிட்டர் டபிள்யூ16 என்ஜின் பொருத்தப்படுகிறது. 4 டர்போசார்ஜர்களில் இரண்டிற்கு ஒன்று என 2 காற்று சுத்திகரிப்பான்கள் இந்த என்ஜின் அமைப்பில் அடங்குகின்றன. இந்த என்ஜின் முந்தைய பழைய வெய்ரான் கார்களில் அதிகப்பட்சமாக 1001 பிஎஸ் வரையில் வெளிப்படுத்தக்கூடியதாக இருந்தது. ஆனால் புதிய மாடல்களில் 1,200 பிஎஸ் வரையில் வழங்குகிறது.

இந்த என்ஜின் உடன் உலகத்திலேயே அதிவேகமான 7-ஸ்பீடு இரட்டை-க்ளட்ச் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. இரட்டை-க்ளட்ச் கியர்பாக்ஸின் 7-ஸ்பீடு வேரியண்ட்டை தயாரித்த முதல் நிறுவனம் புகாட்டி ஆகும். இவற்றின் உதவியுடன் புகாட்டி வெய்ரான் காரின் குறிப்பிட்ட வேரியண்ட்களில் அதிகப்பட்சமாக மணிக்கு சுமார் 410கிமீ வேகம் வரையில் செல்ல முடியும்.

உலகளவில் பொது விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட கார் ஒன்றின் அதிகப்பட்ச வேகம் இதுவே ஆகும். அத்துடன் உலகின் ஆற்றல்மிக்க பிரேக் அமைப்பை பெற்ற முதல் காரும் புகாட்டி வெய்ரானே ஆகும். வெய்ரான் கார்களின் முன்பக்கத்தில் 400மிமீ விட்டம் மற்றும் 38மிமீ தடிமன் கொண்ட பீங்கான் டிஸ்க்குகளும், பின் சக்கரங்களில் 380மிமீ விட்டம் மற்றும் 36மிமீ தடிமன் கொண்ட பீங்கான் டிஸ்க்குகளும் பொருத்தப்படுகின்றன.
-
எரிபொருளை மிச்சப்படுத்துவதில் 5 ஸ்டார்களை பெற்ற மிஷ்லின் டயர்கள்... எத்தனை சதவீதம் மிச்சப்படுத்தும் தெரியுமா?
-
இந்தியாவில் ரீ-என்ட்ரீ கொடுக்க தயாரானது முன்னணி பைக் நிறுவனம்... மொத்தமா 4 டூ-வீலர்களை களமிறக்க போறாங்களாம்!
-
தீப்பிடிப்பு பிரச்சனைகளுக்கு மத்தியில்... புதிய மெகா தொழிற்சாலையை நிறுவும் ஒகினவா!!