ஃபெராரி திருப்தி அளிக்காததால் ரூ.17 கோடி கஸ்டமைஸ் புகாட்டி சிரோன் கார் வாங்கிய ரோனால்டோ..!!

Written By:

கால்பந்து உலகின் சூப்பர்ஸ்டாரான கிறிஸ்டியானோ ரோனால்டோ புதிய கஸ்டமைஸ் செய்யப்பட்ட புகாட்டி சிரோன் காரை வாங்கியுள்ளதாக தனது இன்ஸ்ட்ராகிராமில் பதிவிட்டுள்ளார்.

உயர்ரக ஸ்போர்ட்ஸ் கார்களாக வாங்கும் கிறிஸ்டியானோ ரோனால்டோ..!!

இந்திய மதிப்பில் சுமார் ரூ.17.27 கோடி மதிப்புப்பெற்ற இந்த காரை "எனது வீட்டில் ஒரு புதிய மிருகம்" என்று குறிப்பிட்டு ரோனால்டோ பதிவிட்டுள்ளார்.

உயர்ரக ஸ்போர்ட்ஸ் கார்களாக வாங்கும் கிறிஸ்டியானோ ரோனால்டோ..!!

கால்பந்து விளையாட்டில் மட்டுமல்ல, ஆடம்பரமான மற்றும் அதிக செயல்திறன் கொண்ட கார்கள் மீதும் வீரர் கிறிஸ்டியானோ ரோனால்டோவிற்கு ஈர்ப்பு ஜாஸ்தி.

உயர்ரக ஸ்போர்ட்ஸ் கார்களாக வாங்கும் கிறிஸ்டியானோ ரோனால்டோ..!!

ஸ்பெயினில் உள்ள வீட்டில், அவரது கார் கலெக்‌ஷனை நிறுத்துவதற்கே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கராஜ் உண்டு என்பது உலகறிந்த செய்தி.

உயர்ரக ஸ்போர்ட்ஸ் கார்களாக வாங்கும் கிறிஸ்டியானோ ரோனால்டோ..!!

அங்கு லம்பார்கினியில் ஆரம்பித்து ஆஸ்டின் மார்டின் தயாரிப்புகள் வரை அனைத்தும் வரிசை கட்டி நிற்கும். அந்தளவிற்கு கார்கள் என்றால் ரோனால்டோவிற்கு கொள்ள ஆசை.

உயர்ரக ஸ்போர்ட்ஸ் கார்களாக வாங்கும் கிறிஸ்டியானோ ரோனால்டோ..!!

ஸ்பெயினில் உள்ள அவரது வீட்டில் லம்பார்கினி அவெண்டேடர் எல்.பி 700-4, ஃபெராரி 599 ஜிடிஓ, ஃபெராரி 599 ஜிடிபி ஃபியோரானோ,

ஃபெராரி எஃப்430, பென்ட்லீ ஜிடி ஸ்பீடு, ஆஸ்டன் மார்டின் டிபி9 மற்றும் ஆடி ஆர்8 என ரோனால்டோவின் கார் கலெக்‌ஷன் சற்று பெரிது.

உயர்ரக ஸ்போர்ட்ஸ் கார்களாக வாங்கும் கிறிஸ்டியானோ ரோனால்டோ..!!

உலகின் தலை சிறந்த கார் நிறுவனங்கள் வடிவமைத்த பெரும்பாலான ஸ்போர்ட்ஸ் கார் கலெக்‌ஷனை வைத்திருக்கும் ஒரே விளையாட்டு வீரர் கிறிஸ்டியானோ ரோனால்டோ தான் என்றாலும் மிகையாகாது.

உயர்ரக ஸ்போர்ட்ஸ் கார்களாக வாங்கும் கிறிஸ்டியானோ ரோனால்டோ..!!

ஒரு மாதத்திற்கு முன்னர் தான் ரோனால்டோ தன் மகனுக்கான செர்ரி நிறத்திலான ஃபெராரி எஃப்430 காரை வாங்கி, அதைப்பற்றி இன்ஸ்ட்ராகிராமில் பதிவிட்டு இருந்தார்.

உயர்ரக ஸ்போர்ட்ஸ் கார்களாக வாங்கும் கிறிஸ்டியானோ ரோனால்டோ..!!

அதற்குள் மீண்டும் ஒரு புதிய கார். எதற்காக ரோனால்டோவிற்கு இப்படி ஒரு கார் ஆர்வம் என்று கேட்டால்? எல்லாம் மகனின் ஆசைக்காக என்று அவரிடமிருந்து பதில் வரும்.

உயர்ரக ஸ்போர்ட்ஸ் கார்களாக வாங்கும் கிறிஸ்டியானோ ரோனால்டோ..!!

சரி, இப்போது கிறிஸ்டியானோ வாங்கியுள்ள புதிய புகாட்டி சிரோன் காரை குறித்த விவரங்களை பார்க்கலாம்

8.0 லிட்டர் 16 சிலிண்டர் எஞ்சின் கொண்ட இந்த கார் மூலம், 1480 பிஎச்பி பவர் மற்றும் 1599 என்.எம் டார்க் திறன் கிடைக்கும்.

உயர்ரக ஸ்போர்ட்ஸ் கார்களாக வாங்கும் கிறிஸ்டியானோ ரோனால்டோ..!!

அதிகப்பட்சமாக மணிக்கு 420 கி.மீ வேகத்தில் பறக்கும் இந்த கார், துவக்க நிலையில் இருந்து 100கி.மீ வேகத்தை வெறும் 2.5 விநாடிகளில் எட்டி பிடித்து விடும்.

உயர்ரக ஸ்போர்ட்ஸ் கார்களாக வாங்கும் கிறிஸ்டியானோ ரோனால்டோ..!!

ஏற்கனவே புகாட்டி சிரோன் மாடல் துவக்க நிலையில் இருந்து 400 கி.மீ வேகத்தை வெறும் 42 விநாடிகளில் எட்டி பிடித்த சாதனை இன்னும் பட்டியலில் இருக்கிறது.

உயர்ரக ஸ்போர்ட்ஸ் கார்களாக வாங்கும் கிறிஸ்டியானோ ரோனால்டோ..!!

ஸ்பெயினில் எப்போது கிறிஸ்டியானோ ரோனால்டோ புதிய புகாட்டி சிரோன் காரில் மகனுடன் நகர்வலம் வருவார் என அந்நகர வாசிகள் சாலையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Read in Tami: Cristiano Ronaldo Buys 2 Million Customised Bugatti Chiron After Ferrari. Click for Details...
Story first published: Thursday, October 5, 2017, 15:32 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark