புதிய ரக ஃபெராரி எஃப்12 கார் வாங்கி மகனுக்கு இன்பதிர்ச்சி கொடுத்த கிறிஸ்டியானோ ரோனால்டோ..!

Written By:

உலக புகழ்பெற்ற கால்பந்து வீரரான கிறிஸ்டியானா ரோனால்டோ அசாத்திய திறன் பெற்ற ஃபெராரி எஃப்12 மாடல் காரை புதுசாக வாங்கி தனது கலெக்‌ஷனில் இணைத்துள்ளார்.

ஃபெராரி காருக்கு வாடிக்கையாளரான கிறிஸ்டியானோ ரோனால்டோ..!!

கால்பந்து விளையாட்டில் தனது திறமையை நிரூபித்து இன்று உலகம் போற்றும் வீரராக உள்ளார் கிறிஸ்டியானோ ரோனால்டோ.

ஃபெராரி காருக்கு வாடிக்கையாளரான கிறிஸ்டியானோ ரோனால்டோ..!!

கடின உழைப்பால் வெற்றிகளை குவித்த ரோனால்டோ உலக பணக்காரர்கள் பட்டியலில் உள்ள செல்வந்தரும் கூட.

ஃபெராரி காருக்கு வாடிக்கையாளரான கிறிஸ்டியானோ ரோனால்டோ..!!

சமீபத்தில் நடைபெற்ற போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கிறிஸ்டியானோ ரோனால்டோ, இம்மாத தொடக்கத்தில் உலகிற்கே ஒரு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

ஃபெராரி காருக்கு வாடிக்கையாளரான கிறிஸ்டியானோ ரோனால்டோ..!!

ஆம் தனது இன்ஸிடராகிராம் பக்கத்தில் ரோனால்டோ புதிய ஃபெராரி எஃப்12 டிடிஎஃப் மாடல் காரை வாங்கியதாக கூறி புகைப்படம் ஒன்றை பதிவிட்டு உள்ளார்.

ஃபெராரி காருக்கு வாடிக்கையாளரான கிறிஸ்டியானோ ரோனால்டோ..!!

அடர் செர்ரி சிவப்பு நிறத்திலான ஃபெராரி எஃப்12 டிடிஎஃப் காரில் கைக்கட்டி சாய்ந்த படி அவர் நிறக்க, திறந்திருக்கும் கார் கதவின் உள்ளே டிரைவர் இருக்கையில் ரோனால்டோ மகன் உட்கார்ந்திருப்பது போன்று அந்த புகைப்படம் எடுக்கப்பட்டு இருந்தது.

ஃபெராரி காருக்கு வாடிக்கையாளரான கிறிஸ்டியானோ ரோனால்டோ..!!

ரோனால்டாவின் போஸ், அவரது மகன் மற்றும் காரின் நிறம் என அனைத்தும் அட்டகாசமாக இருக்கும் இந்த புகைப்படம் தற்போது உலகளவில் வைரலாகி வருகிறது.

ஃபெராரி காருக்கு வாடிக்கையாளரான கிறிஸ்டியானோ ரோனால்டோ..!!

கூடவே ரோனால்டோ புதுசாக வாங்கியுள்ள ஃபெராரி எஃப்12 டிடிஎஃப் மாடல் காரை அவரது ரசிகர்களும் வாங்க ஆர்வம் காட்டி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபெராரி காருக்கு வாடிக்கையாளரான கிறிஸ்டியானோ ரோனால்டோ..!!

ஃபெராரி எஃப்12 டிடிஎஃப் மாடலின் விலை இந்திய மதிப்பில் ரூ.4.17 கோடி ஆகும். 6.2 லிட்டர் வி12 எஞ்சின் இந்த காரில் உள்ளது.

ஃபெராரி காருக்கு வாடிக்கையாளரான கிறிஸ்டியானோ ரோனால்டோ..!!

துவக்கநிலையில் இருந்து 60கி.மீ வேகத்தை 2.9 விநாடிகளில் எட்டும் திறன் படைத்த இந்த காரின் அதிகப்பட்சம் வேகம் மணிக்கு 211கி.மீ.

ஃபெராரி காருக்கு வாடிக்கையாளரான கிறிஸ்டியானோ ரோனால்டோ..!!

ஸ்டாண்டர்டு எஃப்12 மாடலை விட கூடுதலான சிறப்பம்சங்களை பெற்ற ஃபெராரி எஃப்12 டிடிஎஃப் கார் 770 பிஎச்பி பவரை வழங்க வல்லது.

ஃபெராரி காருக்கு வாடிக்கையாளரான கிறிஸ்டியானோ ரோனால்டோ..!!

கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரோனால்டோ அதிக செயல்திறன் கொண்ட கார்களை ஏற்கனவே பயன்படுத்தி வருபவர் தான்.

ஃபெராரி காருக்கு வாடிக்கையாளரான கிறிஸ்டியானோ ரோனால்டோ..!!

அவரிடம் ஏற்கனவே புகாட்டி வேய்ரான், மற்றும் பல புதிய திறன் கொண்ட மெர்சிடிஸ் கார்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபெராரி காருக்கு வாடிக்கையாளரான கிறிஸ்டியானோ ரோனால்டோ..!!

சமீபத்தில் போர்ச்சுகல்லில் ஃபாரோ தீவு மற்றும் ஹங்கேரிக்கு எதிரான போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார் கிறிஸ்டியானா ரோனால்டோ.

ஃபெராரி காருக்கு வாடிக்கையாளரான கிறிஸ்டியானோ ரோனால்டோ..!!

அந்த போட்டிகள் முடிந்த உடன் இந்த புதிய ஃபெராரி எஃப்12 டிடிஎஃப் மாடலில் அவர் தனது இல்லத்திற்கு நேரடியாக வந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Read in Tamil: Cristiano Ronaldo Purchase Brand New Ferrari F12 Car Posted in Instragram. Click for Details...
Story first published: Friday, September 15, 2017, 8:30 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark