படத்துல இருக்க பிரைவேட் ஜெட் விளையாட்டு வீரருக்கு சொந்தமானதா! இத்தனை பேரால மட்டும்தான் டிராவல் பண்ண முடியுமா!
பிரபல விளையாட்டு வீரர் ஒருவர் பல மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள பிரைவேட் ஜெட் விமானத்தைத் தனக்கு சொந்தமாக வைத்திருக்கின்றார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. உலக புகழ் பெற்ற கால்பந்தாட்ட விளையாட்டு வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ-வே அந்த விளையாட்டு வீரர் ஆவார். ஆமாங்க, இவரே பிரைவேட் ஜெட் விமானம் ஒன்றை தனக்கு சொந்தமாக வைத்திருக்கின்றார். பெரும்பாலான விளையாட்டு வீரர்கள் ஆடம்பர கார்களை வாங்க ஆர்வம் காட்டிக் கொண்டிருக்கின்ற சூழலில் ரொனால்டோ ஜெட் விமானத்தை வைத்திருப்பதில் ஆர்வமிக்கவராக காட்சியளிக்கின்றார்.
இதை உறுதிப்படுத்தும் விதமாகவே அவர் முன்னதாக வைத்திருந்ததைக் காட்டிலும் மிக அதிக திறனை வெளியேற்றக் கூடிய தனிநபர் பயன்பாட்டு வசதிக் கொண்ட பிரைவேட் ஜெட் விமான பயன்பாட்டிற்கு மாறி இருக்கின்றார். அவர் முன்னதாக கல்ஃப்ஸ்டிரீம் ஜி200 (Gulfstream G200) மாடல் பிரைவேட் ஜெட்டையே பயன்படுத்தி வந்தார்.

இப்போது அவர் கல்ஃப்ஸ்ட்ரீம் ஜி650 (Gulfstream G650) பிரைவேட் ஜெட் பயன்பாட்டிற்கு மாறி உள்ளார். இந்த விமானத்தையே அவர் தற்போது தனக்கு சொந்தமானதாக மாறி இருக்கின்றார். இதை வாங்க முன்னதாக வைத்திருந்த கல்ஃப்ஸ்டிரீம் ஜி200 விமானத்தை ரொனால்டோ கை மாற்றிவிட்டதாகக் கூறப்படுகின்றது.
புதிதாக வாங்கப்பட்டு இருக்கும் கல்ஃப்ஸ்ட்ரீம் ஜி650 பிரைவேட் ஜெட்டே உலகின் மிக அதிக வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்ட ஜெட் விமானம் ஆகும். ஆடம்பர அம்சங்களையும் மிக அதிக அளவில் இந்த விமானம் தன்னுள் தாங்கி இருக்கும். இத்தகைய பிரைவேட் ஜெட் விமானத்தையே கிறிஸ்டியானோ ரொனால்டோ தனக்குச் சொந்தமாக வைத்திருக்கின்றார்.
உலகிலேயே ஒரு சிலரிடத்தில் மட்டுமே இந்த அதிக வேகத்தில் பறக்கும் திறன் கொண்ட ஜெட் விமானம் பயன்பாட்டில் இருக்கின்றது. இந்த விமானத்தின் ஒரே ஒரு யூனிட்டின் மதிப்பே 73 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமானது ஆகும். இதனால்தான் இதை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் மிக மிக குறைவாக உள்ளது.
அந்தவகையில், அமேசான் நிறுவனத்தின் சிஇஓ ஜெஃப் பெசோஸ், பில் கேட்ஸ் மற்றும் எலோன் மஸ்க் போன்ற உலகின் குறிப்பிட்ட சில பணக்காரர்களிடத்தில் மட்டுமே இந்த பிரைவேட் ஜெட் பயன்பாட்டில் இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. இதன் டாப் ஸ்பீடு 610 கிமீ ஆகும்.

இதனால், 1.30 லட்சம் தூரம் வரை பறக்க முடியுமாம். இதில் ஒரே நேரத்தில் 19 பேரால் மட்டுமே பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. கிறிஸ்டியானோ ரொனால்டோ பிரைவேட் ஜெட் அவரின் தேவைக்கு ஏற்ப லேசாக மாற்றியமைக்கப்பட்டு இருக்கின்றன. இதை உறுதிப்படுத்தும் விதமாக அந்த விமானத்தின் வெளிப்பக்கம் உள்ளது.
ஷைனிங்கான மெட்டாலிக் பாடியை அது கொண்டிருக்கின்றது. இதேபோல், விமானத்தின் மேல் பக்கத்தில் 'சிஆர் 7' (CR7) எனும் அவரின் இனிசியல்களும் இடம் பெற்றிருக்கின்றன. தொடர்ந்து, இந்த பிரைவேட் ஜெட்டில் வைஃபை, தொலைபேசி, எலெக்ட்ரிக் அடுப்பு, பொழுதுபோக்கு திரை மற்றும் சிறிய குளிர்சாதன பெட்டி என ஏகப்பட்ட ஆடம்பர அம்சங்களை தாங்கியிருக்கும் என இடம் பெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவிலும் இதுபோன்று சிலர் பிரைவேட் ஜெட் விமானத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். முகேஷ் அம்பானி தொடங்கி சில முன்னணி நட்சத்திர நடிகர்களிடத்தில் பிரைவேட் ஜெட் விமானம் பயன்பாட்டில் இருக்கின்றது. அந்தவகையில், தெலங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் அல்லு அர்ஜூன்கூட ஜெட் விமானத்தை பயன்படுத்தி வருகின்றார் என்பது கவனிக்கத்தகுந்தது.


Click it and Unblock the Notifications









