புல்வாமா தாக்குதலை மறக்க முடியுமா? இந்திய பாதுகாப்பு படைகளுக்கு ரூ.650 கோடி ஒதுக்க காரணம் இதுதான்

இந்தியாவின் பல்வேறு பாதுகாப்பு படைகளுக்கு அரசு சுமார் 650 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புல்வாமா தாக்குதலை மறக்க முடியுமா? இந்திய பாதுகாப்பு படைகளுக்கு ரூ.650 கோடி ஒதுக்க காரணம் இதுதான்

இந்தியாவில் நக்சல் பாதிப்பு மிகுந்த பகுதிகள் மற்றும் ஜம்மு காஷ்மீரில், பாரா மிலிட்டரி படைகள் பயணம் செய்வதற்காக, எம்பிவி எனப்படும் வாகனங்களை (MPV - Mine-protected Vehicles) அரசு விரைவில் வாங்க உள்ளதாக அதிகாரிகள் சமீபத்தில் தெரிவித்திருந்தனர். இந்த எம்பிவி வாகனங்கள், கண்ணி வெடி தாக்குதல்களில் இருந்து வீரர்களை காப்பாற்றும் வல்லமை வாய்ந்தது. இதுதவிர தீவிரவாதத்திற்கு எதிராக பணியாற்றும் கமாண்டோ படையான என்எஸ்ஜி எனப்படும் தேசிய பாதுகாப்பு படைக்கு (NSG - National Security Guard), ஆர்ஓவி எனப்படும் ரிமோட் மூலம் இயக்கப்படும் வாகனங்களை (ROV - Remotely Operated Vehicles) விரைவில் வாங்க இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

புல்வாமா தாக்குதலை மறக்க முடியுமா? இந்திய பாதுகாப்பு படைகளுக்கு ரூ.650 கோடி ஒதுக்க காரணம் இதுதான்

இந்த சூழலில் இந்த வாகனங்களை கொள்முதல் செய்ய அரசு தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்படி சிஆர்பிஎப் எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF - Central Reserve Police Force) மற்றும் பிஎஸ்எப் எனப்படும் எல்லை பாதுகாப்பு படை (BSF - Border Security Force) உள்ளிட்ட பாரா மிலிட்டரி படைகளுக்கு, கூடுதல் எம்பிவி வாகனங்கள், புல்லட்-ப்ரூஃப் ஜாக்கெட்கள் மற்றும் ஆம்புலன்ஸ் ஆகியவற்றை வாங்க 613.96 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுதவிர என்எஸ்ஜி காமாண்டோ படைக்கு, ரிமோட் மூலம் இயங்கும் 7 ஆர்ஓவி வாகனங்களை வாங்க 16.84 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MOST READ: டீலர்ஷிப்களுக்கு வர தொடங்கிய புதிய மஹிந்திரா கார் இதுதான்... வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம்...

புல்வாமா தாக்குதலை மறக்க முடியுமா? இந்திய பாதுகாப்பு படைகளுக்கு ரூ.650 கோடி ஒதுக்க காரணம் இதுதான்

நக்சல் பாதிப்பிற்கு உள்ளான மற்றும் ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில், சிஆர்பிஎப் உள்ளிட்ட படைகள் ஏற்கனவே எம்பிவி வாகனங்களை பயன்படுத்தி வருகின்றன. இது நான்கு சக்கர வாகனம் ஆகும். ஒரு வாகனத்தில் 6 வீரர்கள் பயணம் செய்ய முடியும். இந்த சூழலில் தற்போது கூடுதலாக கொள்முதல் செய்யப்படவுள்ள எம்பிவி வாகனங்கள் வந்தவுடன், பாரா மிலிட்டரி படைகளின் தீவிரவாதத்திற்கு எதிரான செயல்திறன் அதிகரிக்கும் என அதிகாரிகள் தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

புல்வாமா தாக்குதலை மறக்க முடியுமா? இந்திய பாதுகாப்பு படைகளுக்கு ரூ.650 கோடி ஒதுக்க காரணம் இதுதான்

அதே நேரத்தில் என்எஸ்ஜி படைக்காக கொள்முதல் செய்யப்படவுள்ள ரிமோட் மூலம் இயக்கப்படும் ஆர்ஓவி வாகனங்களை, கட்டிடங்கள், பேருந்துகள், மெட்ரோக்கள் மற்றும் ரயில்வே ஸ்டேஷன்கள் உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு பணிக்கு பயன்படுத்த முடியும். அத்துடன் மனித தலையீடு இன்றி, வெடிகுண்டுகளை கண்டறியவும், அவற்றை செயலிழக்க வைக்கவும் ஆர்ஓவி வாகனங்கள் என்எஸ்ஜி படைக்கு உதவி செய்யும். படிக்கட்டுகளில் ஏறும் திறன் கூட ஆர்ஓவி வாகனங்களுக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.

புல்வாமா தாக்குதலை மறக்க முடியுமா? இந்திய பாதுகாப்பு படைகளுக்கு ரூ.650 கோடி ஒதுக்க காரணம் இதுதான்

முன்னதாக ரெனால்ட் ஷெர்பா (Renault Sherpa) கவச வாகனங்களை என்எஸ்ஜி படை ஏற்கனவே கொள்முதல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. போர் முனைகளில் அதிகம் பயன்படுத்தப்படும் இந்த வாகனத்தில், 4.76 லிட்டர், 4 சிலிண்டர், டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 4x4 வாகனம் ஆகும். இதில், 10 பேர் பயணம் செய்ய முடியும். ரெனால்ட் ஷெர்பா கவச வாகனத்தின் எடை 11 டன்கள். என்றாலும் கூட அதிகபட்சமாக மணிக்கு 110 கிலோ மீட்டர்கள் வேகத்தில் பயணிக்கும் திறன் இதற்கு உண்டு. இதுதவிர முழுமையாக எரிபொருள் நிரப்பினால், 1,000 கிலோ மீட்டர்கள் வரை ரெனால்ட் ஷெர்பா கவச வாகனம் பயணிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

MOST READ: இந்தியாவையே மெய்சிலிர்க்க வைத்த ஜாவா: அனைத்தும் தலைகீழாக மாறிக்கொண்டிருக்கும்போது ஜாவா செய்த செயல்!

புல்வாமா தாக்குதலை மறக்க முடியுமா? இந்திய பாதுகாப்பு படைகளுக்கு ரூ.650 கோடி ஒதுக்க காரணம் இதுதான்

ஜம்மு காஷ்மீர் மற்றும் நக்சல் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில், வெடிகுண்டு மற்றும் கண்ணிவெடி தாக்குதல்களால் பாதுகாப்பு படை வீரர்களும், பொதுமக்களும் அடிக்கடி பாதிக்கப்படுகின்றனர். எனவேதான் பாதுகாப்பை அதிகரிக்கும் பொருட்டு, இந்த வாகனங்கள் வாங்கப்படுகின்றன. கடந்த சில வாரங்களுக்கு முன்பு புல்வாமா பகுதியில் சிஆர்பிஎப் வீரர்கள் பயணித்த பேருந்து மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதில், 40க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து இந்திய விமான படை தாக்குதல் நடத்தியது. இதன் காரணமாக இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் மேகம் சூழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
CRPF, BSF To Get Bomb Proof Vehicles. Read in Tamil
Story first published: Thursday, April 25, 2019, 14:58 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X