உல்லாச கப்பல்களின் உண்மையான முகம் இதுதான்... கட்டுக்கதைகளை நம்புவதை இப்பவே நிப்பாட்டுங்க...

உல்லாச கப்பல்களின் உண்மையான முகத்தை இந்த செய்தியில் பார்க்கலாம்.

உல்லாச கப்பல்களின் உண்மையான முகம் இதுதான்... கட்டுக்கதைகளை நம்புவதை இப்பவே நிப்பாட்டுங்க...

உல்லாச கப்பல் பயணங்களை மேற்கொள்வது என்பது விடுமுறைகளை உற்சாகத்துடன் கழிப்பதற்கான மிக சிறந்த வழி. ஒரு ஆண்டுக்கு தோராயமாக 20 மில்லியன் பேர் உல்லாச கப்பல் பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் இன்னும் சிலரோ உல்லாச கப்பல் பயணங்கள் என்றாலே வெறுப்புடன் ஒதுங்கி கொள்கின்றனர்.

உல்லாச கப்பல்களின் உண்மையான முகம் இதுதான்... கட்டுக்கதைகளை நம்புவதை இப்பவே நிப்பாட்டுங்க...

உல்லாச கப்பல்களை பற்றி உலா வரும் ஒரு சில கட்டுக்கதைகளே இதற்கு காரணம். அந்த கட்டுக்கதைகள் என்னென்ன? என்பதை இந்த செய்தியில் விரிவாக தொகுத்து வழங்கியுள்ளோம். உல்லாச கப்பல்கள் பற்றி நீங்கள் தவறாக புரிந்து வைத்திருக்கும் ஒரு சில விஷயங்களுக்கு இந்த செய்தி விரிவான விளக்கத்தை வழங்கும்.

உல்லாச கப்பல்களின் உண்மையான முகம் இதுதான்... கட்டுக்கதைகளை நம்புவதை இப்பவே நிப்பாட்டுங்க...

கட்டுக்கதை 1:

உல்லாச கப்பல்களில் பயணம் செய்தால், கப்பல் இயக்கத்தினால் ஏற்படும் குமட்டல் நோயால் பாதிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக பலர் நம்புகின்றனர். உல்லாச கப்பல் பயணங்களை பலரும் தவிர்ப்பதற்கு இந்த அச்சம் முக்கியமான காரணங்களில் ஒன்று. ஆனால் இன்றைய நவீன கால உல்லாச கப்பல்கள் மிகவும் நிலையானவை.

உல்லாச கப்பல்களின் உண்மையான முகம் இதுதான்... கட்டுக்கதைகளை நம்புவதை இப்பவே நிப்பாட்டுங்க...

எனவே இந்த பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. அதையும் மீறி உங்களுக்கு பாதிப்பு ஏற்படுமேயானால், அதை தணிப்பதற்கான வைத்தியங்கள் இருக்கவே செய்கின்றன. எனவே இதை நினைத்து அனாவசியமாக பயணிகள் அச்சப்பட வேண்டியதில்லை.

உல்லாச கப்பல்களின் உண்மையான முகம் இதுதான்... கட்டுக்கதைகளை நம்புவதை இப்பவே நிப்பாட்டுங்க...

கட்டுக்கதை 2:

உல்லாச கப்பல்களின் டிக்கெட் கட்டணத்தில் அனைத்தும் அடங்கி விடும் என சிலர் நினைக்கின்றனர். இது தவறு. டிக்கெட் கட்டணத்தில் அனைத்தும் அடங்காது. அடிப்படை விலை குறைவாக இருக்க வேண்டும் என்பதற்காக உல்லாச கப்பல் நிறுவனங்கள் இதனை கடைபிடித்து வருகின்றன. எனவே கூடுதல் என கருதப்படும் ஒரு சில விஷயங்களுக்கு நீங்கள் தனியாக பணம் செலவழிக்க வேண்டும்.

உல்லாச கப்பல்களின் உண்மையான முகம் இதுதான்... கட்டுக்கதைகளை நம்புவதை இப்பவே நிப்பாட்டுங்க...

இதற்கு ஒயின் மற்றும் தண்ணீர் பாட்டில் போன்றவற்றை உதாரணமாக குறிப்பிடலாம். இருந்தாலும் அறை மற்றும் பாரம்பரியமான உல்லாச கப்பல் வசதிகளான நீச்சல் குளம் மற்றும் பொழுதுபோக்கு ஆகியவை அடிப்படை கட்டணத்தில் வந்து விடும். நீங்கள் மதுபானங்களை தேர்வு செய்தாலோ அல்லது டிப்ஸ் கொடுப்பதாக இருந்தாலோ பணம் செலவழிக்க வேண்டும்.

உல்லாச கப்பல்களின் உண்மையான முகம் இதுதான்... கட்டுக்கதைகளை நம்புவதை இப்பவே நிப்பாட்டுங்க...

கட்டுக்கதை 3:

உல்லாச கப்பல்களில் பெரும்பாலும் வயதானவர்கள்தான் மிகவும் அதிகமாக பயணம் செய்வார்கள் என்ற பேச்சு உள்ளது. இதை அப்படியே கட்டுக்கதை என சொல்லி விட முடியாது. இதில், கொஞ்சம் உண்மை இருக்கவே செய்கிறது. சிஎல்ஐஏ (CLIA - Cruise Lines International Association) அமைப்பு வழங்கியுள்ள அறிக்கையின்படி, உல்லாச கப்பல்களில் பயணம் செய்வோரின் சராசரி வயது 47.

உல்லாச கப்பல்களின் உண்மையான முகம் இதுதான்... கட்டுக்கதைகளை நம்புவதை இப்பவே நிப்பாட்டுங்க...

உல்லாச கப்பல்களில் மூத்த குடிமக்கள் அதிகம் பேர் பயணம் செய்கின்றனர் என்பது உண்மைதான். ஆனால் அவர்களில் பலர் இளைஞர்களை போல் சுறுசுறுப்பானவர்களாக இருப்பார்கள். அவர்களுடைய வாழ்க்கை அனுபவத்தை உங்களுடன் அவர்கள் பகிர்ந்து கொள்வார்கள். இது உங்களுக்கு நல்ல பாடமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

உல்லாச கப்பல்களின் உண்மையான முகம் இதுதான்... கட்டுக்கதைகளை நம்புவதை இப்பவே நிப்பாட்டுங்க...

உல்லாச கப்பல் பயணங்களின்போது மிகவும் அற்புதமான மூத்த குடிமக்களை நீங்கள் சந்திப்பீர்கள். ஆனால் வயதானவர்கள் மட்டும்தான் உல்லாச கப்பல்களில் இருப்பார்கள் என்று தப்புக்கணக்கு போட வேண்டாம். இன்றைய அதிநவீன உல்லாச கப்பல்கள் குடும்பங்களையும் மற்றும் தம்பதிகளையும் அதிகமாக ஈர்த்து வருகின்றன.

உல்லாச கப்பல்களின் உண்மையான முகம் இதுதான்... கட்டுக்கதைகளை நம்புவதை இப்பவே நிப்பாட்டுங்க...

கட்டுக்கதை 4:

உல்லாச கப்பல்கள் என்றாலே மதுவுடன் கூடிய கேளிக்கை விருந்துகளில் பங்கேற்கும் ஆர்வம் உடையவர்கள் மட்டும்தான் இருப்பார்கள் என்ற பேச்சும் இருந்து வருகிறது. ஆனால் இது தவறு. வெவ்வேறு வித்தியாசமான தலைமுறையினரை உள்ளடக்கிய குடும்பங்கள் உல்லாச கப்பல்களில் அதிகம் பயணிக்கின்றன. உல்லாச கப்பல்களில் நீங்கள் மது விருந்துகளை அதிகம் பார்க்க முடியும் என்பது உண்மைதான்.

உல்லாச கப்பல்களின் உண்மையான முகம் இதுதான்... கட்டுக்கதைகளை நம்புவதை இப்பவே நிப்பாட்டுங்க...

அதே சமயம் வாழ்க்கையில் ஒரு முறை கூட மதுவை தொடாதவர்களையும் நீங்கள் உல்லாச கப்பல்களில் பார்க்க முடியும். பலதரப்பட்ட கலாச்சாரங்களை பின்பற்றும் மற்றும் வெவ்வேறு வித்தியாசமான வயது உடையவர்களை நீங்கள் உல்லாச கப்பல்களில் சந்திக்கலாம். பயணங்களை நேசிப்பவர்களே உல்லாச கப்பல்களில் அதிகமாக இருப்பார்கள். மது கொண்டாட்டங்கள் அதன் ஒரு பகுதி மட்டுமே.

உல்லாச கப்பல்களின் உண்மையான முகம் இதுதான்... கட்டுக்கதைகளை நம்புவதை இப்பவே நிப்பாட்டுங்க...

கட்டுக்கதை 5:

உல்லாச கப்பல்கள் மிகவும் அபாயகரமானவை என்ற பேச்சு இருந்து வருகிறது. ஆனால் இது உண்மையல்ல. வானில் பறப்பது ஆபத்தானது என்பதை போல் உல்லாச கப்பல்களும் இந்த தவறான பெயரை சம்பாதித்து இருக்கலாம். ஆனால் உண்மையில் உல்லாச கப்பல்கள் மிகவும் பாதுகாப்பானவை. ஒரு ஆண்டுக்கு 20 மில்லியன் பேர் பயணிக்கும் நிலையில், அவற்றின் குற்ற விகிதம் மிகவும் குறைவாக உள்ளது.

உல்லாச கப்பல்களின் உண்மையான முகம் இதுதான்... கட்டுக்கதைகளை நம்புவதை இப்பவே நிப்பாட்டுங்க...

நவீன கால உல்லாச கப்பல்கள் பாதுகாப்பில் தலை சிறந்து விளங்குகின்றன. அவை விபத்தில் சிக்குவது மிக அபூர்வமான விஷயம். சிஎல்ஐஏ கூற்றுப்படி, கடந்த 2009-16ம் ஆண்டுகளுக்கு இடையே உல்லாச கப்பல்களில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை 41 சதவீதம் உயர்ந்துள்ளது. உல்லாச கப்பல்கள் மிகவும் பாதுகாப்பான போக்குவரத்து முறை என்பதை பயணிகளின் இந்த ஆர்வமே எடுத்துக்காட்டுகிறது.

உல்லாச கப்பல்களின் உண்மையான முகம் இதுதான்... கட்டுக்கதைகளை நம்புவதை இப்பவே நிப்பாட்டுங்க...

கட்டுக்கதை 6:

பெரிய உல்லாச கப்பல்கள்தான் எப்போதும் சிறந்தது என்ற பேச்சு உள்ளது. ஆனால் இதையும் கட்டுக்கதை என கூற முடியாது. இதில், உண்மை இருக்கவே செய்கிறது. பொதுவாக பெரிய உல்லாச கப்பல்களில், பொழுதுபோக்கு, உணவு, ஆரோக்கியம் சார்ந்த விஷயங்கள் மிகவும் சிறப்பாகவே இருக்கும். ஆனால் அவற்றின் கட்டணமும் அதிகமாக இருக்கும் என்பதை மறந்து விட வேண்டாம்.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Cruise Ships: Myth Versus Truth. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X