இனி டீசல் பற்றி எல்லாம் கவலையே வேண்டாம்... ஹைட்ரஜன் பஸ் வந்துருச்சு... இனி டிக்கெட் எல்லாம் ரொம்ப சீப் தான்
மத்திய அரசுடன் இணைத்து தனியார் நிறுவனம் ஒன்று ஹைட்ரஜனில் இயங்கும் பேருந்தைத் தயாரித்துள்ளது.
Recommended Video
இந்த பேருந்து எப்படி இயங்கும்? இதில் உள்ள அம்சங்கள் என்ன? முழு விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

மத்திய மாநில அரசுகள் காற்று மாசுவை கட்டுப்படுத்த பல்வேறு யுக்திகளைக் கையாண்டு வருகின்றனர். குறிப்பாக டில்லியில் காற்று மாசு கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அதிகமாகிவிட்டது. இதனால் அரசு காற்று மாசுவை கட்டுப்படுத்த பல்வேறு விதிமுறைகளை வகுத்து வருகிறது. குறிப்பாக வாகனங்களில் பெட்ரோல்/டீசல் வாகனங்களுக்கு மாற்றாக எலெக்ட்ரிக் மற்றும் ஹைட்ரஜன் வாகனங்களை உற்பத்தி செய்ய மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியில் அறிவியல் மற்றும் தொழிற்சாலை ஆய்வு கவுன்சில் சார்பில் கேபிஐடி லிமிட்டெட் என்ற தனியார் நிறுவனத்துடன் இணைத்து ஹைட்ரஜன் ஃப்யூயல் செல் பஸ்களை தயாரிக்க நடவடிக்கை எடுத்தது. இந்த முயற்சியின் பலனாக அந்நிறுவனம் தற்போது ஹைட்ரஜன் ப்யூயல் பஸ்களை தயாரித்து விட்டது. இதன் பஸ்களை மத்திய அமைச்சர் ஜிஜேந்திர சிங் என்பவர் அறிமுகப்படுத்தி வைத்தார்.

மத்திய அரசின் ஆத்மநிர்பார் திட்டமான இந்தியாவிலேயே அனைத்து பொருட்களைச் செய்து வெளிநாட்டின் சார்பு இல்லாமல் இயங்கும் திட்டத்தின் கீழ் இந்த பஸ் முழுவதுமாக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டதாகிறது. மேலும் இது சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத விதம் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக உரத் தேவை, சிமெண்ட் தேவை, மற்றும் ஹெவி கமர்ஷில் வாகன தயாரிப்புகளில் இந்தியா தன்னிறைவு அடையும் முயற்சியை எடுத்துவருகிறது.

இந்நிலையில் தற்போது தயாரிக்கப்பட்டுள்ள ஹைட்ரஜன் பஸ் என்பது முற்றிலும் ஹைட்ரஜன் மற்றும் காற்று ஆகியவற்றைப் பயன்படுத்தி இயங்கக் கூடியது. இந்த பஸ்சிலிருந்து கழிவுகளாக வருவது தண்ணீர் தான். இதனால் சுற்றுச் சூழலுக்கு எந்த விதமான மாசும் ஏற்படாது. இதனால் இது சுற்றுச் சூழலுக்கு ஏற்ற வாகனமாக உருவாக்கப்பட்டுள்ளது.

இது தற்போது நடைமுறையில் உள்ள பெட்ரோல், டீசல் வாகனங்களுடன் ஒப்பீடும் போது நீண்ட தூரம் பயணிக்கும் ஒரு பேருந்து ஒரு ஆண்டிற்கு 100 டன் அளவிலான CO2-ஐ வெளியிடும். ஆனால் ஹைட்ரஜன் பஸ்களில் எந்த வித CO2 கழிவுகளும் வெளியாகிறது. ஒரு பஸ்சிற்கே ஆண்டிற்கு 100 டன் என்றால் தினந்தோறும் எத்தனை பஸ்கள் இயங்குகின்றன. இதனால் எவ்வளவு கழிவுகள் வெளியேறும் என்பதைக் கணக்கிட்டுக்கொள்ளுங்கள். இதை ஹைட்ரஜன் பஸ்கள் குறைக்கிறது.

இது மட்டுமல்ல டீசல் பஸ்களை விட ஹைட்ரஜன் பஸ்கள் செயல்படுவதற்கான கட்டணம் மிகவும் குறைவு, இதனால் ஹைட்ரஜன் பஸ்கள் பயன்பாட்டிற்கு வந்தால் மிகப்பெரிய அளவில் போக்குவரத்துத் துறையில் மாற்றம் ஏற்படும். குறைந்தவிலையில் பயணம் என்பது சாத்தியம் ஆகும். ஆனால் இவ்வாறாக ஹைட்ரஜன் பஸ்களை தயாரிப்பது என்பது சற்று விலை அதிகம் செலவாகும்.


Click it and Unblock the Notifications