ஒரு சின்ன கண்ணாடி இருந்திருந்தா இந்த 3 வயசு குழந்தையை காப்பாத்தியிருக்கலாம்! பதற வைத்த விபத்திற்கு காரணம் இது
கடலூர் மாவட்டத்தில் பள்ளி வாகனம் மோதி 3 வயது சிறுவன் பரிதாபமான பலியான சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. வாகனத்தில் உள்ள ஒரு கண்ணாடி இல்லாததால் தான் இந்த விபத்து என்பது ஏற்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. வாகனங்களில் இந்த கண்ணாடி ஏன் அவசியம் இந்த கண்ணாடிக்கும் இந்த விபத்துக்கும் என்ன சம்பந்தம் என்ற விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை எடுத்த மேல்மாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் சௌந்தர்ராஜன். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகிறார். அவர் பள்ளி சென்று வருவதற்காக பள்ளியில் இருந்து அமைக்கப்பட்ட வேன் ஒன்று இவர் வீட்டு வாசலுக்கே வந்து இவரை அழைத்து செல்லும் வசதியை செய்து தருகிறது.

இந்நிலையில் இவரது மூத்த மகன் தினமும் தனது பள்ளி வேனிலேயே இல்லையே பள்ளிக்கு சென்று வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று காலையில் சௌந்தர்ராஜன் தனது மூத்த மகனை பள்ளி வேனில் ஏற்றி அனுப்புவதற்காக அழைத்து சென்றார். அப்பொழுது அவருடன் மூன்று வயதான அவரது இளைய மகனும் சென்று உள்ளார்.
பள்ளி வேனில் தனது மூத்த மகனை ஏற்றுவதில் கவனமாக இருந்த சௌந்தர்ராஜன் தனது இளைய மகனை கவனிக்காமல் இருந்தார். இந்த நேரத்தில் தனது தந்தையின் கவனத்தில் இல்லாமல் வேனின் முன் பகுதியில் சென்று சௌந்தர்ராஜன் இளைய மகன் விளையாடிக் கொண்டிருந்தார். ஆபத்தை உணராமல் மூன்று வயது சிறுவன் வேன் முன்னாள் விளையாடிக் கொண்டிருந்தது வேனில் இருந்த டிரைவருக்கு தெரியவில்லை.

இதனால் மாணவர்கள் யார் எல்லாம் சீட்டில் அமர்ந்ததும் அவர் வேனை எடுக்க முன் வந்தார். முன்பக்கம் 3 வயது சிறுவன் இருப்பது தெரியாமல் அவர் வேனை எடுத்ததில் வேன் அவர் மீது மோதியது. இதில் சௌந்தரராஜன் இளைய மகன் மூச்சு பேச்சு இல்லாமல் விழுந்து கிடந்தார். இதை கண்டு பதறி துடித்த சௌந்தர்ராஜன் தனது இளைய மகனை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு தூக்கி சென்றார்.
அப்பொழுது மூன்று வயது சிறுவனை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக சௌந்தரராஜன் இடம் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது பள்ளி வேன் டிரைவர் சரியாக கவனிக்காமல் வேலை நடத்தியதால் தற்போது மூன்று வயது சிறுவனின் உயிர் பரிதாபமாக போய் உள்ளது. இதற்கு முக்கியமான காரணம் பிளாக் ஸ்பாட் தான்.

பொதுவாக வாகனங்களில் டிரைவர் அமர்ந்திருக்கும் பகுதியிலிருந்து வாகனத்தை முழுவதுமாக கவனிக்க ஆங்காங்கே கண்ணாடிகள் வைக்கப்பட்டிருக்கும் இருந்தாலும் ஒரு சில இடங்களில் இருக்கும் பொருட்களை கவனிக்க முடியாத சூழ்நிலை ஏற்படும் இப்படியாக உயரமான வேனில் மேலே உட்கார்ந்து இருந்த டிரைவருக்கு வேனின் முன்னால் மூன்று வயது சிறுவன் விளையாடிய சம்பவத்தை பார்க்க முடியாத சூழ்நிலை இருந்திருக்கும்.
இதன் காரணமாகவே முன் பக்கம் சிறுவன் இருப்பது தெரியாமல் வேன் டிரைவர் வேலை நகற்றி உள்ளார். பொதுவாக இப்படி உயரமான இடத்தில் டிரைவர் சீட் இருந்தால் அவர் வேன் முன் பகுதியில் இருக்கும் விஷயங்களை பார்ப்பதற்காக வேனை விட முன்னாள் நீட்டியபடி கண்ணாடி ஒன்று கீழ்நோக்கி இருக்கும். டிரைவர் சீட்டில் இருந்து பார்த்தால் வேனுக்கு முன் பகுதியில் என்ன இருக்கிறது என்பதை அந்த கண்ணாடியில் தெரியும்.
இந்த கண்ணாடி குறிப்பிட்ட பள்ளி வேலை இருந்ததாக தெரியவில்லை. கண்ணாடி இருந்திருந்தால் டிரைவர் கண்ணாடியை கவனித்ததன் மூலம் அங்கு ஒரு குழந்தை விளையாடிக் கொண்டிருப்பது அவருக்கு தெரிந்திருக்கும். இதனால் விபத்து தவிர்க்கப்பட்டிருக்கும். இந்த ஒரு சிறிய கண்ணாடி இல்லாத குறை தான் இன்று ஒரு உயிரையே காவு வாங்கி உள்ளது.
கண்ணாடி இல்லை என்றாலும் வேனில் 360 டிகிரி கேமரா தொழில்நுட்பம் பொருத்தப்பட்டிருந்தால் வேலை சுற்றியுள்ள அனைத்தும் டிரைவரின் முன்னால் உள்ள ஸ்கிரீனில் தெரிந்து இருக்கும். இப்படி நடந்திருந்தாலும் விபத்து தவித்து இருக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளன. ஆனால் இந்த வேனில் இந்த 360 டிகிரி கேமரா தொழில்நுட்பம்சமும் கிடையாது. இதன் காரணமாக இன்று ஒரு மூன்று வயது குழந்தை உயிரிழந்தது தான் மிகப்பெரிய சோகமான சம்பவம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பள்ளி வாகனம் என்பது மற்ற பொது வாகனங்களை விட மிக பாதுகாப்பாக இருக்க வேண்டிய வாகனமாகும். குழந்தைகள் அதிகம் பயன்படுத்தும் வாகனம் என்பதால் இந்த இடங்களில் பாதுகாப்பு அவசியம். இதனால் பள்ளி வாகனங்களை வைத்திருக்கும் பள்ளி நிர்வாகத்தினர் அதன் பாதுகாப்பு அம்சங்கள் சின்ன சின்ன விஷயமாக இருந்தாலும் எந்தவித யோசனையும் இல்லாமல் அதை செய்து விடுவதே நல்லது.


Click it and Unblock the Notifications









