தம்பிக்காக ஆசையாக வாங்கிய பைக்கை அழுது கொண்டே ஏலம் எடுத்த அக்கா! இந்த ஏலம் எப்படி நடக்குது தெரியுமா?

கடலூர் மாவட்டத்தில் போதை வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஏலம் விடும் நிகழ்ச்சியில் தன் தம்பிக்காக ஆசையாக வாங்கி தந்த பைக்கை ஏலம் எடுக்க அக்கா அழுதபடியே ஏலம் எடுத்த வீடியோ காட்சிவெளியாகி வைரலாக பரவி வருகிறது.இப்படியாக போதை வழக்கில் பிடிப்பட்ட பைக்குகள் எப்படி ஏலம் விடப்படுகிறது? இதை ஏலம் எடுக்க என்ன செய்ய வேண்டும்? விரிவாக காலாம் வாருங்கள்.

கடலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு மற்றும் காவல் நிலையங்களில் போதை பொருள் கடத்தல் வழக்குகளில் பறிமுதீல் செய்யப்பட்ட 1 கார் மற்றும் 26 பைக்ககள் என மொத்தம் 27 வாகனங்கள் ஏலம் விடப்பட்டது. இந்த வாகனங்கள் எல்லாம் ஆயுதப்படை மைதயத்தில் வைத்து ஏலம் விடப்டட்டது.

Cuddalore Vehicle Auction

பொதுவாக வழக்குகளில் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டால் அந்த வழக்கு தொடர்புடைய வாகனங்கள் உரிய நபரிம் திரும்ப வழங்கப்படாது. மாறாக இதை போலீசாரே குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு ஏலம் விடுவார்கள். ஏலம் குறித்த பொது அறிவிப்பு வரும். அந்த ஏத்தில் கலந்து கொள்ள முன்பணம் செலுத்த டோக்கன்களை பெற வேண்டும். இப்படியாக டோக்கன் பெற்றவர்கள் மட்டுமே ஏலத்தில் கலந்து கொள்ள முடியும். இந்நிலையில் இந்த வாகனங்கள் ஏலம் கேட்பவர்கள் சொன்ன தொகையில் டோக்கனிற்காக வழங்கிய தொகை கழித்து மீதம் உள்ள பணத்தை செலுத்தி வாகனத்தை எடுத்து செல்லலாம். வாகனம் வாங்காதவர்கள் டோக்கனை செலுத்தி அவர்கள் செலுத்திய முன்பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ள முடியும்.

இப்படியாக வாகனம் ஏலத்திற்கு வரும் போது அதன் கண்டிஷன் மற்றும் அது பதிவு செய்யப்பட்ட தேதி, அது எவ்வளவு பயன்படுத்தப்பட்டுள்ளது. தற்போது அதன் உதிரி பாகங்களின் நிலை, அந்த வாகனத்திற்கு முன்னர் இருந்த அபராதம் எல்லாம் கணக்கிடப்பட்டு அது ஆரம்ப விலையாக நிர்ணயம் செய்யப்படும். இந்த விலையிலிருந்து அதிகமாக கேட்கும் நபர்களுக்கு இந்த வாகனம் வழங்கப்படும். இந்த வாகனம் வழக்கில் சிக்கிய வாகனம் என்பதால் அதை வாங்கினால் பிரச்சனை வரும் என கருத வேண்டாம்.

இந்த வாகனம் ஏலம் விடும்போது போலீசார் இந்த வாகனம் வழக்கில் சிக்கி ஏலம் விடப்பட்டதால் இதன் மீது உள்ள வழக்கிலிருந்து இந்த வாகனத்தை நீக்கிவிடுவார்கள். மேலும் ஆரம்ப விலையுடன் வானத்தின் மீது உள்ள அபராத தொகை சேர்க்கப்படுவதால் இந்த வாகனம் அபராதம் ஏதுவும் நிலுவையில் இல்லாத வாகனமாக மாற்றியே பின்னர் ஏலம் விடப்படும். இதனால் அதை ஏலம் எடுப்பதில் எந்த சிக்கல்களும் வராது.

குறிப்பிட்ட சம்பவத்தில் தனது தம்பிக்கு தான் ஆசையாக வாங்கி கொடுத்த பைக் போதை பொருள் கடத்தல் வழக்கில் போலீசில் பிடிபட்டது.இந்தபைக் ஏலத்திற்கு வருவதை அறிந்த அக்கா அந்த ஏலத்தில் கலந்து கொண்டு தான் ஆசையாக வாங்கி கொடுத்த பைக்கை எப்படியாவது மீட்க வேண்டும் என முயற்சி செய்தார். இந்த பைக் ஏலத்திற்கு வரும் போது ஒரு பெண் இதை ரூ1 லட்சத்திற்கு ஏலம் கேட்டார். மற்றொருவர் ரூ1.10 லட்சத்திற்கு ஏலம் கேட்டார். இதனால் அக்கா தான் அந்தபைக்கை ஏலம் எடுக்க முடியாதோ என கதறி அழுதார்.

இதை பார்த்த அங்கிருந்தஒருவர் தன் தம்பிக்கு வாங்கி கொடுத்த பைக்கை மீட்க அக்கா போராடுவதாகவும் இதனால் மற்றவர்கள் விட்டு கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். அதன்படி அங்கிருந்தவர்கள் விட்டு கொடுத்த நிலையில் இவர் இந்தபைக்கை ரூ1.12 லட்சத்திற்கு ஏலத்திற்கு எடுத்து பைக்கை மீட்டார்.

இந்த ஏலத்தில் மொத்தம் 23 பைக் மற்றும் 1 கார் ஏலம்போனது. இதன் மூலம் ஜிஎஸ்டி சேர்த்து அரசுக்கு ரூ7,25,346 வருமானமாக வந்தது. இதில் ஜிஎஸ்டி செலுத்தியது போக பாக்கி தொகையை அரசு எடுத்துக்கொள்ளும். இந்தவழக்கில் சிக்கியவர்களுக்கு பைக் கிடைக்காது. போதை வழக்கில் ஒரு வாகனம் சிக்கினால் அந்த வாகனத்தை வழக்கு நிரூபிக்கப்பட்டால் மீட்க முடியாது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: போதை வழக்கில் சிக்கிய வாகனங்கள் குறைந்தவிலையில் ஏலத்துக்க வருவதால் டூவீலர் செகண்ட் ஹேண்ட் சேல்ஸ் செய்பவர்கள் பலர் இந்த ஏலத்தில் கலந்து கொண்டு குறைந்தவிலையில் வாகனங்களை ஏலம் எடுப்பார்கள். இதனால் அவர்களுக்கு ஏகப்பட்ட பலர் லாபமாக கிடைக்கும். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Friday, October 31, 2025, 11:15 [IST]
English summary
Cuddalore vehicle auction royal enfield drug case full details
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+