2.0 ஊரடங்கு உத்தரவு: எட்டி பார்த்தாலே தடியடி நடத்தும் போலீஸ்.. வெளியே செல்ல என்ன வழி?

தேசிய ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டிருக்கும் நிலையில் சிலர் அத்தியாவசிய தேவைக்கு வெளியே செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். அப்படியே சென்றாலும் போலீஸாரின் கடுமையான கெடுபிடியில் சிக்கி சின்னா-பின்னமாகும் சூழலே நிலவுகின்றது. இதில் இருந்து தப்பிக்க மற்றும் ஒரு நாள் பாஸ் வாங்க என்ன வழி என்பதை இந்த பதிவில் காணலாம்.

2.0 ஊரடங்கு உத்தரவு: எட்டி பார்த்தாலே தடியடி நடத்தும் போலீஸ்.. வெளியே செல்ல என்ன வழி? எப்படி பாஸ் வாங்குவது?

உலக நாடுகள் அனைத்தையும் தனது கோர பிடியால் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்றது உயிர் கொல்லி கொரோனா (கோவிட்19) வைரஸ். இந்த வைரசின் பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் அனைத்தும் திணறிக் கொண்டிருக்கின்றன. எனவே, தற்காலிக நடவடிக்கையாக சமூக தொற்றைக் குறைக்கும் விதமாக உலக நாடுகள் அனைத்தும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி வருகின்றன.

2.0 ஊரடங்கு உத்தரவு: எட்டி பார்த்தாலே தடியடி நடத்தும் போலீஸ்.. வெளியே செல்ல என்ன வழி? எப்படி பாஸ் வாங்குவது?

உலக வல்லரசு நாடுகளுக்கே இந்நிலைதான். அப்படியானால் வளர்ந்து வரும் நாடாக கருதப்படும் இந்தியாவைப் பற்றி சொல்லவா வேண்டும். இங்கும் இதே நிலைதான் இருந்து வருகின்றது. ஆரம்பத்தில் அங்கு ஒன்றும் இங்கு ஒன்றுமாக காணப்பட்ட வைரஸ் தொற்று, திடீரென நூற்றுக் கணக்கிலும் தொடர்ந்து ஆயிரக் கணக்கிலும் பரவி வருகின்றது. இதன் பரவும் தன்மை காட்டு தீயை விட மிக வேகமாக இருப்பதால் தேசிய ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

2.0 ஊரடங்கு உத்தரவு: எட்டி பார்த்தாலே தடியடி நடத்தும் போலீஸ்.. வெளியே செல்ல என்ன வழி? எப்படி பாஸ் வாங்குவது?

முன்னதாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு கடந்த 14ம் தேதியோடு முடிவடைய இருந்தநிலையில், இதனை வருகின்ற வருகின்ற மே மாதம் 3ம் தேதி வரை நீட்டித்துள்ளார் பிரதமர் மோடி.

ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருப்பதால் மக்கள் வெளியே நடமாடுவது மீண்டும் தடுக்கப்பட்டுள்ளது. அதிலும், அடுத்து வரும் சில நாட்களுக்கு மிக தீவிர கண்கானிப்பை, மக்கள் நடமாட்டத்தை முற்றிலுமாக தடுத்து நிறுத்தும் வகையில் மேற்கொள்ள இருப்பதாக மத்திய, மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன.

2.0 ஊரடங்கு உத்தரவு: எட்டி பார்த்தாலே தடியடி நடத்தும் போலீஸ்.. வெளியே செல்ல என்ன வழி? எப்படி பாஸ் வாங்குவது?

அதேசமயம், சில அத்தியாவசிய தேவைக்கு மட்டும் மக்கள் வெளியில் சென்றுவர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, சுகாதாரப் பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட சில அத்தியாவசிய தேவைகளைச் சார்ந்து பணியாற்றுபவர்களுக்கும் சிறப்பு பாஸ் திட்டத்தின் அடிப்படையில் வெளியே நடமாட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

2.0 ஊரடங்கு உத்தரவு: எட்டி பார்த்தாலே தடியடி நடத்தும் போலீஸ்.. வெளியே செல்ல என்ன வழி? எப்படி பாஸ் வாங்குவது?

ஆனால், அவர்கள் வெளியே நடமாடுகையில் உரிய பாதுகாப்பு கவசங்களான முகமூடி, கிருமி நாசினி உள்ளிட்டவற்றைக் கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதையேதான் அத்தியாவசியத் தேவைக்காக வெளியில் செல்லுபவர்கள் கடைபிடிக்க வேண்டும் என மக்களுக்கு அரசுகள் அறிவுறுத்தியுள்ளன.

2.0 ஊரடங்கு உத்தரவு: எட்டி பார்த்தாலே தடியடி நடத்தும் போலீஸ்.. வெளியே செல்ல என்ன வழி? எப்படி பாஸ் வாங்குவது?

இதைமீறி, முக கவசம் இல்லாமல் சாலையில் செல்பவர்களுக்கு ரூ. 500 அபராதம் வசூலிக்க வேண்டும் என தமிழக காவல்துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், அத்தியாவசிய தேவையைத் தவிர்த்து கல்யாணம், மருத்துவம் மற்றும் இறப்பு ஆகியவற்றிற்கு செல்லவும் அந்தந்த மாநில அரசுகள் சிறப்பு அனுமதி வழங்கி வருகின்றது. இதனை குறிப்பிட்ட மாநில அரசுகளின் அதிகாரப்பூர்வ தளத்தில் மட்டுமே விண்ணப்பித்து பெற முடியும்.

2.0 ஊரடங்கு உத்தரவு: எட்டி பார்த்தாலே தடியடி நடத்தும் போலீஸ்.. வெளியே செல்ல என்ன வழி? எப்படி பாஸ் வாங்குவது?

இதைப் பெற்று வெளியே சென்றால் மட்டுமே போலீஸின் தடியடி மற்றும் கடுமையான நடவடிக்கையில் இருந்து தப்பிக்க முடியும். இதனை எவ்வாறு பெறுவது என்பதில் பலருக்கு சந்தேகம் நிலவி வருகின்றது. அதனை விளக்கும் வகையில் இந்த பதிவை நாங்கள் வெளியிட்டுள்ளோம்.

2.0 ஊரடங்கு உத்தரவு: எட்டி பார்த்தாலே தடியடி நடத்தும் போலீஸ்.. வெளியே செல்ல என்ன வழி? எப்படி பாஸ் வாங்குவது?

இதோ நாம் கடைபிடிக்க வேண்டியவை:

நிலை 1: குறிப்பிட்ட மாநிலம், யூனியன் பிரதேசம் அல்லது நகரத்தின் அதிகாரப்பூர்வ அரசாங்க வலைத்தளத்திற்கு செல்ல வேண்டும். அதில், கொரோனாவிற்கான சிறப்பு பக்கம் அல்லது 'இ-பாஸ்' என லிங்க் வழங்கப்பட்டிருக்கும். அதனைக் க்ளிக் செய்து உள் நுழைய வேண்டும்.

நிலை 2: அந்த லிங்கிற்குள் சென்ற பின்னர் குறிப்பிட்ட தகவல்களை அது கேட்கும். அந்த விவரங்களையும் நிரப்ப வேண்டும். தொடர்ந்து, ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் (தேவைப்பட்டால்).

2.0 ஊரடங்கு உத்தரவு: எட்டி பார்த்தாலே தடியடி நடத்தும் போலீஸ்.. வெளியே செல்ல என்ன வழி? எப்படி பாஸ் வாங்குவது?

நிலை 3: ஆவணங்கள் பதிவேற்றிய பின்னர் உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

நிலை 4: வெளியே செல்வதற்கான ஒப்புதல் கடிதம் அந்த திரை வாயிலாகவே வழங்கப்படும் அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து உங்களுக்கு ஒரு செய்தி வரும்.

நிலை 5: இதன் பின்னர் அதிகாரி அல்லது அரசு தளத்தில் இருந்து பெற்ற ஒப்புதல் கடிதத்தை கையில் எடுத்துக் கொண்டு தாராளமாக வெளியில் செல்லலாம்.

2.0 ஊரடங்கு உத்தரவு: எட்டி பார்த்தாலே தடியடி நடத்தும் போலீஸ்.. வெளியே செல்ல என்ன வழி? எப்படி பாஸ் வாங்குவது?

ஆனால், முகக்கவசம் போன்ற கிருமி தொற்றிலிருந்து விலக்கி வைக்கும் கவசங்களை அணிந்தவாறு மட்டுமே செல்ல வேண்டும். மாறாக, ஒப்புதல் வாங்கிவிட்டேன் எனக் கூறிக் கொண்டு எந்த பாதுகாப்பு அம்சமும் இல்லாமல் வெளியே சென்றால் அபராதம், வழக்கு பதிவு உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு ஆளாக நேரிடும்.

எனவே, அரசு தளத்தைப் பயன்படுத்தி தகவல்களை உள்ளீடு செய்யும்போது உண்மையான தகவல்களை மட்டுமே பதிவிட வேண்டும்.

2.0 ஊரடங்கு உத்தரவு: எட்டி பார்த்தாலே தடியடி நடத்தும் போலீஸ்.. வெளியே செல்ல என்ன வழி? எப்படி பாஸ் வாங்குவது?

ஏனென்றால், அதிகாரிகள் உரிய ஆய்வு செய்த பின்னரே உங்களுக்கான பாஸை (PASS) வழங்குவார்கள். இதில், முறைகேடு ஏதேனும் கண்டுபிடிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கைக்கு ஆளாக்காப்படும்.

சென்னை வாசிகள் இந்த பாஸைப் பெற இங்கு கொடுக்கப்பட்டுள்ள லிங்கை க்ளிக் செய்யவும். இதேபோன்று மாவட்ட ஆட்சியரைத் தொடர்புகொண்டு பாஸ் பெறுவதற்கான பொது தளம் ஒன்றும் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அதில் உள் நுழைய இங்கே க்ளிக் செய்யவும்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Coronavirus Lockdown: How To Apply For Curfew Pass, Process, Requirements & All Other Details. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X