இந்தியாவில் கஸ்டம் பைக் தயாரிப்பு பற்றிய சிறப்பு தகவல் தொகுப்பு

By Saravana

எல்லோரையும் போல் இல்லாமல் எதிலும் வித்தியாசமாக இருக்க நினைப்பதில் எல்லோருக்கும் ஆர்வமும், ஆவலும் இருப்பது இயல்பு. இந்த ஆர்வம் பைக் ஆர்வலர்களிடையே சற்று அதிகமிருக்கும். அதில் மிகுதியான ஆர்வம் கொண்ட பலர் தங்களது எண்ணத்தை போல் பைக்குகளை உருவாக்கி ஓட்டுவதில் அலாதி மகழ்வை பெறுகின்றனர். பார்ப்பதற்கு விசித்திரமும், வித்தியாசமும் கலந்த இந்த பைக்குகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்கின்றன.

கஸ்டம் பைக் விரும்பிகளின் தாகத்தை தணிக்கும் விதத்தில் இந்தியாவில் தற்போது கஸ்டம் பைக்குகளை உருவாக்குபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. நம் நாட்டில் பெரும்பாலும் ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள்களின் அடிப்படையிலேயே கஸ்டம் பைக்குகளை உருவாக்குகின்றனர்.

விதிவிலக்காக சில நிறுவனங்கள் தற்போது ஹார்லி டேவிட்சன் உள்ளிட்ட பைக்குகளையும் கஸ்டம் செய்யும் அளவுக்கு வளர்ந்துள்ளனர். அமெரிக்காவில் தோன்றிய இந்த கலை தற்போது நம் நாட்டிலும் பிரபலமாகி வருகிறது. இந்தியாவில் முன்னணி வகிக்கும் சில கஸ்டம் பைக் நிபுணர்கள் மற்றும் கஸ்டம் பைக்குகள் பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களை ஸ்லைடரில் தொகுத்துள்ளோம்.

ராஜ்புத்னா கஸ்டம் பைக்

ராஜ்புத்னா கஸ்டம் பைக்

இந்தியாவின் பிரபல கஸ்டம் பைக் நிறுவனமாக ராஜ்புத்னாவை கூறலாம். ஜெய்ப்பூரை சேர்ந்த இந்த நிறுவனத்தை விஜய் சிங் நடத்தி வருகிறார். சிறு வயதிலிருந்து பைக்குகள் மீது கொண்ட ஆர்வம் இந்த தொழிலில் அவரை சிறக்க வைத்துள்ளது.

ஹார்லி வரை கஸ்டம்...

ஹார்லி வரை கஸ்டம்...

சாதாரண மோட்டார்சைக்கிளை கஸ்டம் பைக்காகவும், முழுக்க முழுக்க சொந்தமாகவே பாகங்களை வடிவமைத்து கஸ்டம் பைக்குளையும் உருவாக்கி தருகின்றனர். ஆர்டரின் பேரில் பைக்குகளை ராஜ்புத்னா வடிவமைத்து தருகின்றனர். குறைந்தபட்சம் ஒரு லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை ராஜ்புத்னா கஸ்டம் நிறுவனம் பைக்குகளை மாற்றித் தருகிறது.

விலை விபரம்

விலை விபரம்

ஹார்லி கஸ்டம் பைக்

ராஜ்மாதா என்ற இந்த ஹார்லி அடிப்படையிலான கஸ்டம் மாடலுக்கு ரூ.6 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை கட்டணம் பெறப்படுகிறது.

500சிசி ராயல் என்பீல்டு புல்லட் அடிப்படையிலான மாடல்கள்

ஒரிஜினல் கேங்ஸ்டர்: ரூ.5 லட்சம்

லைட் ஃபூட்: ரூ.5 லட்சம்

நந்தி: ரூ.5 லட்சம்

ராங்காட் ரூ.5 லட்சம்

அகோரி ரூ.5 லட்சம்

யுனோ ரூ.4.75 லட்சம்

350சிசி ராயல் என்பீல்டு மாடல்கள்

8- பால் ரூ.3 லட்சம்

சிங்காரி ரூ.1.5 லட்சம்

லோகோ ரூ.95,000

லாடோ ரூ.4 லட்சம்

பிட்டூ ரூ.2.5 லட்சம்

சூர்மா ரூ.4.5 லட்சம்

 புல்லட்டீர் கஸ்டம்ஸ்

புல்லட்டீர் கஸ்டம்ஸ்

பெங்களூரை சேர்ந்த புல்லட்டீர் பைக் நிறுவனமும் கஸ்டமைஸ் மோட்டார்சைக்கிள்களை உருவாக்குவதில் சிறந்து விளங்குகிறது.

ஒன்லி புல்லட்

ஒன்லி புல்லட்

ராயல் என்பீல்டு புல்லட் அடிப்படையிலான கஸ்டம் மோட்டார்சைக்கிள்களை இந்த நிறுவனம் கஸ்டமைஸ் செய்து கொடுக்கிறது.

விலை விபரம்

விலை விபரம்

பெங்களூர், ஹொரமாவு பகுதியிலிருந்து செயல்படும் இந்த கஸ்டம் பைக் நிறுவனத்தினர் ரூ.1.5 லட்சம் முதல் ரூ.3.5 லட்சம் வரையில் கஸ்டம் மோட்டார்சைக்கிளுக்கு கட்டணம் பெறுகின்றனர்.

வர்தேஞ்சி கஸ்டம் கம்பெனி

வர்தேஞ்சி கஸ்டம் கம்பெனி

மும்பையிலிருந்து செயல்படும் வர்தேஞ்சி நிறுவனம் இந்திய கஸ்டம் பைக் நிறுவனங்களில் மிக பிரபலமாக திகழ்கிறது. மிகச்சிறந்த நிபுணர் குழு கைவண்ணத்தில் கஸ்டம் மோட்டார்சைக்கிள்களை உருவாக்கித் தருகின்றது.

 மாடல்கள்

மாடல்கள்

ராயல் என்பீல்டு புல்லட் மற்றும் தண்டர்பேர்டு அடிப்படையிலான கஸ்டம் மோட்டார்சைக்கிள்களை இந்த நிறுவனம் பல மாடல்களில் தயாரித்து கொடுக்கிறது.

விலை விபரம்

விலை விபரம்

டைப் - 2 ரூ.1.80 லட்சம்

டைப் - 3 ரூ.2.5 லட்சம்

டைப் - 3 ரூ.3.95 லட்சம்

மெட்ராஸ் கஃபே ரேஸர்

மெட்ராஸ் கஃபே ரேஸர்

மோட்டார்ஸ்போர்ட்ஸ் வீரர்கள் மற்றும் ஆர்வலர்கள் நிறைந்த தமிழகத்திலும் பல கஸ்டம் நிறுவனங்கள் செயல்படுகின்றன. சென்னை ஈக்காட்டுத்தாங்கலை சேர்ந்த மெட்ராஸ் கஃபே ரேஸர் நிறுவனம் யமஹா ஆர்எக்ஸ்100 அடிப்படையிலான கஃபே ரேஸர் மாடலை வடிவமைத்து கொடுக்கிறது.

இத மிஸ் பண்ணாதீங்க

இத மிஸ் பண்ணாதீங்க

அமெரிக்காவில் புகழ்பெற்ற ஜேஆர்ல்சைக்கிள்ஸ் கஸ்டம் பைக்குகளை வடிவமைப்பில் புகழ்வாயந்த நிறுவனம். இந்த நிறுவனம் வடிவமைத்த படத்தில் காணும் புதிய கஸ்டம் பைக் வரும் ஜனவரி 17 மற்றும் 18 தேதிகளில் கோவாவில் நடைபெற இருக்கும் இந்தியன் பைக் வீக் திருவிழாவில் காட்சிக்கு வைக்கப்பட உள்ளது. இந்திய பைக் ஆர்வலர்கள் மத்தியில் இந்த பைக் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் என்ன தெரியுமா?

விமான எஞ்சின்

விமான எஞ்சின்

இந்த பைக்கில் விமானங்களில் பயன்படுத்தப்படும் ரோட்டரி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. அமெரிக்க நிறுவனம் இந்தியாவில் தனது தயாரிப்பை முன்னிலைப்படுத்துவதிலிருந்து இந்தியாவின் கஸ்டம் பைக்குகளுக்கு அதிகரித்து வரும் வரவேற்பையும், இந்திய பைக் மார்க்கெட்டின் பக்குவத்தையும் காட்டுவதாக வல்லுனர்கள் குறிப்பிடுகின்றனர்.

வித்தியாசம்

வித்தியாசம்

மிக வித்தியாசமான, அதிக பவர்ஃபுல் கஸ்டமைஸ் பைக்காக இதனை கூறலாம்.

கஸ்டம் பைக் சாம்பியன்ஷிப் போட்டி

கஸ்டம் பைக் சாம்பியன்ஷிப் போட்டி

உலக அளவில் ஏஎம்டி கஸ்டம் பைக் சாம்பியன்ஷிப் போட்டி முதன்மையானதாக கருதப்படுகிறது. ஹார்லி டேவிட்சன் பைக்குகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பைக்குகள், பழைய டிசைன் தாத்பரியத்தில் உருவாக்கப்பட்ட பைக்குகள், ஸ்ட்ரீட் பைக்குகள் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கஸ்டம் பைக்குகள் என பல பிரிவுகளின் கீழ் இந்த போட்டி நடத்தப்படுகிறது. கடந்த மே மாதம் நடந்த இந்த ஆண்டுக்கான பந்தயத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்த முன்னணி நிறுவனங்கள் தங்களது எண்ணத்தில் உருவான கஸ்டம் பைக்குகளை பார்வைக்கு வைத்திருந்தன. அதில், இரண்டு பிரிவுகளின் கீழ் முதலிடத்தை பிடித்த கஸ்டம் பைக்குகளை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

செகண்ட் சிட்டி கஸ்டம்ஸ்

செகண்ட் சிட்டி கஸ்டம்ஸ்

இங்கிலாந்தை சேர்ந்த செகண்ட் சிட்டி கஸ்டம்ஸ் நிறுவனம் Production Manufacturer Class பிரிவில் முதலிடத்தை பிடித்தது. இந்த நிறுவனம் தயாரித்த நாட்டி ஜென்டில்மேன் என்ற பைக் மிகவும் புகழ்வாய்ந்தது. 23 இஞ்ச் முன்புற வீல், 20 இஞ்ச் பின்புற சக்கரத்துடன் வடிவமைக்கப்பட்டிரு்பபதுடன் ஏர்சஸ்பென்ஷன், பெல்ட் டிரைவ் போன்ற பிரத்யேக அம்சங்களுடன் இந்த பைக்கை செகண்ட் சிட்டி கஸ்டம்ஸ் நிறுவனம் வடிவமைத்துள்ளது. 124 கியூபிக் இஞ்ச் எஸ் அண்ட் எஸ் மோட்டார் பொருத்தப்பட்டிருக்கிறது.

ஹார்லி கஸ்டம் பைக்

ஹார்லி கஸ்டம் பைக்

ஏஎம்டி சாம்பியன்ஷிப் போட்டியில் ஹார்லி டேவிட்சன் கஸ்டமைஸ் பிரிவில் தைவானை சேர்ந்த ரஃப் கிராஃப்ட்ஸ் நிறுவனம் முதலிடத்தை பெற்றது. இந்த நிறுவனத்தின் ஸ்டீல்த் புல்லட் பைக்தான் களத்தில் நிறுத்தப்பட்டது.

கஸ்டம் பைக்கின் பிதாமகன்கள் - இண்டியன் லாரி

கஸ்டம் பைக்கின் பிதாமகன்கள் - இண்டியன் லாரி

அமெரிக்காவை சேர்ந்த இண்டியன் லாரி பிரபல கஸ்டம் பைக் நிபுணர். அத்தோடு, பைக் ஸ்டன்டிலும் வல்லவர்.

உலக புகழ்

உலக புகழ்

அத்தோடு, பைக் ஸ்டன்டிலும் வல்லவர். கஸ்டம் பைக் பிதாமகன்களில் ஒருவராக புகழப்பெறுகிறார். டிஸ்கவரி சேனலின் மோட்டார்சைக்கிள் மானியா நிகழ்ச்சியின் மூலம் உலக அளவில் பிரபலமானார். ஆனால்...

பைக் ஸ்டன்டில் மரணம்

பைக் ஸ்டன்டில் மரணம்

2004ம் ஆண்டு ஒரு ஸ்டன்ட் நிகழ்ச்சியில் இன்டியன் லாரி துரதிருஷ்டவசமாக மரணமடைந்தார். இதுபோன்று நின்று ஓட்டும்போதுதான் அவர் கீழே விழந்து மரணமடைந்தார்.

மான்டோ பூராஸ்

மான்டோ பூராஸ்

கஸ்டம் பைக்குகளுக்கு பிள்ளையார் சுழி போட்டவ பிதா மகனாக அமெரிக்காவை சேர்ந்த மான்டோ பூராஸ் புகழப்பெறுகிறார்.

1967 முதல்...

1967 முதல்...

டென்வர்ஸ் சாப்பர்ஸ் என்ற கஸ்டம் பைக் நிறுவனத்தின் 1967 முதல் ஏராளமான கஸ்டம் மோட்டார்சைக்கிள்களை வடிவமைத்து வருகிறார்.

பிரத்யேக மாடல்

பிரத்யேக மாடல்

மான்டோ பூராஸ் வடிவமைத்த மாடல்களில் பிரத்யேக டிசைன் கொண்டது.

ரான் ஃபிஞ்ச்

ரான் ஃபிஞ்ச்

இவரும் அமெரிக்காவை சேர்ந்த பழம்பெரும் கஸ்டம் பைக் நிபுணர்.

ஃபிஞ்ச் கஸ்டம்ஸ்

ஃபிஞ்ச் கஸ்டம்ஸ்

ஃபிஞ்ச் கஸ்டம்ஸ் என்ற பெயரில் பல வித்தியாசமான மோட்டார்சைக்கிள்களை வடிவமைத்து கொடுத்து தனது திறமையின் மூலம் புகழின் உச்சாணியில் இருக்கிறார்.

வரிசை கட்டும் வல்லுனர்கள்

வரிசை கட்டும் வல்லுனர்கள்

அர்லென் நெஸ், ரிக் ஃபேர்லெஸ், பால் யாஃபே, டக் கெயிம், ஃப்ரெட் கோட்லின், ஜெ அலென், ஸ்டீவ் பாய்லஸ் என இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்வதுடன், புதிய புதிய இளம் கஸ்டம் பைக் நிபுணர்களும் இந்த லிஸ்ட்டில் இணைந்து வருகின்றனர்.

 டிவி ஷோக்கள்

டிவி ஷோக்கள்

கஸ்டம் பைக்குகளுக்கு இருக்கும் வரவேற்பை பார்த்து பல டிவி சேனல்கள் பிரத்யேக நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகின்றன. டிஸ்கவரி டர்போ சேனலில் கஸ்டம் பைக் தயாரிப்பு பற்றி அமெரிக்கன் சாப்பர்ஸ் என்ற பெயரில் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

இன்டியன் லாரி சாகச வீடியோ

இன்டியன் லாரி பைக்கில் நின்றபடி செல்லும் வேளையில் தவறி விழந்து இறந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட பைக் பில் ஆஃப் நிகழ்ச்சியின் காணொளியை காணலாம். இதில் அவரது சாகசங்களும் இடம்பெற்றுள்ளன.

அமெரிக்கன் சாப்பர்ஸ் கஸ்டம் பைக் வீடியோ

அமெரிக்கன் சாப்பர்ஸ் நிறுவனத்தின் பால் சீனியர் மற்றும் பால் ஜூனியர் இடையிலான வாக்குவாதங்களை டிவியில் பார்த்து ரசித்திருப்பீர்கள். அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இவர்கள் உருவாக்கிய பைக்கை இங்கே காணலாம்.

Most Read Articles
English summary
The Indian biking scene is exploding at a rapid pace. However there is a bunch of bikers who love their custom motorcycles. We look at some of the best custom motorcycle builders in India and Around the world.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X