வித்தியாசமான தோற்றத்தில் சுற்றி திரிந்த ஃபார்ச்சூனர் கார்கள்... அவங்களுக்காக உருவாக்கப்பட்டதா!!

கடந்த சில மாதங்களாக, இராணுவ பச்சை நிறத்திலான சில டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner) கார்கள், மேற்கூரையில் மடிக்கக்கூடிய பெரிய அளவிலான ஆண்டெனாக்கள் உடன் காணப்பட்ட படங்களும், வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் பரவி வந்தன. தற்போது, பொது சாலையில் காட்சித்தந்த அந்தக் கார்கள் இந்திய இராணுவத்திற்குச் சொந்தமானவை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சமீபத்தில், இராணுவத் தகவல் தொடர்பு சாதனங்களுடன் கூடிய ஃபார்ச்சூனர் கார்கள் சாலையில் ஒரு தனியார் வாகன நிறுத்துமிடத்தில் காணப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியானது. அந்த ஃபார்ச்சூனர் கார்கள் இந்திய இராணுவத்தைச் சேர்ந்தவை என்பதை தெரிவிக்கும் வகையில் அந்த காணொளியை 'ஆட்டோ ஜர்னல் இந்தியா' தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தது.

customised toyota fortuner 4x4 cars

இந்திய இராணுவத்தைச் சேர்ந்தவை என்பதை உறுதிப்படுத்தும் விதமாக, வாகனத்தின் கண்ணாடியில் "இராணுவ கடமையில்" (On Army Duty) என ஒரு காகிதம் ஒட்டப்பட்டிருந்தது. அந்த குறுகிய காணொளியை படமெடுத்தவர் எஸ்யூவி வாகனத்தை நெருங்கி, கதவைத் திறக்க முயற்சிப்பதைக் காண முடிந்தது. இருப்பினும், வாகனத்தின் உட்புறம் முழுமையாகக் காட்டப்படவில்லை.

இருப்பினும், வாகனத்தின் மேற்கூரையில் பொருத்தப்பட்டு இருந்த பெரிய மடிக்கக்கூடிய ஆன்டெனாவும், இடதுபுறத்தில் பொருத்தப்பட்டிருந்த கருப்பு நிற உலோக ஏணியும் தெளிவாகத் தெரிந்தன. இந்த நிலையில் தற்போது நமக்கு கிடைத்த தகவல்களின்படி, இந்த டொயோட்டா ஃபார்ச்சூனர் கார்கள் இந்திய இராணுவத்தின் சிக்னல் பிரிவை (Corps of Signals) சேர்ந்தவை ஆகும்.

customised toyota fortuner 4x4 cars

இந்த இராணுவப் பிரிவின் முக்கிய பணி போர்க்களத் தகவல் தொடர்புகளை எளிதாக்குவதும், செயற்கைக்கோள் இணைப்புகளை ஏற்படுத்துவதும் மற்றும் பாதுகாப்பான நிகழ்நேர தரவுப் பரிமாற்றத்தை உறுதி செய்வதும் ஆகும். அதற்கேற்றப்படியே, அந்த ஃபார்ச்சூனர் கார்கள் மேற்கூரையில் செயற்கைக்கோள் தகவல் தொடர்பு ஆண்டெனாக்களைக் கொண்டிருந்தன. அந்த ஃபார்ச்சூனர் கார்களின் உட்புறத் தோற்றம் இன்னும் வெளிவரவில்லை.

இருப்பினும், அவற்றில் அதிநவீன தகவல் தொடர்பு கருவிகள், பேட்டரிகள், ரேடியோக்கள் மற்றும் சென்சார்கள் உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளிப்பகுதியில், அந்த ஃபார்ச்சூனர் கார்கள் இராணுவ பச்சை நிற பூச்சுடன், கருப்பு நிற கதவு கைப்பிடிகள் மற்றும் கன்மெட்டல் சாம்பல் நிற அலாய் சக்கரங்களுடன் காணப்பட்டன.

customised toyota fortuner 4x4 cars

இராணுவ பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த வாகனங்கள் டொயோட்டா ஃபார்ச்சூனரின் சிக்மா 4 (Sigma 4) வகையைச் சேர்ந்தவை. இது 4x4 டிரைவ் சிஸ்டத்தை கொண்ட ஒரு மாடல் ஆகும். எந்தவொரு பாதைக்கும் கொண்டு செல்லும் வகையில் இராணுவ வாகனங்கள் 4x4 டிரைவ் சிஸ்டத்தை கொண்டிருப்பது அத்தியாவசியத் தேவையாகும்.

வாகனத்தின் நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்காக இந்த மாடிஃபை செய்யப்பட்ட ஃபார்ச்சூனர் கார்களில் டீசல் துகள் வடிகட்டி (Diesel Particulate Filter) அமைப்பு அகற்றப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இவை தவிர்த்து, இந்த டொயோட்டா ஃபார்ச்சூனர் கார்களில் பெரும்பாலும் எந்த மாற்றங்களும் அல்லது செயல்திறன் மேம்பாடுகளும் செய்யப்பட்டது போல் தெரியவில்லை.

customised toyota fortuner 4x4 cars

இதனால், டொயோட்டா ஃபார்ச்சூனர் சிக்மா 4 காரில் பொருத்தப்படும் அதே 2.8 லிட்டர் நான்கு-சிலிண்டர் டர்போ டீசல் என்ஜின் தான் இந்த இராணுவ ஃபார்ச்சூனர் கார்களிலும் பொருத்தப்பட்டு இருக்கும். இது மேனுவல் கியர்பாக்ஸ் உடன் அதிகப்பட்சமாக 204 பிஎஸ் சக்தி & 420 என்எம் டார்க் திறனையும், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் 500 என்எம் டார்க் திறனையும் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.

இந்த ஃபார்ச்சூனர் கார்களுக்கு முன்பு, ஜப்பானிய வாகன தயாரிப்பு நிறுவனமான டொயோட்டா, இந்திய இராணுவத்திற்காக மாடிஃபை செய்யப்பட்ட டொயோட்டா ஹிலக்ஸ் (Hilux) பிக்-அப் டிரக்குகளையும் உருவாக்கி வழங்கியுள்ளது. அந்த வாகனங்கள் கள பழுது பார்ப்பு வாகனம் (Field Diagnosis Vehicle) மற்றும் விரைவு தலையீட்டு வாகனம் (Rapid Intervention Vehicle) ஆகிய பணிகளுக்காக வழங்கப்பட்டன. டொயோட்டா ஹிலக்ஸ் வாகனமும் ஃபார்ச்சூனரில் உள்ள அதே 2.8 லிட்டர் டீசல் என்ஜின் மூலம் இயக்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஆக, இந்திய இராணுவத்திற்கு தனது தயாரிப்பு வாகனங்களை வழங்குவதை டொயோட்டா நீண்ட மாதங்களாக மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே இந்த ஃபார்ச்சூனர் கார்கள் இராணுவ தளவாடங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட போது அதுகுறித்த வீடியோக்களும், படங்களும் வெளியாகி உள்ளன. இவ்வாறு இந்திய இராணுவத்திற்கு பிரத்யேகமான வாகனங்களை வழங்குவதை மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ் நிறுவனங்கள் தான் அதிகமாக மேற்கொண்டு வந்த நிலையில், தற்போது டொயோட்டாவும் இந்த பணிகளில் அதிகமாக ஈடுப்பட ஆரம்பித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Sunday, October 26, 2025, 9:17 [IST]
English summary
Customised toyota fortuner 4x4 suv cars for indian army spotted with communications equipments
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X