காதை கிழிக்கும் சத்தம்... ராயல் என்பீல்டு பைக் ஓனர்களின் வாலை ஒட்ட நறுக்கிய போலீஸ்... சூப்பர் ஆக்ஸன்

ராயல் என்பீல்டு பைக் உரிமையாளர்களுக்கு காவல் துறையினர் தக்க பாடம் புகட்டியுள்ளனர். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

காதை கிழிக்கும் சத்தம்... ராயல் என்பீல்டு பைக் ஓனர்களின் வாலை ஒட்ட நறுக்கிய போலீஸ்... சூப்பர் ஆக்ஸன்

இந்திய சட்ட திட்டங்களை பொறுத்தவரையில், கார் அல்லது பைக் போன்ற வாகனங்களில், எந்த வகையான மாடிஃபிகேஷன்களையும் செய்யக்கூடாது. வாகனங்களில் மாடிஃபிகேஷன் செய்வதற்கு அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட வாகனங்களால் அதில் பயணம் செய்பவர்களுக்கு மட்டும் ஆபத்து கிடையாது. சாலையில் பயணிக்கும் மற்றவர்களுக்கும் ஆபத்து நேரிடலாம்.

காதை கிழிக்கும் சத்தம்... ராயல் என்பீல்டு பைக் ஓனர்களின் வாலை ஒட்ட நறுக்கிய போலீஸ்... சூப்பர் ஆக்ஸன்

இந்தியாவை பொறுத்தவரை, ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள்கள்தான் மிகவும் அதிகமாக மாடிஃபிகேஷன் செய்யப்படுகின்றன. அதிலும் குறிப்பாக வெளி மார்க்கெட்களில், மிக குறைவான விலையில் கிடைக்கும் ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்களை பொருத்தி கொள்வதில், ராயல் என்பீல்டு பைக் உரிமையாளர்கள் பலர் ஆர்வம் காட்டுகின்றனர்.

காதை கிழிக்கும் சத்தம்... ராயல் என்பீல்டு பைக் ஓனர்களின் வாலை ஒட்ட நறுக்கிய போலீஸ்... சூப்பர் ஆக்ஸன்

இத்தகைய ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்கள், ஒலி மாசுபாட்டை ஏற்படுத்துகின்றன. அவை உருவாக்கும் இரைச்சல், சாலையில் பயணிக்கும் மற்ற வாகன ஓட்டிகளுக்கு தொந்தரவாக இருக்கிறது. திடீர் சப்தம் காரணமாக, சில சமயங்களில் மற்ற வாகன ஓட்டிகள் பீதியடையும் சம்பவங்களும் கூட நடக்கின்றன. இதனால் அத்தகைய சைலென்சர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

காதை கிழிக்கும் சத்தம்... ராயல் என்பீல்டு பைக் ஓனர்களின் வாலை ஒட்ட நறுக்கிய போலீஸ்... சூப்பர் ஆக்ஸன்

இந்த வரிசையில் தற்போது, தெலங்கானா மாநிலம் சைபராபாத் (Cyberabad) போக்குவரத்து போலீசார், ராயல் என்பீல்டு பைக்குகளில் ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்களை பொருத்தியிருந்தவர்கள் மீது கடும் நடவடிக்கையை எடுத்துள்ளனர். கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக நம்மில் பலரும் தற்போது வீடுகளுக்கு உள்ளேயே முடங்கியுள்ளோம்.

காதை கிழிக்கும் சத்தம்... ராயல் என்பீல்டு பைக் ஓனர்களின் வாலை ஒட்ட நறுக்கிய போலீஸ்... சூப்பர் ஆக்ஸன்

வாகனங்களை இயக்குவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த எச்சரிக்கையை மீறும் நபர்கள் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தேவை இல்லாமல் இயக்கப்படும் வாகனங்களை பறிமுதல் செய்து வரும் அதே நேரத்தில், மற்ற விதிமுறை மீறல்களுக்கு எதிராகவும், போலீசார் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

காதை கிழிக்கும் சத்தம்... ராயல் என்பீல்டு பைக் ஓனர்களின் வாலை ஒட்ட நறுக்கிய போலீஸ்... சூப்பர் ஆக்ஸன்

இந்த வரிசையில், மற்ற வாகன ஓட்டிகளுக்கு தொந்தரவை கொடுக்கும் வகையில் நடந்து கொண்ட இரண்டு ராயல் என்பீல்டு பைக் ரைடர்கள் மீது சைபராபாத் போக்குவரத்து போலீசார் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளனர். அவர்கள் இருவரும் தங்கள் பைக்கின் எக்ஸாஸ்ட் அமைப்பில், மாடிஃபிகேஷன்களை செய்திருந்தனர். இது இரைச்சலை ஏற்படுத்தியது.

காதை கிழிக்கும் சத்தம்... ராயல் என்பீல்டு பைக் ஓனர்களின் வாலை ஒட்ட நறுக்கிய போலீஸ்... சூப்பர் ஆக்ஸன்

அவர்கள் இருவர் மீதும் சட்டப்பூர்வமான நடவடிக்கையை எடுத்ததுடன் மட்டுமல்லாது, அவர்களின் பைக்கில் இருந்து ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்களையும் போலீசார் அகற்றினர். முன்பெல்லாம் இத்தகைய பைக் ரைடர்களுக்கு அபராதம் விதிப்பது போன்ற நடவடிக்கைகளை மட்டும்தான் போலீசார் எடுத்து வந்தனர். ஆனால் சமீப காலமாக மெக்கானிக்குகள் உதவியுடன் சைலென்சர்களை அகற்றுகின்றனர்.

காதை கிழிக்கும் சத்தம்... ராயல் என்பீல்டு பைக் ஓனர்களின் வாலை ஒட்ட நறுக்கிய போலீஸ்... சூப்பர் ஆக்ஸன்

ஒரு சில இடங்களில், இப்படி பறிமுதல் செய்யப்பட்ட ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்கள் மொத்தமாக வைத்து அழிக்கப்படுகின்றன. ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்களை காவல் துறையினர் அழிக்கும் வீடியோக்கள் பலவற்றை இணையத்தில் காணலாம். எனவே உங்கள் பைக்கில் ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர் பொருத்தப்பட்டிருந்தால், அதனை உடனே அகற்றி விடுவது நல்லது.

காதை கிழிக்கும் சத்தம்... ராயல் என்பீல்டு பைக் ஓனர்களின் வாலை ஒட்ட நறுக்கிய போலீஸ்... சூப்பர் ஆக்ஸன்

ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுத்து வரும் அதே நேரத்தில், மற்ற விதிமுறை மீறல்களுக்கு எதிராகவும் சைபராபாத் போலீசார் தீவிரமாக செயலாற்றி வருகின்றனர். இதன்படி கடந்த மாத தொடக்கத்தில், ரியர் வியூ மற்றும் சைடு வியூ மிரர்களை, வாகனங்களில் பொருத்தும்படி, வாகன ஓட்டிகளுக்கு போலீசார் உத்தரவிட்டனர்.

காதை கிழிக்கும் சத்தம்... ராயல் என்பீல்டு பைக் ஓனர்களின் வாலை ஒட்ட நறுக்கிய போலீஸ்... சூப்பர் ஆக்ஸன்

இல்லாவிட்டால் வழக்கு பதிவு செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்தனர். சாலை விபத்துக்களை தடுப்பதில், ரியர் வியூ மிரர்களும், சைடு வியூ மிரர்களும் முக்கிய பங்காற்றுகின்றன. எனவே விபத்துக்களை தடுக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக வழக்கு பதிவு செய்யப்படும் என்ற எச்சரிக்கையை சைபராபாத் போக்குவரத்து போலீசார் விடுத்தனர்.

காதை கிழிக்கும் சத்தம்... ராயல் என்பீல்டு பைக் ஓனர்களின் வாலை ஒட்ட நறுக்கிய போலீஸ்... சூப்பர் ஆக்ஸன்

சைபராபாத்தில் தற்போது சிக்கியுள்ள இரு ராயல் என்பீல்டு பைக் ரைடர்கள் மீது சட்டப்பூர்வமாக அபராதம் விதிக்கப்பட்டிருப்பதுடன், அவர்களுடைய ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்களும் அகற்றப்பட்டுள்ளன. லாக் டவுன் நேரத்தில், போலீசார் இதை எல்லாம் கண்டு கொள்ள மாட்டார்கள் என அலட்சியமாக இருக்காமல், ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர் இருந்தால் அதனை உடனடியாக நீக்கி விடுங்கள்.

More from DriveSpark

Article Published On: Wednesday, July 1, 2020, 14:36 [IST]
English summary
Cyberabad: Royal Enfield Riders Fined For Using Aftermarket Exhausts. Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+