சைக்கிளில் 1200கிமீ தூரம் பயணம் செய்த இளம்பெண்... ஜோதிகுமாரியின் தந்தை மரணம்!

கடந்த ஆண்டில் ஊரடங்கின்போது, 'சைக்கிள் பெண்'-ஆக இணையத்தில் வலம்வந்த ஜோதி குமாரியின் தந்தை இறந்த செய்தி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சைக்கிளில் 1200கிமீ தூரம் பயணம் செய்த இளம்பெண்... ஜோதிகுமாரியின் தந்தை மரணம்!

கடந்த மார்ச் மாதத்தில் இருந்து இந்தியாவில் பரவ துவங்கிய கொரோனா வைரஸினால் பலர் தங்களது இயல்பு வாழ்க்கையை இழந்தனர். குறிப்பாக ஆரம்பத்தில் நாடு தழுவிய அளவில் போடப்பட்ட ஊரடங்கு உத்தரவுகள் பலருக்கு தலையில் இடியாக இறங்கியது.

சைக்கிளில் 1200கிமீ தூரம் பயணம் செய்த இளம்பெண்... ஜோதிகுமாரியின் தந்தை மரணம்!

ஆனால் அதை தவிர்த்து மாற்றுவழி வேறு எதுவும் இல்லாததினால் மக்கள் அனைவரும் ஏற்று கொண்டனர். தற்போதும் தமிழகம் உள்பட பெரும்பான்மையான மாநிலங்களில் ஊரடங்கு அமலில் இருந்தாலும், அந்த சமயத்தில் நாடு முழுவதும் கொண்டுவரப்பட்ட ஊரடங்கிற்கு அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டனர்.

சைக்கிளில் 1200கிமீ தூரம் பயணம் செய்த இளம்பெண்... ஜோதிகுமாரியின் தந்தை மரணம்!

இந்திய ஆட்டொமொபைல் துறை வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்தது. குறிப்பாக 2020 ஏப்ரலில் நாடு முழுவதும் டீலர்ஷிப் மையங்கள் மூடப்பட்டதால், ஒரு வாகனம் கூட விற்கப்படவில்லை. ஆட்டோமொபைல் துறை இவ்வாறு இருக்க, பிழைப்பை தேடி வேறு மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்தவர்களின் கதி மேலும் மோசமானது.

சைக்கிளில் 1200கிமீ தூரம் பயணம் செய்த இளம்பெண்... ஜோதிகுமாரியின் தந்தை மரணம்!

தமிழ்நாட்டில் கட்டிட வேலை, மெட்ரோ சுரங்க வேலை உள்ளிட்ட பணிகளில் ஈடுப்பட்டு வந்த வட இந்தியர்கள் அடுத்து என்ன செய்வது என்றே தெரியாமல் குழம்பி போய் நின்றனர். ஏனெனில் பேருந்து, இரயில் போக்குவரத்து முற்றிலுமாக அந்த சமயத்தில் ரத்து செய்யப்பட்டு இருந்தது.

சைக்கிளில் 1200கிமீ தூரம் பயணம் செய்த இளம்பெண்... ஜோதிகுமாரியின் தந்தை மரணம்!

இதனால் சிலர் தங்களுக்கு கிடைத்த வாகனங்களில் தங்களது சொந்த ஊர் திரும்ப தயாராகினர். சிலர் பல கிமீ தூரம் நடந்தே தங்களது ஊருக்கு சென்ற பரிதாப நிலையினையும் கண்டோம். அவ்வாறு தன் தந்தையை சைக்கிளில் அமர வைத்து சுமார் 1200கிமீ பயணம் செய்து ஒட்டு மொத்த இந்தியாவின் கவனத்தையும் ஈர்த்தவர் ஜோதி குமாரி.

சைக்கிளில் 1200கிமீ தூரம் பயணம் செய்த இளம்பெண்... ஜோதிகுமாரியின் தந்தை மரணம்!

இந்தியாவை தாண்டி அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் மகள் இவங்கா ட்ரம்ப் வரையில் ஜோதி குமாரியின் இந்த விடா முயற்சிக்கு பாராட்டுக்கள் கிடைத்தன. இந்த நிலையில் சமீபத்தில் ஜோதி குமாரியின் தந்தை மோகன் பஸ்வான் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

இணையத்தில் வேகமாக பரவி வரும் இந்த செய்தி பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதுமட்டுமில்லாமல், கஷ்டப்பட்டு 1200கிமீ தூரம் சைக்கிளில் பயணம் செய்து வந்தவர் மாரடைப்பால் உயிரிழந்திருப்பது ஜோதி குமாரியின் சொந்த ஊர் மக்களை சோகத்திற்குள்ளாக்கி உள்ளது.

சைக்கிளில் 1200கிமீ தூரம் பயணம் செய்த இளம்பெண்... ஜோதிகுமாரியின் தந்தை மரணம்!

பீகார் மாநிலம், தார்பங்கா மாவட்டத்தில் ஜோதி குமாரி வசித்து வருகிறார். மோகன் பஸ்வான் ஒரு சிறு விபத்தில் இ-ரிக்‌ஷா ஓட்டி முடியாமல் முடங்கி போனவர். அதோடு அவர்கள் தங்கி இருந்த அறையின் உரிமையாளரும் வாடகை பாக்கிக்காக நெருக்கடி கொடுக்கவே சொந்த ஊருக்கே திரும்பி செல்ல தந்தையும் மகளும் கடந்த ஆண்டில் முடிவெடுத்தனர்.

சைக்கிளில் 1200கிமீ தூரம் பயணம் செய்த இளம்பெண்... ஜோதிகுமாரியின் தந்தை மரணம்!

அதன்படி ஊரடங்குகளில் தளர்வு கொண்டுவரப்பட்ட மே மாதம் 10ஆம் தேதி துவங்கிய இவர்களது சைக்கிள் பயணம் சுமார் 6 நாட்கள் கழித்து 16ஆம் தேதியில் நிறைவடைந்தது. தற்போது தந்தை மறைவால் இந்த ஆறு நாட்கள் பயணத்தை தான் ஜோதி குமாரி நினைத்து பார்த்து அழுது கொண்டிருப்பார்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Father of Bihar's cycle girl Jyoti Kumar, who cycled 1,200 km in lockdown for him, dies of cardiac arrest.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X