GO UNIQ Cycle Mart சார்பில் வெள்ளகோவில் நகரில் சைக்கிள் பேரணி... எதற்காக தெரியுமா?
உலக சைக்கிள் தினத்தை அனுசரிக்கும் விதமாக, வெள்ளகோவில் வட்டார சமுதாய சுகாதார நிலையம் சார்பாக, தொற்றா நோய் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் விதமாக, சைக்கிள் பேரணி நடைபெற்றது. இந்த சைக்கிள் பேரணியை GO UNIQ Cycle Mart நிறுவனத்தினர் ஏற்பாடு செய்து, ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டனர்.
இந்த சைக்கிள் பேரணியில், சுமார் 150-க்கும் மேற்பட்ட சைக்கிள் பந்தய வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். வெள்ளகோவில் சமுதாய சுகாதார நிலையத்தில் தொடங்கிய இந்த சைக்கிள் பேரணி, புதிய பேருந்து நிலையம், புஷ்பகிரி கோவில், வள்ளியரசல், வேப்பம்பாளையம், உப்புபாளையம், பழைய பேருந்து நிலையம் வழியாக சென்று, மீண்டும் அரசு சமுதாய சுகாதார நிலையத்தில் நிறைவடைந்தது.

இந்த சைக்கிள் பேரணி மொத்தம் 21 கிலோ மீட்டர் தொலைவிற்கு நடைபெற்றது. வெள்ளகோவில் அரிமா சங்கத்தினர், மகாத்மா காந்தி நற்பணி மன்றத்தினர், கட்டிட கலைஞர்கள் நலச்சங்கத்தினர், City Cycling Club Vellalovil, Epic Clothing மற்றும் Best Eye Opticals ஆகியோர் உறுதுணையாக இருந்தனர்.
வெள்ளகோவில் தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் மற்றும் வெள்ளகோவில் காவல் துறையினர் பாதுகாப்பு வழங்கினார்கள். இந்த சைக்கிள் பேரணியில் கலந்து கொண்ட அனைவருக்கும் டீ-ஷர்ட் மற்றும் காலை உணவு வழங்கப்பட்டது.


Click it and Unblock the Notifications








