இந்திய விமான படையில் பணி... பள்ளி படிப்பைகூட முடிக்காத சைக்கிள் மெக்கானிக்கிற்கு வீடு தேடி வந்த ஜாக்பாட்!

படித்தால் மட்டும்தான் முன்னேற முடியும், நல்ல வேலை கிடைக்கும் என நினைப்பவர்களில் ஒருவரா நீங்க. உங்களின் இந்த எண்ணத்தை உடைத்தெறியும் வகையில் ஓர் சம்பவம் நம் நாட்டில் அரங்கேறி இருக்கின்றது. படிப்பு மட்டுமே ஒருவரை முன்னேற்ற தேவையானது அல்ல, திறமையும், சாதிக்க வேண்டும் என்கிற துடிப்பும் இருந்தாலும் கூட உலகின் எந்த உச்சத்தையும் எட்ட முடியும்.

இதற்கு மிக சிறந்த உதாரணமான ஓர் சம்பவமே பஞ்சாப் மாநிலத்தில் அரங்கேறி இருக்கின்றது. பஞ்சாப் மாநிலம், ஃபரித்கோட் பகுதியைச் சேரந்தவர் ஹர்ப்ரீத். இவர் ஓர் சைக்கிள் மெக்கானிக் ஆவார். சிறு வயதிலேயே தந்தையை இழந்ததனால் அவரால் பள்ளி படிப்பை மேற்கொள்ள முடியவில்லை. மேலும், குடும்ப பொறுப்பையும் ஏற்கு வேண்டி இருந்தது.

Cycle repairer now paraglider pilot

இந்த நிலையிலேயே ஹர்தீப் தனது குடும்ப வருமானத்திற்காக சைக்கிள் மெக்கானிக் தொழிலை தேர்வு செய்திருக்கின்றார். தந்தை இல்லாத இடத்தையும் அவர் பூர்த்தி செய்திருக்கின்றார். சிறு வயதிலேயே குடும்ப பொறுப்பு, வேலை என அனைத்தும் சூழ்ந்துக் கொண்டதால், மற்ற சிறுவர்கள் அனுபவித்ததை எல்லாம் இவரால் கனவுகூட காண முடியாமல் போயிருக்கின்றது.

இந்த நிலையிலேயே மிகப் பெரிய ஜாக்பாட்டாக இந்திய விமானப் படை வீரர் பணி ஹர்தீப் கிடைத்திருக்கின்றது. அது எப்படி முடியம்?, குறிப்பாக, பள்ளி படிப்பைகூட முழுமையாக முடிக்காதவருக்கு எப்படி இப்படி ஒரு ஜாக்பாட் அடித்திருக்கும் என்கிற சந்தேகமும் அனைவரின் மனதிலும் எழும்பியிருக்கும்.

Cycle repairer now paraglider pilot

ஹர்தீப் சாதாரண சைக்கிள் மெக்கானிக் மட்டுமல்ல, அவருக்கு பாராகிளைடரை உருவாக்கிய அனுபவமும் உண்டு. இந்த அனுபவமே அவருக்கு இந்திய விமான படையில் வேலையை வாங்கிக் கொடுத்திருக்கின்றது. மனதில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவரே ஹர்தீப் இருந்திருக்கின்றார். இதன் அடிப்படையிலேயே, அவர், பாரா கிளைடரை உருவாக்கும் முயற்சியில் இறங்கி இருக்கின்றார்.

அதை உருவாக்கியும்விட்டார். இருவர் வரை அமர்ந்து செல்லுகின்ற வகையிலான பாரா கிளைடரையே அவர் உருவாக்கி இருக்கின்றார். இதை தயாரிக்க அவர் செலவு செய்தது ரூ. 2.5 லட்சம் ஆகும். மோட்டார்சைக்கிளின் எஞ்ஜின் மற்றும் மிதிவண்டியின் உதிரி பாகம் உள்ளிட்டவற்றைக் கொண்டே பாராகிளைடரை அவர் உருவாக்கி இருக்கின்றார்.

Cycle repairer now paraglider pilot

இது பறக்கக் கூடிய பாராகிளைடர் ஆகும். ஹர்தீப்பின் இந்த தனித் திறமையை பார்த்தே இந்திய ராணுவம் தன்னுடைய விமானப் படையில் ஹர்தீப்பை இணைத்திருக்கின்றது. ஹர்தீப் தன்னுடைய கடின உழைப்பின் பலனாக இதை பார்க்கின்றார். 3 ஆண்டுகள் தொடர்ச்சியாக பறக்கும் பாராகிளைடரை உருவாக்க அவர் தன்னை அர்பணித்திருக்கின்றார்.

தான் தயாரித்த பாரா கிளைடருக்கு பாராமோட்டார் என்கிற பெயரை அவர் வைத்திருக்கின்றார். பாராகிளைடரின் உருவாக்கத்தில் சில கார் பாகமும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. ஹர்தீப் தற்போது பாண்டிச்சேரியில் பாரா மோட்டார் பைலட்டாக பணி அமர்த்தப்பட்டு இருக்கின்றார். ஹர்தீபின் கனவு அனைவரும் பயன்படுத்தும் வகையில் பாராகிளைடரை உருவாக்குவதாகும்.

Cycle repairer now paraglider pilot

அதாவது, ஏழை, பணக்காரர் என அனைவரும் பயன்படுத்தக் கூடிய பாராகிளைடரை உருவாக்குவதே அவரின் முக்கிய நோக்கமாகும். மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த ஓர் சிறுவன், தற்போது அனைவரையும் பறக்கச் செய்யும் முயற்சியில் களமிறங்கி இருப்பது ஒட்டுமொத்த இந்தியாவையும் ஆச்சரியத்தில் மூழ்க செய்திருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து

படிப்பு மட்டுமே ஓர் மனிதன் முன்னரே முக்கியம் இல்லை என்பதற்காக சான்றாக இந்த உலகில் பல்வேறு சம்பவங்கள் அரங்கேறி இருக்கின்றன. உள்ளூர் சரவணா ஸ்டோரின் ஸ்டோரியாக இருக்கட்டும், வெளிமாநிலத்தின் ரிலையன்ஸ் அம்பானி ஸ்டோரியாக இருக்கட்டும் அனைவரின் கடந்த காலமும் மிக மோசமானதே. இவர்களின் வளர்ச்சி அபரீதமானது. ஆகையால், முன்னேர வேண்டும் என்கிற விதை நம் மனதில் இருத்தல் வேண்டும். மேலும் அதற்காக உழைக்கவும் வேண்டும். இவையிருந்தால் யாராலும் சாதிக்க முடியும்.

More from DriveSpark

Article Published On: Monday, April 3, 2023, 14:09 [IST]
English summary
Cycle repair boy now indian army pilot here is motivational story
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X