படகுகளின் விலை இவ்வளவு கம்மி தானா? சென்னை வாசிகள் வீட்டுக்கு ஒன்னு வாங்கலாம் போலயே!
சென்னையில் தற்போது பெருமழை பெய்து வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் மக்கள் பலர் படகுகள் மூலம் தப்பி பாதுகாப்பான பகுதிக்கு சென்று வருகின்றனர். தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் பெய்யும் கனமழையால் சென்னை போன்ற நகரங்கள் தண்ணீரில் தத்தளித்து வரும் நிலையில் இனி சென்னையில் வீட்டுக்கு வீடு படகு வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இனி வீடுகளில் என்னென்ன படகுகளை வாங்கலாம் என்ற விவரங்களை காணலாம் வாருங்கள்.
சென்னையில் கடந்த திங்கட்கிழமை முதல் மிக்ஜாம் புயல் காரணமாக கன மழை பெய்து வருகிறது. பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. தற்போது மழை குறைந்து வெயில் அடித்து விட்டாலும், மழை நீர் முழுவதும் வடியாமல் சாலைகளிலேயே தேங்கி நிற்கிறது. இதனால் பல இடங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இதனால் சென்னை மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

மழை நீரில் மக்கள் பலர் வீடுகளில் சிக்கிக் கொண்டதால் அவர்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர். சென்னையில் இவ்வாறு நடப்பது இது ஒன்றும் முதன்முறை கிடையாது. கடந்த 2015 ஆம் ஆண்டு மழை வெள்ளம் ஏற்பட்டு பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
அதன் பின்பு ஒவ்வொரு ஆண்டும் இப்படியாக மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டு கொண்டு வருகின்றனர். அதன் பின்பு பெரிய அளவில் மழை பெய்யாததால் பெரிய அளவில் பாதிப்பில்லாமல் இருந்தாலும் அவ்வப்போது ஒரு சில இடங்களில் இவ்வாறு தண்ணீர் தேங்கி நிற்கும் அவல நிலை நடந்து கொண்டுதான் இருக்கிறது.

2015-ம் ஆண்டு வெள்ளம் வந்தபோது பலர் காமெடியாக இனி வீட்டுக்கு ஒரு படகு வாங்க வேண்டும் என பேசிக்கொண்டு இருந்தார்கள். ஆனால் இன்று அந்த பேச்சு காமெடி இல்லை சென்னையில் வாழும் மக்கள் இன்று நிச்சயம் வீட்டில் படகை வைத்திருக்க வேண்டியது அவசியமாக மாறி வருகிறது. இப்படியாக சென்னை வாசிகள் எந்த படகை வாங்கலாம்? அதன் விலை என்ன? என்ற விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
மழை வெள்ளம் வந்து விட்டால் அதனால் தேங்கும் மழை நீரின் அளவு குறைவாக தான் இருக்கும் அதனால் குறைவான தண்ணீரில் பயணிக்கும் வகையிலான படங்களை தான் நாம் வாங்க வேண்டும். மொத்தமே ஐந்து விதமான படகுகள் தான் குறைவான தண்ணீரில் பயணிக்கும் வகையிலான படகுகளாக மார்க்கெட்டில் விற்பனையாகி வருகின்றன. ராஃப்ட் எனப்படும் பலூன் போன்ற படகு, கயாக் படகுகள், ஸ்கிஃப் படகுகள், எஃப்ஆர்பி படகுகள், பிளாஸ்டிக் படகுகள்.

இதில் ராஃப்ட் எனப்படுவது நீங்கள் மீட்பு பணியில் ஈடுபடும் நபர்கள் பயன்படுத்தும் ஆரஞ்சு நிற படகை பார்த்திருப்பீர்கள் இதுதான் இந்த ராஃப்ட் படமாக ஆகும். இது இரண்டு விதமாக உள்ளன. பிளாஸ்டிக்கில் முழுமையாக செய்யப்பட்ட படகுகளாகவும் உள்ளன. அதே நேரம் பலூன் போன்று காற்றை நிரப்பி பின்பு அதில் பயணிக்கும் படகுகளாகவும் உள்ளன.
இந்த படகு தான் இருப்பதிலேயே குறைந்த விலையில் விற்பனையாகும் படகுகளாக உள்ளன. இரண்டு பேர் பயணிக்கும் படகு மார்க்கெட்டில் ரூபாய் 2500 என்ற விலையிலேயே விற்பனையாகி வருகிறது. ரூபாய் 5000த்துக்கு சிறப்பான படகுகளை கிடைக்கின்றன. இதுவே நான்கு பேர் பயணிக்கும் வகையிலான படகு என்றால் ரூ12,000 வரை செலவு செய்ய வேண்டியது இருக்கும்.
அடுத்ததாக கயாக் வகை படகுகள். இதை நாம் அடிக்கடி கடல் பகுதியில் பார்த்திருக்க கூடும். கடலில் பலர் இந்த படகுகள் மூலம் பயிற்சி பெறுவார்கள் மேலும் தீவுப் பகுதிகளில் இந்த படகு அதிகம் பயன்படுத்தப்படும். ஒரு நபர்கள் அல்லது இரண்டு நபர்கள் மட்டுமே இதில் பயணிக்க கூடிய வகையில் இது வடிவமைக்கப்பட்டு இருக்கும். நல்ல தரமான கயாக் படகுகள் ரூபாய் 12000 என்ற விலையிலேயே மார்க்கெட்டில் விற்பனையாகி வருகிறது.
அடுத்ததாக ஸ்கிஃப் வகை படகுகள். இதை நாம் மீன்பிடி படகுகள் என்று கூட கூறுவோம். சிலர் ஏரிகள் குளங்கள் கடலில் சிறிது தூரம் வரை சென்று மீன் பிடிக்கும் மீனவர்கள் பயன்படுத்தும் படகுகள் இது முழுவதும் பிளைவுட் மரத்தால் ஆனது. இந்த படகை நாம் வாங்கினால் அதை நிறுத்துவதற்கு வீட்டில் ஒரு இடம் ஒதுக்கப்பட வேண்டும்.
இந்த படகை வைத்து வெள்ளம் வந்தால் உடனடியாக தப்பிக்க முடியும். இதில் துடுப்பு போடும் படகுகள் மோட்டார் படகுகள் என இரண்டு விதமாக உள்ளன. மோட்டார் வேண்டும் என்று அதை தனியாக வாங்க வேண்டும் துடுப்புகளுக்கான விலையும் தனி. நாம் மேலே குறிப்பிட்டுள்ளது படகிற்கான விலை மட்டும் தான். இந்த ஸ்கிஃப் வகை படகில் நான்கு பேர் பயணிக்க கூடிய படகு என்றால் ரூபாய் 58 ஆயிரம் செலவு செய்ய வேண்டியது வரும்.
அடுத்ததாக எஃப்ஆர்பி எனப்படும் பைபர் பிளாஸ்டிக் படகுகள். இந்த படகுகள் தான் மழை வெள்ளத்திற்கு ஏற்ற படகுகளாக உள்ளன. இந்த படகுகள் எந்த மாதிரியான காலகட்டத்திலும் உறுதித் தன்மையுடன் இருக்கும். நாம் மேலே முதலில் சொன்ன பலூன் போன்ற படகுகள் கிழிந்து விட்டால் நடுவழியில் நாம் தண்ணீரில் தத்தளிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிடும்.
பிளாஸ்டிக் படகுகள் உடைந்து போக வாய்ப்பு உள்ளன. ஆனால் இந்த பைபர் பிளாஸ்டிக் படகுகள் அவ்வளவு எளிதாக உடையாது மழை வெள்ள நீரில் பயன்படுத்த ஏற்ற படகுகள். ஆனால் இதன் விலை குறைந்தபட்சம் ரூபாய் 45 ஆயிரம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.
கடைசியாக பிளாஸ்டிக் பொருட்கள் இவை கடினமான பிளாஸ்டிக் கொண்டு உருவாக்கப்படுகிறது. இதை மார்க்கெட்டில் ரூபாய் 65,000 என்று விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இந்த வகை படகுகளை வீட்டில் வாங்கினால் அதை வைப்பதற்கு அதிகமான இடம் தேவைப்படும். மேலும் இந்த மாதிரியான போட்டிகளில் துடுப்பு போட்டு பயணிப்பது என்பது சிரமமாக இருக்கும். இதில் மோட்டாரை பொருத்த வேண்டிய அவசியம் இருக்கும்.
படகுகளை பயன்படுத்தப்படும் இன்ஜின்கள் தனியாக விற்பனையாகி வருகின்றன. இந்த இன்ஜின்கள் ரூபாய் 25,000 என்ற விலையில் விற்பனையாகி வருகின்றன. இதை வாங்கி பிளாஸ்டிக் படகுகள் எஃப்ஆர்பி படகுகள் பயன்படுத்த முடியும். இவ்வாறான இன்ஜின்களை பயன்படுத்த முடியாது. சென்னைக்கு இனி வீட்டிற்கு வீடு படகு என்பது ஒரு முக்கிய தேவையாக உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சென்னை வாசிகள் இதை காமெடியாக எடுத்துக் கொள்ளாமல் அடுத்த ஆண்டிற்குள் இதில் ஏதாவது உங்கள் பொருளாதார வசதிக்கு ஏற்ற படகை வாங்கி வைத்துக் கொள்வது அடுத்தாண்டு மழை வெள்ளம் வரும்போது உங்களை பாதுகாக்க உதவும். வீட்டுக்கு ஒரு பைக், கார் என்ற நிலை மாறி தற்போது சென்னைவாசிகளுக்கு வீட்டுக்கு ஒரு படகு தேவையாக மாறி உள்ளது.


Click it and Unblock the Notifications









