ரயிலை சங்கிலி போட்டு கட்டி வைத்த ஊழியர்கள்! சிரிப்பை அடக்க முடியாமல் கலாய்க்கும் நெட்டிசன்கள்! என்ன நடந்தது?

வங்க கடலில் உருவான ரீமல் புயல் நேற்று இரவு முதல் மேற்கு வங்க மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் பாதிப்புகளை ஏற்படுத்திய வகையில் கரையை கடந்தது. இந்த புயல் வருவதற்கு முன்னேற்பாடாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதில் ஒரு பகுதியாக சாலிமர் ரயில்வே நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயில் எல்லாம் சங்கிலிகள் கொண்டு சக்கரங்கள் தண்டவாளத்துடன் கட்டப்பட்டன. இதற்கு என்ன காரணம் என்ற விரிவான விபரங்களை காணலாம்.

வங்க கடலில் கடந்த ஒரு வாரமாக ஏற்பட்ட மாற்றம் காரணமாக ரீமல் புயல் உருவானது. இந்த புயல் எதிர்பார்த்தபடி நேற்று இரவு முதல் மேற்கு வங்க மாநிலத்தில் கரையை கடந்தது. இந்த புயல் கரையை கடக்கும் பகுதிகளில் மத்திய மாநில அரசுகள் முன்னேற்பாடுகளுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டன. பாதிப்பு ஏற்படும் என்ற இடங்களில் எல்லாம் பாதிப்புகளை குறைக்கவும் அல்லது தவிர்க்கவோ தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.

cyclone remal

இதன் ஒரு பகுதியாக மேற்குவங்க மாநிலத்தில் உள்ள சாலிமர் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயில்களில் உள்ள சக்கரங்களை எல்லாம் ரயில்வே ஊழியர்கள் சங்கிலிகள் கொண்டு தண்டவாளத்துடன் இணைத்து கட்டி வைத்தார்கள். இந்த வீடியோவை ஏஎன்ஐ நிர்வாகம் தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு இருந்தது. இது பலருக்கும் ஆச்சரியப்படுத்தியது.

வானிலை ஆய்வு மையம் சுமார் 110 முதல் 120 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் எனவும் அதிகபட்சமாக 135 கிலோ மீட்டர் வேகம் வரை காற்று செல்ல கூடும் என எச்சரித்து இருந்த நிலையில், இந்த வேகத்தில் ரயில்கள் எல்லாமா பறக்கப்போகிறது. இதை ஏன் சங்கிலி போட்டு கட்டுகிறார்கள் என்ற கேள்வி பலருக்கும் எழுந்திருக்க வாய்ப்பு இருக்கிறது.

cyclone remal

இதற்கு பின்னால் ஒரு அறிவியல் காரணமும் இருக்கிறது. ரயில்வே ஊழியர்கள் ரயில் புயலில் பறந்து விடும் என்ற காரணத்திற்காக சங்கிலி போட்டு ரயிலை கட்டவில்லை. இதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளும் முன் ரயிலை எப்படி பார்க் செய்கிறார்கள் என்ற விஷயத்தை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். நாம் வாகனங்களை எப்படி பார்க்க செய்கிறோமோ அதே போல தான் ரயிலையும் பார்க்க செய்கிறார்கள்.

நாம் காரை பார்த்து செய்யும்போது நீண்ட நேரம் பார்க்கையில் நிற்க வேண்டும் என்றால் ஹேண்ட் பிரேக் எடுத்துவிட்டு அதற்கு பதிலாக வீல் நகராமல் இருக்க வேண்டும் என்பதற்காக வீலுக்கு அடியில் கற்களை வைத்து பார்த்திருப்போம். ஏனென்றால் அதிக நேரம் பிரேக் என்கேஜ் பொசிஷனில் இருந்தால் பிரேக்கிற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

cyclone remal

இதனால் பிரேக்கை எப்போதும் என்கேஜ் செய்து வைத்திருக்க மாட்டோம். அதே நேரம் கார் நகராமல் இருக்க வேண்டும் என்பதற்காக வீல்களுக்கு அடியில் கல் வைத்து காரை நகராமல் நிப்பாட்டி இருப்போம். அதேபோல் தான் ரயிலை பார்க் செய்யும்போதும் பிரேக்கை என்கேஜ் செய்ய மாட்டார்கள். நீண்ட நேரம் பிரேக் எங்கேஜ் செய்யப்பட்ட நிலையில் இருந்தால், பிரேக் ஃபெயிலியர் ஏற்பட வாய்ப்புள்ளது.

அதனால் ரயிலே ஒரு குறிப்பிட்ட பொசிஷனிற்க்கு கொண்டு சென்று நிறுத்தி விட்டு முதலில் பிரேக் போட்டு நிறுத்துவார்கள் பின்னர் வீல்களுக்கு அடியே இரும்பு சக்கைகளை கொண்டு வீல்கள் வீல்களை அசைக்க முடியாத பொசிஷனில் வைத்து விட்டு பின்னர் பிரேக் ரிலீஸ் செய்து விடுவார்கள். இதனால் வாகனம் நகராமல் இருக்கும்.

இது போன்ற இரும்பு சக்கைகள் குறிப்பிட்ட எண்ணிக்கையிலேயே இருக்கும் அதனால் அது இல்லாத நேரத்தில் இது போன்ற சங்கிலிகளை வைத்து வீல்களை கட்டி வைத்து விடுவார்கள். இது ஓரளவு நகர்ந்தாலும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாமல் இருக்கும். புயல் நேரங்களில் அதிக காற்று இருக்கும் இதன் காரணமாக தண்டவாளங்களில் ரயில்கள் நகர அதிகமான வாய்ப்பு இருக்கிறது. இதை தவிர்ப்பதற்காக தான் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை ரயில்வே ஊழியர்கள் எடுத்துள்ளார்கள்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சமூக வலைதளங்களில் வெளியான இந்த வீடியோவை பார்த்து பலர் ஆச்சரியப்பட்டனர். ஏன் இதற்காக இப்படியான நடவடிக்கைகளை எல்லாம் எடுக்கிறார்கள் என்ற கேள்வியை எழுப்பினார்கள். சிலர் இதை கிண்டல் செய்தார்கள். ஆனால் இதற்கு பின்னால் இருக்கும் அறிவியல் காரணம் குறித்து பலருக்கும் தெரியவில்லை. ரயில்வே ஊழியர்களின் இந்த நடவடிக்கை நிச்சயம் எடுக்க வேண்டிய தேவையான நடவடிக்கைதான்

More from DriveSpark

Article Published On: Monday, May 27, 2024, 13:24 [IST]
English summary
Cyclone remal trains in bengal station railway track security prevent sliding
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X