நீ இல்ல உங்க அப்பனே வந்தாலும் இனி இந்தியா கிட்ட வாலாட்ட முடியாது! இந்தியாவோட ஆர்டர பாத்து உலகமே மிரண்டிருக்கு!
மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் ராணுவத்திற்கான பாதுகாப்பு கருவிகளைக் கொள்முதல் செய்வதற்கான கூட்டம் சமீபத்தில் தலைநகர் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ராணுவத்தின் பலத்தை அதிகரிக்கும் விதமாக கூடுதல் போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
உலக நாடுகள் சில அண்டை நாடுகளுடன் போர் அச்சுறுத்தலைச் சந்தித்து வருகின்றன. உதாரணமாக உக்ரைன் - ரஷ்யா மற்றும் இஸ்ரேல் - பாலஸ்தீன் இடையே மாதக் கணக்கில் போர் பதற்றம் நிலவிக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலில் இந்தியாவும் தன்னுடைய அண்டை நாடுகளுடன் அவ்வப்போது பாதுகாப்பு அச்சுறுத்தலைச் சந்தித்த வண்ணம் இருக்கின்றது.

குறிப்பாக, சீனா உடன் கடந்த 3 ஆண்டுகளாக மோதல் போக்கை இந்தியா சந்தித்து வருகின்றது. கிழக்கு லடாக் எல்லை பகுதியில் அவ்வப்போது இந்தியா-சீனா வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்ட வண்ணம் இருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே சமீபத்தில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் ராணுவத்திற்கான கொள்முதல் கவுன்சில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மிகப் பெரிய எண்ணிக்கையில் ராணுவ தளவாட கொள்முதலுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு இருக்கின்றது. ரூ. 2.23 லட்சம் கோடி மதிப்பிலான ராணுவ தளவாடங்கள் வாங்குவதற்கே ஒப்புதல் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த பெரும் தொகை கொள்முதலில் 98 சதவீதம் உள்நாட்டு நிறுவனங்களிடம் இருந்தே செய்யப்பட இருப்பதாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவை தற்சார்புக் கொண்ட நாடாக மாற்றும் நோக்கில் இவ்வாறு செய்யப்பட இருக்கின்றது. ஒட்டுமொத்தமாக இந்திய விமானப் படைக்காக 97 தேஜஸ் போர் விமானங்கள் வாங்கப்பட இருக்கின்றன. இத்துடன் தரைப்படை மற்றும் விமானப் படையின் பயன்பாட்டிற்காக 156 பிரசாந்த் இலகு ரக ஹெலிகாப்படர்களும் வாங்கப்பட உள்ளன.
ஏற்கனவே பாதுகாப்புத்துறை அமைச்சகம் இந்திய நிறுவனமான எச்ஏஎல் இடம் 83 தேஜஸ் விமானங்களுக்கான ஆர்டரை கொடுத்திருந்தது. இந்த கொள்முதலுக்கான ஒப்புதல் கடந்த 2021 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது. இந்த நிலையிலேயே மேலும் தற்போது 97 தேஜஸ் போர் விமானங்களுக்கான ஆர்டர் கொடுக்கப்பட்டு இருக்கின்றது.

ஆகையால், விரைவில் நாட்டில் உள்ள தேஜஸ் போர் விமானங்களின் எண்ணிக்கை 180ஆக அதிகரிக்க இருக்கின்றது. புதிய விமானம் மற்றும் ஹெலிகாப்டர்களைத் தொடர்ந்து தற்போது விமானப் படையின் கை வசம் உள்ள சுகோய் போர் விமானங்களை மேம்படுத்தும் திட்டத்திற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டு இருக்கின்றது.
இந்த பணிகளும் எச்ஏஎல் நிறுவனத்திடமே வழங்கப்பட்டு இருக்கின்றது. தற்போதைய நிலவரப்படி இந்தியா வசம் 260 சுகோய் போர் விமானங்கள் உள்ளன. இவற்றில் 84 போர் விமானங்களில் இந்தியாவில் தயார் செய்யப்பட்ட அதி நவீன ரேடார் மற்றும் ஏவியேஷன் கருவிகள் பொருத்தப்பட இருக்கின்றன.
போர் மற்றும் அச்சுறுத்தல் காலங்களில் துள்ளியமான தாக்குதல் மற்றும் அச்சுறுத்தல் பகுதிகளைக் கண்டறிந்து எதிரிகளை வீழ்த்த இந்த அம்சங்கள் பெரும் உதவியாக இருக்கும். இது தவிர, பீரங்கிகளையே சுட்டு வீழ்த்தும் திறன் கொண்ட குண்டுகளை வாங்கவும் தற்போது ஒப்புதல் அளிக்கப்பட்டு இருக்கின்றது.
ஏடிஎம் டைப் 2 மற்றும் டைப் 3 ரக குண்டுகளை வாங்கவே ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. இதுதவிர, டி-90 பீரங்களில் பயன்படுத்தப்படும் ஏடிடி கருவிகள் மற்றும் டிஜிட்டல் பசால்டிக் சிஸ்டம் ஆகியவையும் இந்திய ராணுவத்தின் பலத்தை கூட்டும் வகையில் வாங்கப்பட இருக்கின்றன.
மேலும், கடற்படையின் பலத்தைக் கூட்டும் வகையில் நடுத்தர ரக ஏவுகணைகளும் வாங்கப்பட இருக்கின்றன. இந்த ஏவுகணைகள் எதிரிகளின் போர் கப்பல்களை நடு வழியிலேயே தாக்கி அழிக்கும் திறன் கொண்டவை ஆகும். தேஜஸ் எம்கே-1ஏ, இது ஓர் இலகு ரக போர் விமானம் ஆகும்.
இந்த விமானதத்தில் மேம்படுத்தப்பட்ட ஏவியோனிக்ஸ், எலெக்ட்ரானிக் ஸ்டெயர்டு ரேடார், புதுப்பிக்கப்பட்ட மின்னணு போர் தொகுப்பு மற்றும் பார்வைக்கு அப்பாற்பட்ட ஏவுகணைக் கண்டறியும் திறன் என ஏகப்பட்ட சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன், இதன் தாக்கும் மிகவும் துள்ளியமானதாக இருக்கும் என்றும் கூறப்படுகின்றது.
இத்தகைய சூப்பரான பாதுகாப்பு திறனைக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே பெரும் எண்ணிக்கையில் இந்த போர் விமானங்கள் வாங்க தற்போது ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. இதேபோல், பிரசந்த் லைட் காம்பேட் ஹெலிகாப்டரும் பல்வேறு சிறப்பு பாதுகாப்பு மற்றும் தற்காப்பு வசதிகளைத் தாங்கியதாகக் காட்சியளிக்கின்றது. இதனால், எதிரிகளை சுட்டு வீழ்த்த முடியும்.
மேலும், இந்த ஹெலிகாப்டரால் 5 ஆயிரம் மீட்டர் ஆல்டிட்யூட்டில் லேண்ட் மற்றும் டேக்-ஆஃப் ஆகவும் முடியும். இத்தகைய உயர் ஆல்டிட்யூட் ஹெலிகாப்டரே இந்தியாவின் எல்லைப் பகுதிக்கு தேவையாக இருக்கின்றது. இதை உணர்ந்தே அதிக எண்ணிக்கையில் இந்த வகை ஹெலிகாப்டர்களுக்கு தற்போது ஆர்டர் வழங்கப்பட்டு இருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய ராணுவத்தின் இந்த கொள்முதல் மற்றும் மேம்படுத்தல், நாட்டின் பலத்தை பலமடங்கு மேம்படுத்தும். மேலும், எதிரி நாடுகளின் வாலாட்டும் செயலையும் ஒட்ட நறுக்கவும் முடியும். மேலும், இந்திய வரலாற்றிலேயே மிகப் பெரிய உள்நாட்டு உற்பத்திக்கான ஆர்டராக இது மாறி இருக்கின்றது. இந்த ஒப்பந்தம் முடிந்து விமானங்கள் முழுமையாக இந்தியாவின் கைகளுக்கு வந்து சேர குறைந்தது 10 ஆண்டுகளாவது ஆகிவிடும் என்பது நாம் இங்கு கவனிக்கத்தகுந்தது.


Click it and Unblock the Notifications









