தோளுக்கு மேல வளர்ந்த பையன் பிறந்தநாளுக்கு இப்படி கிஃப்ட் வாங்கி குடுக்கனும்! அப்பாகளுக்கு இது ஒரு பாடம்!
தனது மகன் பிறந்த நாளுக்கு தந்தை ஒருவர் ஹெல்மெட்டை வாங்கி பரிசளித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இன்று இளைஞர்கள் பலர் பைக்கில் பயணிக்க ஆர்வமாக இருக்கும் நிலையில், அவர்களுக்கு பாதுகாப்பை அறிவுறுத்தும் வகையில் தந்தை வழங்கிய இந்த பரிசு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இன்று இளைஞர்கள் மத்தியில் பைக் ரைடிங் என்பது மிகப்பெரிய அளவில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர்கள் பலர் சொந்தமாக பைக் வாங்கி நீண்ட தூரம் பைக் ஓட்ட ஆசைப்பட்டு வருகிறார்கள். இதனால் பைக் ரைடிங் மீதான மோகம் இளைஞர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. அதே நேரத்தில் இளைஞர்கள் பலர் பைக்கில் பயணித்து விபத்திலும் சிக்கி வருகிறார்கள்.

எந்த அளவிற்கு ஆர்வமாக பைக் ரேடிங் செய்கிறோமோ, அதே அளவிற்கு பாதுகாப்பாகவும் பைக்கில் செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இன்றைய இளைஞர்கள் பலருக்கு இந்த பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு போதிய அளவில் இல்லை. இதனால் அந்த இளைஞர்களின் பெற்றோர்களுக்கு தங்கள் மகனுக்கு பைக் ஓட்டும் போது பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் whacky_patroll என்ற பெயரில் இளைஞர் ஒருவர் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இவர் அடிக்கடி பைக்கில் சென்று ஏழை மக்களுக்கு உதவும் வகையில் வீடியோக்களை வெளியிடுவார். இவர் வீடியோக்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பலர் இவர் வீடியோக்களை பார்த்து பாராட்டி வருகிறார்கள்.

இந்நிலையில் இவரது பிறந்தநாள் வந்தது இந்த பிறந்தநாளுக்கு இவரது தந்தை இவர் பைக்கில் செல்லும் போது பாதுகாப்பாக செல்ல வேண்டும் என்பதற்காக ஒரு பாதுகாப்பான ஹெல்மெட் ஒன்றை வாங்கி பரிசளித்துள்ளார். தனது தந்தை தனக்கு பிறந்தநாள் பரிசு வைத்ததை இவர் வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இவருடைய தந்தையின் இந்த செயலுக்கு பலர் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள். இளம் வயது மகன்கள் உள்ள தந்தைகள் கட்டாயம் தங்களது மகன்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும் அப்பொழுதுதான் அவர்கள் வாகனம் ஓட்டும்போது விபத்து ஏற்பட வாய்ப்புகள் குறைவாக இருக்கும்.

இப்படியாக இந்த வீடியோவில் தந்தை தனது கடமையை சரியாக செய்துள்ளார். மேலும் இந்த வீடியோவில் மகன் வீட்டிற்குள்ளே வரும்போது ஏற்கனவே கையில் ஒரு ஹெல்மட்டை வைத்துள்ளார். இந்நிலையில் தந்தை அவருக்கு பிறந்தநாள் பரிசாக மற்றொரு புதிய ஹெல்மெட்டை பரிசாக வழங்குகிறார். ஏற்கனவே தனது மகன் சாலையில் பாதுகாப்பாக பயணம் செய்கிறான் என்பதை உறுதி செய்த தந்தை அந்த பாதுகாப்பை மேலும் பலப்படுத்த இந்த ஹெல்மட்டை வழங்கி உள்ளார்.
இன்று இளைஞர்கள் பலர் தங்கள் வீடுகளில் பிறந்தநாள் பரிசாக பைக், கார் என கேட்கிறார்கள். இப்படியாக பைக் வாங்கியவர்கள் அதற்கு ஹெல்மெட் அணிய மறுத்து வருகிறார்கள் . வீட்டில் உள்ள மகன் கேட்கும் பைக்கை வாங்கி கொடுக்கும் பெற்றோர்கள் நிச்சயம் அந்த பைக்கை பாதுகாப்பாக ஓட்டுவதற்காக ஹெல்மெட்டையும் வாங்கி கொடுக்க வேண்டும். அப்பொழுதுதான் சாலையில் விபத்துகளின் எண்ணிக்கை குறையும்.
இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விதிமுறை இந்தியாவில் அமலில் இருக்கிறது. ஆனால் பலர் இதை பின்பற்றுவதில்லை. சாலையில் ஆங்காங்கே போலீசார் வாகன தணிக்கையில் இப்படியாக ஹெல்மெட் அணிந்து வராத நபர்கள் மீது நடவடிக்கை எடுத்தாலும், மக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பிறந்தநாள் பரிசாக காஸ்ட்லியான பல்வேறு பரிசுகளை வாங்கிக் கொடுப்பதை விட இப்படியான பாதுகாப்பான விஷயங்கள் குறித்த பொருட்களை பரிசாக வழங்குவது நிச்சயம் அவர்கள் வாழ்க்கையில் நன்மையை ஏற்படுத்தும். அவர்களுக்கும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும். மகனின் பாதுகாப்புக்கு ஹெல்மெட் பரிசளித்த இந்த தந்தையின் செயலை நிச்சயம் பாராட்டலாம்.


Click it and Unblock the Notifications









