புத்தாண்டு மறக்க முடியாத மாதிரி அமைஞ்சிடுச்சு... தந்தை செய்த காரியத்தால் அதிர்ந்து போன மகன்!!

புதிய 2025ஆம் ஆண்டை பலரும் புதிய வாகனங்களுடன் துவங்க விரும்புவீர்கள். ஆனால், அது இங்கு ஒருவருக்கு நிஜமாகி உள்ளது. அதாவது, நாம் இந்த செய்தியில் பார்க்க போகும் நபர் மஹிந்திரா தார் ராக்ஸ் (Mahindra Thar ROXX) வாகனத்தை புத்தாண்டு அதுவுமாக புதியதாக பெற்றுள்ளார். ஆனால், இந்த வாகனத்தை அவர் வாங்கவில்லை. இதற்கு பின்னால் மனம் நெகிழ்வான ஒரு சிறிய கதை உள்ளது. அது என்ன என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

மஹிந்திரா நிறுவனத்தின் தார் வாகனத்திற்கு மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனை மேலும் அதிகரிக்கும் விதமாக, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தார் ராக்ஸ் என்கிற புதிய வாகனத்தை மஹிந்திரா அறிமுகம் செய்தது. தார் வாகனம் ஆனது 3 கதவுகளை மட்டுமே கொண்டிருக்கும் நிலையில், தார் ராக்ஸ் ஆனது 5 கதவுகளை கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்டது.

dad gifts thar to son

சவுகரியமாக பயணம் செய்வதற்கு 5 கதவுகள் மிகவும் ஏற்றதாக உள்ளதால், எதிர்பார்த்ததை போல் தார் ராக்ஸ் வாகனத்திற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்படியொரு வாகனத்தை தான் இங்கு ஒருவர் புத்தாண்டை முன்னிட்டு பெற்றுள்ளார். பிராண்ட்-நியூ மஹிந்திரா தார் ராக்ஸ் வாகனத்தை இவருக்கு தந்தது வேறு யாரும் இல்லை, அவரது தந்தை ஆவார்.

தந்தை தனது மகனுக்கு வாகனங்களை வாங்கிக் கொடுப்பது ஒன்றும் புதியது அல்ல. ஆனால், இந்த தந்தை மகனுக்கு தார் ராக்ஸ் வாகனத்தை புத்தாண்டை முன்னிட்டு மிகவும் சர்பிரைசாக வழங்கியுள்ளார். 2025ஆம் ஆண்டை புதிய தார் ராக்ஸ் வாகனத்துடன் துவங்கியிருக்கும் இந்த நபரின் பெயர், அசய் கிரே (Ashay Khire) ஆகும். புதிய வாகனத்துடன் எடுத்துக் கொண்ட படங்களை அசய் கிரே தனது இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

dad gifts thar to son

இதுதொடர்பான அவரது இன்ஸ்டாகிராம் பதிவில், "ஒரு கனவு நனவாகும் ஆண்டு நிறைவு! அப்பா ஒரு புத்தம் புதிய தார் ராக்ஸ் மூலம் எங்களை ஆச்சிரியப்படுத்தினார். மேலும் எங்கள் இதயங்கள் நன்றியினாலும், மகிழ்ச்சியினாலும் நிறைந்துள்ளன. இதோ புதிய பயணங்கள், நேசத்துக்குரிய நினைவுகள் மற்றும் 2025க்கான அற்புதமான தொடக்கம்!" என குறிப்பிடப்பட்டுள்ளது.

அசய் கிரே பெற்றிருப்பது நெபுலா ப்ளூ என்கிற அடர் நீல நிறத்திலான மஹிந்திரா தார் ராக்ஸ் வாகனம் ஆகும். இது இல்லாமல், ஸ்டீல்த் பிளாக், டாங்கோ ரெட், எவரெஸ்ட் வொயிட், டீப் ஃபாரஸ்ட், பேட்டில்ஷிப் கிரே மற்றும் பர்ண்ட் சியான்னா உள்ளிட்ட கலர் ஆப்ஷன்களிலும் தார் ராக்ஸ் கிடைக்கிறது.

dad gifts thar to son

மஹிந்திரா நிறுவனம் தார் ராக்ஸை உருவாக்குவதில் நீண்ட மாதங்களாக ஈடுப்பட்டு வந்தது. அதனை தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்ட தார் ராக்ஸ் வாகனம் கூடுதல் நீளத்தில் இருப்பது மட்டுமின்றி, முந்தைய தார் 3-கதவு வாகனத்தின் அடுத்த தலைமுறை மாடலாக உருவாக்கப்பட்டுள்ளது. மொத்தம் 18 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும் தார் ராக்ஸ் 2.0 லிட்டர் எம்ஸ்டாலியன் டர்போசார்ஜ்டு மற்றும் 2.2 லிட்டர் எம்ஹாவ்க் டர்போசார்ஜ்டு என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: எங்களுக்கு தெரிந்தவரையில், அசய் கிரேவின் தந்தை இந்த மஹிந்திரா தார் ராக்ஸ் வாகனத்தை பல மாதங்களுக்கு முன்னரே முன்பதிவு செய்திருப்பார் என நினைக்கிறோம். ஏனெனில், தார் ராக்ஸை புக் செய்துவிட்டு டெலிவிரிக்காக காத்திருக்க வேண்டிய கால அளவானது 1.5 வருடங்கள் வரையில் உள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, January 1, 2025, 16:58 [IST]
English summary
Dad gifted mahindra thar roxx 5 door to son surprise for new year
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X