டிரைவர் சீட்டில் அமர்ந்தால் கால் கூட எட்டாது... 7 வயது மகனுக்கு கொடுக்குற பிறந்த நாள் பரிசா இது?

பி.எம்.டபிள்யூ (BMW) கார்களை வாங்குவோரை பரவலாக நிறைய இடங்களில் பார்க்க முடியும். ஆனால், பிஎம்டபிள்யூ க்ரூப்பின் கீழ் செயல்படும் மினி (MINI) நிறுவனத்தின் கார்களை வாங்குவோரை அதிக எண்ணிக்கையில் பார்க்க முடிவதில்லை. ஏனெனில், மினி கார்கள் பெயருக்கேற்ப அளவில் சிறியவைகளாக உள்ளன. இருப்பினும் அதேநேரம், பிஎம்டபிள்யூ கார்களை போன்று மினி கார்களின் விலைகளும் அதிகமாக நிர்ணயிக்கப்படுகின்றன. இதனால், மினி கார்களை வாங்குபவர் யாரென்று பார்த்தால், ஏற்கனவே குறைந்தது 2, 3 சொகுசு கார்களை வைத்திருக்கும் செல்வந்தர்களாகவே இருக்கின்றனர்.

அந்த வகையில், இங்கு ஒரு தொழிலதிபர் புதியதாக மினி காரை வாங்கி உள்ளார். ஆனால், இதனை அவர் தனக்காக வாங்கவில்லை. தனது 7 வயது மகனுக்காக வாங்கியுள்ளதாக பகீர் கிளப்பி உள்ளார். வெளிநாடுகளை பார்த்து, 18 வயது நிரம்பிய உடனேயே தனது மகன்/ மகளுக்கு விலையுயர்ந்த சொகுசு கார்களை வாங்கிக் கொடுக்கும் பழக்கம் நம் இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது.

dad gifted car to son

கார் ஓட்ட குறைந்தப்பட்ச வயது வரம்பு 18 என்பதால், கார் வாங்கிக் கொடுக்க பெற்றோர் விருப்பப்பட்டாலும் குழந்தைகளுக்கு 18 வயது நிரம்பும் வரையில் காத்திருக்கின்றனர். ஆனால், நாம் இந்த தொகுப்பில் பார்க்க போகும் தொழிலதிபர் வெறும் 7 வயது மட்டுமே ஆன தனது மகனுக்கு மினி கார் ஒன்றை பரிசளித்துள்ளார். நிச்சயமாக, இந்த காரை அந்த சிறுவன் இப்போதைக்கு ஓட்ட முடியாது.

7 வயது மகனுக்கு மினி போன்ற விலையுயர்ந்த காரை பரிசளித்து பகீர் கிளப்பி இருக்கும் இந்த தொழிலதிபரின் பெயர், ஸ்ரீதர் ராவ் (Sridhar Rao) ஆகும். ஹைதராபாத்தை சேர்ந்த தொழிலதிபரான இவர், வால்கோ இன்ஃப்ரா சி.எம்.டி நம்பர்.1 (Walgo Infra CMD No.1) என்கிற நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக உள்ளார். இவருக்கு அபிஸ்ரீ (Abisri) என்கிற மகன் உள்ளார்.

அபிஸ்ரீயின் 7வது பிறந்தநாளை தொழிலதிபர் ஸ்ரீதர் ராவ் சமீபத்தில் வெகு விமர்சையாக கொண்டாடி உள்ளார். ஜூப்லி ஹில்ஸ் பகுதியில் மகனுக்காக ஸ்ரீதர் ராவ் ஏற்பாடு செய்திருந்த பிறந்த நாள் நிகழ்ச்சியில் பெரும் தொழிலதிபர்கள் உள்பட நாடாளுமன்ற உறுப்பினர்களில் இருந்து தெலுங்கானா சட்டமன்ற உறுப்பினர்கள் வரையில் பலர் கலந்துக் கொண்டனர்.

ஸ்ரீதர் ராவ் தனது மனைவி மற்றும் மகன் உடன் கேக் வெட்டி கொண்டாடினார். பின்னர், நிகழ்ச்சியின் ஒருபகுதியாக பிராண்ட்-நியூ மினி கூப்பர் (Cooper) கார் ஒன்றை நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு கொண்டுவந்து நிறுத்தி, இதனை பிறந்தநாள் கொண்டாடும் தனது மகனுக்கு பரிசளிப்பதாக கூறி அனைவரையும் தொழிலதிபர் ஸ்ரீதர் ராவ் ஆச்சிரியப்படுத்தினார்.

இதற்காக, இளம் நீல நிறத்திலான புத்தம் புதிய மினி கூப்பர் காரை ஸ்ரீதர் ராவ் வாங்கியுள்ளார். மினி நிறுவனத்தின் ஹேட்ச்பேக் (Hatchback) ரக காராக கூப்பர் விளங்குகிறது. தொழிலதிபர் ஸ்ரீதர் ராவ் வாங்கியிருப்பது 4ஆம் தலைமுறை மினி கூப்பர் கார் ஆகும். இந்தியாவில் இந்த கார் கடந்த 2024ஆம் ஆண்டில்தான் அறிமுகம் செய்யப்பட்டது.

கூப்பர் காரை இனி எலக்ட்ரிக் வெர்சனில் மட்டுமே உருவாக்க போவதாக மினி நிறுவனம் தெரிவித்து இருந்தது. இன்னும் சொல்லப்போனால், கடந்த ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட மினி கூப்பர் கார் தான் பெட்ரோல் என்ஜின் உடன் கடைசியாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள மினி கூப்பர் ஆகும். 3-கதவுகளை மட்டுமே கொண்ட இந்த மினி காரில் 4 பேர் மட்டுமே சவுகரியமாக அமர்ந்து பயணம் செய்ய முடியும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பிறந்த நாளை முன்னிட்டு மகனுக்கு தொழிலதிபரான தந்தை பரிசளிப்பது ஒன்று தவறு இல்லை. ஆனால், 7 வயது மகனுக்கு கார் ஒன்றை பரிசளிப்பது பார்ப்போரை முகம் சுளிக்க வைக்கிறது. ஏனெனில், அந்த சிறுவன் ஆர்வத்தில் முறையாக கார் ஓட்ட பழகுவதற்கு முன்பே தனது மினி கூப்பர் காரை யாருக்கும் தெரியாமல் ஓட்டி பார்க்க ஆசைப்படலாம். இதனால், தேவையில்லாத அசம்பாவிதங்கள் ஏற்பட கூடும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 26, 2025, 11:41 [IST]
English summary
Dad gifted mini cooper luxury car to his 7 year old son as birthday gift
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+