18 வயசு சின்ன பையனுக்கு இந்த காரு பரிசா! இத அவரால ஓட்ட முடியுமா!

இந்திய தந்தை ஒருவர் தனது மகனின் 18ஆவது பிறந்த நாளை சிறப்பிக்கும் விதமாக, அவருக்கு லம்போர்கினி ஹூராகேன் எஸ்டிஓ சூப்பர் காரை பரிசாக வழங்கி இருக்கின்றார். இந்த சம்பவம் பற்றிய கூடுதல் விபரங்களையும், குறிப்பாக, காரின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் பற்றிய முழுமையான தகவல்களையும் இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர் விவேக் குமார் ரங்குட்டா. இவர் தற்போது அரபு நாட்டில் குடியேறி இருக்கின்றார். அங்கு மிகப் பெரிய தொழிலதிபர்களில் ஒருவராக அவர் வலம் வந்துக் கொண்டிருக்கின்றார். இவருடைய 18 வயது மகன் தருண் ரங்குட்டா. இவருக்கே லம்போர்கினி ஹூராகேன் எஸ்டிஓ (Lamborghini Huracan STO) சூப்பர் காரை விவேக் குமார் ரங்குட்டா பரிசாக வழங்கி இருக்கின்றார்.

Dad gifts lamborghini car

18 ஆவது பிறந்த நாளை முன்னிட்டே இந்த கார் தருண் ரங்குட்டாவுக்கு பரிசாக வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த சம்பவம், 18 சிறுவனுக்கா இப்படி ஒரு காரையா பரிசாக தந்திருக்காங்க என வாயை பிளக்கச் செய்திருக்கின்றது. அந்த அளவிற்கு சூப்பரான மற்றும் ஓர் தரமான கார் மாடலே லம்போர்கினி ஹூராகேன் எஸ்டிஓ ஆகும்.

தருண் ரங்குட்டா பிறந்து 18 ஆண்டுகள் ஆகின்றன என்றால், அதை மாதக் கணக்கில் பார்க்கும்போது 216 மாதங்களே அவர் பிறந்து ஆகின்றன. ஆனால், இந்த காரின் வேகமோ அவர் பிறந்த இந்த மாதங்களின் எண்ணிக்கையையே மிஞ்சிவிடும். லம்போர்கினி ஹூராகேன் எஸ்டிவஓ காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 310 கிமீ ஆகும்.

Lamborghini huracan sto car

மேலும், இந்த கார் இந்தியாவில் ரூ. 4.99 கோடிக்கும் அதிகமான விலையில் விற்கப்படுகின்றது. எனவே ஸ்பீடு மற்றும் விலை ஆகிய இரண்டிலும் மிக உயர்ந்த கார் மாடலாக லம்போர்கினி ஹூராகேன் எஸ்டிஓ காட்சியளிக்கின்றது. இத்தகைய கார்தான் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தந்தை தன்னுடைய 18 வயதே ஆன மகனுக்கு வழங்கி இருக்கின்றார்.

அரபு நாட்டில் உள்ள ஓர் லம்போர்கினி கார் விற்பனையகத்தின் வாயிலாகவே இந்த கார் பரிசளிக்கப்பட்டு இருக்கின்றது. இந்தியாவிலும் இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஒரு சில பெரும் புள்ளிகள் இந்த காரை பயன்படுத்தி வருகின்றனர். 2021 ஆம் ஆண்டிலேயே இந்த காரை அதிகாரப்பூர்வமாக விற்பனைக்குக் கொண்டு வந்தது லம்போர்கினி நிறுவனம்.

வழக்கமான ஹூராகேனைக் காட்டிலும் அதிக திறனை வெளியேற்றக் கூடியதே ஹூராகேன் எஸ்டிஓ ஆகும். இந்த காரை லம்போர்கினி நிறுவனம் சூப்பர் ட்ரோஃபியோ எவோ ரேஸ் காரை தழுவியே உருவாக்கி இருக்கின்றது. எஞ்சினைப் பொருத்த வரை 5.2 லிட்டர் வி10 மோட்டாரே இந்த சூப்பர் காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

640 பிஎஸ் மற்றும் 565 என்எம் டார்க்கை இது வெளியேற்றும். லம்போர்கினி ஹூராகேன் எஸ்டிஓ ஓர் ரியர் வீல் டிரைவ் (பின் வீல் இயக்கம்) அம்சம் கொண்ட கார் மாடல் ஆகும். அதேவேளையில், லம்போர்கினி நிறுவனம் இதே கார் மாடலில் பெர்ஃபார்மென்டே (Lamborghini Huracan Performante) தேர்வை விற்பனைக்கு வழங்குகின்றது.

இதில் அனைத்து வீல்களும் இயங்கும் திறன் வழங்கப்பட்டு இருக்கின்றது. இது ஓர் அதிக திறனை வெளியேற்றும் என்பதால் சாலையில் ஓட்ட அனுமதி கிடைக்காதோ என நினைக்க வேண்டாம். இந்தியாவில் சாலையில் வைத்து பயன்படுத்திக் கொள்ள சட்டப்பூர்வமான கார் மாடல் இதுவாகும். பூபேஷ் ரெட்டி போன்ற இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் பலர் இந்த காரை பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இப்படி ஒரு காரை சிறுவர்கள் இயக்க அனுமதி உண்டா? இந்தியாவில் 18வயது பூர்த்தியடைந்த மற்றும் டிரைவிங் லைசென்ஸ் கொண்டவர்களால் மட்டுமே காரை இயக்க முடியும். அது எம்மாதிரியான காராக இருந்தாலும் அவர்கள் இயக்கிக் கொள்ள அனுமதி உண்டு. அரபு நாட்டிலும் கார்களை இயக்க 18வயது கொண்டிருக்க வேண்டும். அதேவேளையில், மோட்டார்சைக்கிளை இயக்க 17வயது பூர்த்தியடைந்திருந்தாலே போதுமானது. மேலும், கனரக வாகனங்களை இயக்க 20வயதைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Thursday, April 4, 2024, 12:05 [IST]
English summary
Dad gifts son to lamborghini huracan sto super car
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+