சொப்பு காருனு நினைச்சுட்டாங்களா!.. 19 வயசு பையனுக்கு பரிசா கொடுக்க கூடிய காரா இதெல்லாம்!.. ஜீரணிக்கவே முடியல..

'19 வயசு பையனுக்கு இப்படி ஒரு காரை பரிசா கொடுத்திருக்காங்களா..!' என வாயை பிளக்க செய்கின்ற மாதிரியான ஓர் காரை அவருடைய குடும்பத்தினர் பரிசாக வழங்கி இருக்கின்றனர். அப்படி என்ன கார் மாடல் அது? என்று தானே கேக்குறீங்க, ஆடி ஆர்எஸ் இ-ட்ரான் ஜிடி (Audi RS e-tron GT) கார் மாடலையே பரிசாக வழங்கி இருக்கின்றனர். இந்த கார் மாடலின் ஒரே யூனிட்டின் விலை மட்டுமே ரூ. 2 கோடி ஆகும். இந்த அளவிற்கு உச்சபட்ச விலையிலேயே இந்த காரை விற்பனைக்குக் வழங்கிக் கொண்டிருக்கின்றது, ஆடி நிறுவனம்.

இதனால்தான் இந்த கார் பரிசளிப்பு பலரின் கவனத்தை கவரும் விதமாக அமைந்திருக்கின்றது. ஆடி ஆர்எஸ் இ-ட்ரான் ஜிடி ஓர் எலெக்ட்ரிக் சூப்பர் கார் மாடல் ஆகும். இந்த காரை முதன் முதலில் 2021 ஆம் ஆண்டிலேயே ஆடி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

Dad gifts son luxury audi rs e-tron gt

இது நிறுவனத்தின் இந்தியாவிற்கான மூன்றாவது எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும். இந்த காரின் விலை மட்டுமல்ல திறன் வெளிப்பாடும் நம்மை வியக்க வைக்கும் வகையிலேயே உள்ளது. 636 பிஎச்பி மற்றும் 830 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கக் கூடிய எலெக்ட்ரிக் மோட்டாரே ஆர்எஸ் இ-ட்ரான் ஜிடி கார் மாடலில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 250 கிமீ ஆகும். இதனால் வெறும் 2.5செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டிவிட முடியும். இத்தகைய தரமான திறன் கொண்ட கார் மாடலையே 19 வயதே ஆன இளைஞருக்கு அவரது குடும்பம் பரிசாக வழங்கி இருக்கின்றது.

பிறந்த நாள் பரிசாகவே இந்த கார் வழங்கப்பட்டு இருக்கின்றது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோவே தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. இந்த குடும்பத்தினரிடத்தில் ஏற்கனவே பலதரப்பட்ட சூப்பர் மற்றும் சொகுசு கார் மாடல்கள் பயன்பாட்டில் இருக்கின்றன என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த நிலையிலேயே புதிதாக 2 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடி ஆர்எஸ் இ-ட்ரான் ஜிடி சூப்பர் காரையும் இணைத்திருக்கின்றனர்.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜி-வேகன் (Mercedes-Benz G-Wagen), மஹிந்திரா தார் ராக்ஸ் (Mahindra Thar Roxx), ஹோண்டா கோல்டு விங் (Honda Goldwing), பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் (BMW 5-Series), லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் (Land Rover Range Rover) உள்ளிட்ட ஆடம்பர கார் மாடல்களையே அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

Audi rs e-tron gt car pic

ஆடி ஆர்எஸ் இ-ட்ரான் ஜிடி எலெக்ட்ரிக் கார் ஓர் முழு சார்ஜில் 481 கிமீ வரையில் மைலேஜை வழங்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. இதற்காக இந்த காரில் 93 kWh பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கின்றது. தொடர்ந்து, இந்த காரில் சிறப்பு தொழில்நுட்ப வசதிகளாக 10.1 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 12.3 அங்குல முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், கார் இணைப்பு தொழில்நுட்பம், ஷிஃப்ட்-பை-வயர் அம்சம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன.

இதுதவிர, பிரீமியம் சவுண்டு சிஸ்டம், ஆம்பியன்ட் லைட், 3 ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், அடாப்டீவ் ஏர் சஸ்பென்ஷன், ஆக்டீவ் ரியர் ஸ்பாய்ளர், கார்பன் செராமிக் பிரேக், மேட்ரிக்ஸ் எல்இடி லைட் மற்றும் 20 அங்குல அலாய் வீல் ஆகியவற்றையும் இந்த கார் மாடல் கொண்டிருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார கார்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, அதிக ஆடம்பர அம்சங்கள் தாங்கிய மின்சார கார்களுக்கு பணக்காரர்கள் மத்தியில் அமோகமான வரவேற்புக் கிடைத்து வருகின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாகவே ஆடி ஆர்எஸ் இ-ட்ரான் ஜிடி கார் மாடலின் பரிசளிப்பு சம்பவம் அரங்கேறி இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, January 17, 2025, 10:56 [IST]
English summary
Dad surprises 19 year old son with luxury audi rs e tron worth rs 2 crore
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+