ரொம்பவே ஸ்பெஷலான லம்போ அவென்டேடார் தீப்பிடித்து எரிந்தது!

Written By:

ஐரோப்பிய நாடுகளில் லம்போர்கினி, ஃபெராரி போன்ற ஸ்போர்ட்ஸ் ரக கார்கள் சாலையில் உலவுவதும், அவை விபத்தில் சிக்குவதும் சகஜம்தான். அது நாட்டு மீடியாக்களுக்கு கூட சாதாரண செய்திதான். ஆனால், சுவீடனில் ஒரு லம்போர்கினி அவென்டேடார் கார் தீப்பிடித்து எரிந்தது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

இந்த விபத்தில், ஓட்டுனர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இருப்பினும், இந்த கார் தீப்பிடித்து எரிந்ததை பலர் ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிர்க்கின்றனர். ஏனெனில், இந்த ஸ்பெஷலான காரை ரவுண்டு கட்டி படம் எடுத்த ஆட்டோமொபைல் துறை மீடியாக்களும், லம்போ ரசிகர்களும் இந்த கார் தீப்பிடித்து எரிந்ததை மிகவும் சோகமாக பகிர்ந்து கொண்டு வருகின்றனர். இந்த காரை சோகமான நிகழ்வாக அவர்கள் நினைப்பதற்கு என்ன காரணம் என்பதை ஸ்லைடரில் காணலாம்.

ஸ்பெஷல் மாடல்

ஸ்பெஷல் மாடல்

ஐரோப்பாவை சேர்ந்த பிரபலமான தல்பக் ரேஸிங் நிறுவனத்தின் உரிமையாளர் ஹன்ஸ் தல்பக் கஸ்டமைஸ் செய்து வாங்கிய லம்போர்கினி அவென்டேடார் கார்தான் இப்போது தீப்பிடித்து எரிந்துள்ளது.

லம்போர்கினி கஸ்டமைஸ் பிரிவு

லம்போர்கினி கஸ்டமைஸ் பிரிவு

லம்போர்கினி நிறுவனத்தின் ரேஸ் கார் தயாரிப்பு பிரிவான ஸ்குவாட்ரா கார்ஸ்தான் இந்த காரை மிகவும் பிரத்யேகமான அம்சங்களுடன் கஸ்டமைஸ் செய்து கொடுத்ததது.

கருஞ்சிறுத்தை

கருஞ்சிறுத்தை

ஹன்ஸ் தல்பக்கிற்கு பிடித்தமான முழுவதும் கருப்பு நிறத்தில் இந்த கார் பெயிண்ட் செய்யப்பட்டிருந்தது. முகப்பு மற்றும் பின்புற டிசைனில் மாற்றங்கள் செய்திருந்தது. அத்துடன், புதிய ஏர் இன்டேக்குகள், ரேஸ் கார்களில் இருப்பது போன்ற பெரிய ஸ்பாய்லருடன் மாற்றங்கள் செய்து டெலிவிரி கொடுக்கப்பட்டிருந்தது. உலகிலேயே மிகவும் பிரத்யேகமான லம்போர்கினி கார் மாடல் என்ற பெருமைக்குரியது.

Recommended Video - Watch Now!
Actor Dulquer Salmaan's Brand New Porsche Panamera Turbo
விபத்து

விபத்து

இந்த பிரத்யேகமான லம்போர்கினி அவென்டேடார் கார் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, எஞ்சின் பகுதியிலிருந்து வெடி சத்தம் கேட்டிருக்கிறது. இதையடுத்து, அந்த காரை ஓட்டி வந்தவர், காரை நிறுத்திவிட்டு பார்த்தபோது காரில் தீப்பற்றியிருந்தது தெரிந்தது. அவர் காரிலிருந்து வெளியேறிய சில நிமிடங்களில் கார் முழுவதும் தீ பரவி, கருகி நாசமானது. தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் கார் முழுவதும் தீக்கிரையானது.

ஓட்டுனர் யார்?

ஓட்டுனர் யார்?

கார் தீப்பிடித்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது. காரை ஓட்டி வந்தவர் ஹன்ஸ் தல்பக்கா அல்லது வேறு யாரேனும் ஓட்டி வந்தனரா என்பது குறித்து இதுவரை தகவல் இல்லை. ஆனால், உலகிலேயே ஒரு பிரத்யேகமான லம்போர்கினி தீயில் கருகியது அதன் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

மதிப்பு

மதிப்பு

இந்தியாவில் சாதாரண லம்போர்கினி அவென்டேடார் கார் ரூ.5 கோடி மதிப்பில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், இதுபோன்ற பிரத்யேகமாக கஸ்டமைஸ் செய்வதற்கு கூடுதலாக சில கோடிகளை கொடுக்க வேண்டும். அப்படி ஆசையுடன் கஸ்டமைஸ் செய்து வாங்கப்பட்ட கார்தான் இப்போது இல்லாமல் போய்விட்டது.

 
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
One-off Lamborghini Aventador has been destroyed by fire in Sweden. Lamborghini cars are a rare sight, and we have come across quite a few incidents of Lamborghini's being destroyed in the past. However, this Lamborghini was unlike any other Aventador in the world.
Story first published: Monday, October 5, 2015, 12:55 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark