வாடகையாக வந்த டெஸ்லா காரை சோதனை என்ற பெயரில் பிரித்து மேய்ந்த டெய்ம்லர்..!! ஒரு ரிப்போர்ட்..!!

Written By:

வாடகைக்கு எடுக்கும் கார்கள் மீது நாம் பாசத்தையும் காட்டிவிடக்கூடாது, வெறுப்பையும் உமிழ்ந்துவிடக்கூடாது. இதில் எதாவது ஒன்று நடந்தாலும் பின்விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும்.

வாடகையாக வந்த டெஸ்லா காரை வறுத்து தின்ற டெய்ம்லர்...!!

நிலைமை இப்படியிருக்க, பிரபல கார் ஒன்றை வாடகையாக பெற்ற டெய்ம்லர் அதை சகட்டு மேனிக்கு ஓட்டிப்பார்த்து உடைத்து, தெரித்து, உறித்து, பிச்சு, பிரிச்சு என எல்லாவற்றையும் முடித்துவிட்டு காரை வாடகைக்கு விட்ட உரிமையாளரிடம் திருப்பி ஒப்படைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாடகையாக வந்த டெஸ்லா காரை வறுத்து தின்ற டெய்ம்லர்...!!

ஜெர்மனியில் பவேரியா பகுதியில் வசிக்கும் ஒரு தம்பதியிடமிருந்து, சிக்ஸ்ட் என்ற நிறுவனத்தின் மூலம் டெய்ம்லர் நிறுவனம், டெஸ்லா மாடல் எக்ஸ் பி100டி காரை வாடகையாக பெற்றது.

வாடகையாக வந்த டெஸ்லா காரை வறுத்து தின்ற டெய்ம்லர்...!!

மின்சார ஆற்றலில் இயங்கும் அந்த கார், வாடகை நேரம் முடிந்து மீண்டும் அந்த தம்பதியிடம் வருகையில் உருகுலைந்து போய், சிதைந்திருப்பது கண்டு அதன் உரிமையாளர்கள் அதிர்ந்து போனார்கள்.

வாடகையாக வந்த டெஸ்லா காரை வறுத்து தின்ற டெய்ம்லர்...!!

பிறகு உரிமையாளர்கள் காரின் கிளவ் பாக்ஸில் இருந்த துண்டு சீட்டை எடுத்துப்பார்த்த போது, "காரை நீங்கள் தவறாக பார்க் செய்துள்ளீர்கள்"என குறிப்பிடப்பட்டு இருந்தது.

வாடகையாக வந்த டெஸ்லா காரை வறுத்து தின்ற டெய்ம்லர்...!!

இதை பார்த்து குழப்பமடைந்த அவர்கள், அந்த துண்டு சீட்டு மெர்சிடிஸ்-தொழில்நுட்ப மையத்தில் இருந்து வந்திருப்பதை அறிந்தனர்.

இதன்மூலம் வாடகை முடிந்து வந்த டெஸ்லா எக்ஸ் பி100டி காரில் டெய்ம்லர் ஏதோ சோதனைகள் மேற்கொண்டு இருப்பது தெரியவந்தது.

வாடகையாக வந்த டெஸ்லா காரை வறுத்து தின்ற டெய்ம்லர்...!!

முக்கியமாக அந்த காரை டெய்ம்லர் ஊழியர்கள் முழுவதுமாக கழட்டி பிரித்து பார்த்து, அதை மீண்டும் முறையாக ஒருங்கிணைக்காமல் விட்டுள்ளனர்.

கார்கள் அதிகம் சூடாவதை தடுக்க, பிறகு டிராக்‌ஷன் மற்றும் அதிர்வுகளை கட்டுபட்டுத்த புதிய கட்டமைப்புகளை டெஸ்லா தனது கார்களில் பொருத்தியுள்ளது.

வாடகையாக வந்த டெஸ்லா காரை வறுத்து தின்ற டெய்ம்லர்...!!

அந்த தொழில்நுட்பத்தை கண்டறியவே, வாடகையாக வந்த காரில் டெய்ம்லர் இந்த வேலையை பார்த்திருப்பதாக உரிமையாளர்கள் கருதினர்.

வாடகையாக விடப்பட்ட டெஸ்லா கார், டெய்ம்லர் நிறுவனம் சோதனை செய்து பார்த்திருப்பதை கார் உரிமையாளர்கள் ஆதாரத்துடன் கண்டறிந்தனர்.

வாடகையாக வந்த டெஸ்லா காரை வறுத்து தின்ற டெய்ம்லர்...!!

வாடகைக்கு விடப்பட்ட டெஸ்லா கார் டெய்ம்லருக்கு சொந்தமான டெஸ்டிங் டிராக்கிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதை அதில் பொருத்தப்பட்டுள்ள ஜிபிஎஸ் உறுதிசெய்தது.

வாடகையாக வந்த டெஸ்லா காரை வறுத்து தின்ற டெய்ம்லர்...!!

இதுகுறித்து சிக்ஸ்ட் நிறுவனத்திடம் கார் உரிமையாளர்கள் கேட்ட போது, அதற்கு நிறுவன அதிகாரிகள் தங்களுக்கு ஏதும் தெரியாது என்று ஒரேடியாக பதிலளித்து விட்டார்கள்.

வாடகையாக வந்த டெஸ்லா காரை வறுத்து தின்ற டெய்ம்லர்...!!

பாதிக்கப்பட்ட டெஸ்லா மாடல் எக்ஸ் 100டி காரை மீண்டும் புணரமைக்க குறைந்தது 15,674 யூரோக்கள் செலவாகும். இந்திய மதிப்பில் ரூ. 12 லட்சம்.

வாடகையாக வந்த டெஸ்லா காரை வறுத்து தின்ற டெய்ம்லர்...!!

ஆனால் பிரச்சனை என்னவென்றால் இவ்வளவு பாதிக்கப்பட்ட காரை, சரி செய்தாலும் அதை மீண்டும் வாடகைக்கு விட முடியாது. யாரும் வாங்க மாட்டார்கள்.

வாடகையாக வந்த டெஸ்லா காரை வறுத்து தின்ற டெய்ம்லர்...!!

குறிப்பாக, ஒரு வேலை விற்றுவிடலாம் என்றாலும், ஏற்கனவே பழுது பார்த்து புணரமைக்கப்பட்ட காருக்கு ரீசேல் மதிப்பு பெரிய அடிவாங்கும்

வாடகையாக வந்த டெஸ்லா காரை வறுத்து தின்ற டெய்ம்லர்...!!

முறையான ஒப்பந்தத்திற்கு பிறகே வாடிக்கையாளர்களிடம் கார்களை வாடகைக்கு விடுவது வழக்கம்.

சிக்ஸ்ட் நிறுவனத்திடம் வாடகைக்கு கொடுக்கும் முன், அதேபோல ஒரு ஒப்பந்தம் டெஸ்லா காருக்காக போடப்பட்டுள்ளது.

வாடகையாக வந்த டெஸ்லா காரை வறுத்து தின்ற டெய்ம்லர்...!!

அதன் மூலம் வழக்காடு மன்றத்தில் கார் உரிமையாளர்கள் முறையிடலாம். ஆனால் அதிலும் ஒரு பெரிய சிக்கல் உள்ளது.

ஜெர்மன் நாட்டிலேயே புகழ்பெற்ற நிறுவனங்களான டெய்ம்லர் & சிக்ஸ்ட் இந்த பிரச்சனையை ஊதி புறந்தள்ளி விடும்.

வாடகையாக வந்த டெஸ்லா காரை வறுத்து தின்ற டெய்ம்லர்...!!

அதற்கான சாத்தியக்கூறுகள் இருந்தாலும் கூட, டெஸ்லா காரை வாடகைக்கு விட்ட பவேரியா தம்பதிகள், நியாயம் கிடைக்கும் வரை போராட போவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Read in Tamil: Mercedes’ Parent Company, Daimler Rented A Tesla And You Won’t Believe What They Did To It. Click for Details...
Story first published: Thursday, December 7, 2017, 10:35 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark