270 கிமீ வேகத்தில் பறந்த கார்: உயிரை கையில் பிடித்து பயணித்த ஃபேஸ்புக் நிறுவனர்!

Written By:

காற்றை விட வேகமாய், சீறிப் பாய்ந்து வரும் கார்களை பந்தய மைதானத்தில் பார்க்கும் போது த்ரில்லிங்காகவும் உற்சாகமான அனுபவமாகவும் இருக்கும்.

இத்தகைய அனுபவம் தனக்கும் கிட்ட வேண்டும் என மோட்டார் பந்தயம் மீது அதீத மோகம் கொண்டுள்ள ஃபேஸ்புக் நிறுவனம் மார்க் ஸக்கர்பெர்க்கும் ஆசைப்பட்டுள்ளார்.

மார்க் ஸக்கர்பெர்க்

இதனை பூர்த்தி செய்ய அமெரிக்காவின் நார்த் கரோலினா மாகாணத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற சார்லோட் மோட்டார் ஸ்பீடுவே பந்தய ட்ராக்குக்கு சென்றுள்ளார். அங்கு 'நாஸ்கார்' பந்தயத் தொடரின் வெற்றிகரமான டிரைவர்களில் ஒருவரான Dale Earnhardt Jr-உடன் ஒரு ரேஸ் காரில் மைதானத்தை ஒரு முறை வலம்வர தீர்மானித்தார்.

பந்தய வீரர் ஒருவரின் வேகத்தை அருகில் இருந்து அனுபவிப்பது என்பது பலரும் நினைத்துபார்க்காத ஒன்று. சாதாரணமாக கிளம்பிய அக்கார் பின்னர் பட்டையை கிளப்பும் பேகம் எடுத்தது. கிட்டத்தட்ட 270 கிமீ வேகத்தில் சென்று மார்கை அந்த டிரைவர் கலங்கடித்துள்ளார்.

இதனை தனது பேஸ்புக் பக்கத்தில் நேரலையும் செய்துள்ளார்.

இந்த சிறப்பான அனுவபவத்தை பெற்ற மார்க் பின்னர், அவராகவே காரை இயக்கி மைதானத்தை ஒரு முறை வலம் வந்தார். இந்த அனுபவம் குறித்து மார்க் ஸக்கர்பெர்க் கூறுகையில், "இப்படி ஒரு சிறப்பான அனுபவம், நினைத்து பார்க்க முடியாத ஒன்று" என கூறினார்.

பந்தய திடலில் மார்க் ஸக்கர்பெர்க் பெற்ற அனுபவத்தை நீங்களும் பாருங்களேன்:

மேலும், சுவாரஸ்யமாக செய்திகளை இந்த தொகுப்பில் படியுங்கள்:
புதிய பஜாஜ் டோமினார்400 பைக்கின் படங்கள்: 
English summary
Zuckerberg put on a blue fire suit matching the No.88 Chevrolet driver’s, Earnhardt took the CEO of Facebook for a spin around the track.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark