துபாயில் வீடு வாங்கினால் லம்போ சூப்பர் கார் ஃப்ரீ: அதிரடி ஆஃபர்
துபாயில் நடந்து வரும் வர்த்தக திருவிழாவில் வீடு வாங்குவோர்க்கு லம்போர்கினி காரை பரிசாக வழங்குவதாக ரியல் எஸ்டேட் நிறுவனம் அறிவித்து பரபரப்பை கிளப்பியுள்ளது.
கடந்த 2ந் தேதி முதல் 12ந் தேதி வரை துபாயில் வர்த்தக திருவிழா மிக சிறப்பான முறையில் நடந்து வருகிறது. இந்த வர்த்தக திருவிழாவில் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக பல சிறப்பு பரிசுகளை நிறுவனங்கள் அறிவித்து வருகின்றன.

இந்த நிலையில், துபாயின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான டமாக் என்ற நிறுவனமும் இந்த வர்த்தக திருவிழாவில் கலந்து கொண்டுள்ளது.
நகரின் முக்கியப் பகுதிகளில் இந்த நிறுவனம் கட்டியுள்ள பிரம்மாண்டமான ஆடம்பர இல்லங்களை வாங்குவோர்க்கு அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது.
டமாக் டவர்ஸில் வீடு வாங்குவோர்க்கு 2014 மாடல் லம்போர்கினி அவேன்டேடார் காரை பரிசாக வழங்குவதாக தெரிவித்துள்ளது.
இதேபோன்று, பிற இடங்களில் மற்றும் வீட்டின் அளவை பொறுத்து பிஎம்டபிள்யூ மற்றும் மினி கார்களை பரிசாக வழங்குவதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications








