ரியாலிட்டி ஷோவில் சந்தானத்தின் கார் விலையை கேட்டு அதிர்ச்சியடையவைத்த தில்லை! பதிலுக்கு நடந்தது இது தான்!
நடிகர் சந்தானம் சமீபத்தில் ஒரு தனியார் டிவி சேனலில் நடந்த ரியாலிட்டி ஷோவில் அதன் பங்கேற்பாளர் கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப தனது பிஎம்டபிள்யூ காரில் அவரை ஒரு ரவுண்ட் அழைத்து சென்றார். இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. பலர் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். நடந்தது என்ன? முழுமையான விபரங்களை இங்கே வரிவாக காணலாம் வாருங்கள்.
ஜீ தமிழ் தொலைகாட்சியில் தற்போது டான்ஸ் ஜோடி டான்ஸ் என்ற நிகழ்ச்சி நடந்து வருகிறது. இந்த ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியில் நடுவர்களாக பாபா பாஸ்கர் மாஸ்டர், நடிகை சினேகா மற்றும் நடிகை வரலெட்சுமி சரத்குமார் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக இருக்கின்றனர். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் தல்லை நடராஜன் என்ற பங்கேற்பாளரும் போட்டியில் இருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் நடிகர் சந்தானம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவரது திரைப்பட புரோமஷனிற்காக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்நிலையில் நடிகர் சந்தானம் பங்கேற்ற போது அதில் ஃபெர்பார்மென்ஸ் செய்த தில்லை நடராஜன் அதன் பிறகு பேசும் போது நடிகர் சந்தானத்திடம் அவர் வந்த கார் கார் குறித்தும் அதன் மைலேஜ் குறித்தும் கேட்டார். இதை கேட்டதும் மற்றவர்கள் ஷாக்காகிவிட்டனர்.
அதன் பிறகு தில்லை நடராஜன் இதை ஏன் கேட்டேன் என ஒரு விளக்கம் அளித்தார். அதில் அவர் தனது அப்பா ஒரு கார் டிரைவராக இருப்பதாகவும். அவரது கனவு தனது அப்பாவை தான் ஒரு சொந்த கார் வாங்கி அதில் அமர வைத்து அழைத்து செல்ல வேண்டும் என நினைப்பதாகவும் கூறினார். இதனால் நெகிழ்ந்து போன சந்தானம் தில்லை நடராஜனை தனது காரில் ஒரு ரவுண்ட் கூட்டி சென்றார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

தில்லை நடராஜன் ஆச்சரியப்படும் அளவிற்கு நடிகர் சந்தானம் வைத்திருப்பது பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் 5 சிரீஸ் கார் தான். இந்த காரை கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் தான் வாங்கியுள்ளார். இந்த கார் இந்திய மார்கெட்டில் ரூ84.31 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த காரில் 2.0 லி, 4 சிலிண்டர் இன்லைன் 4 வால்வு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த இன்ஜின் 255 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் கொண்டதாக இருக்கிறது. இதன் மூலம் இந்த கார் 0-100 கி.மீ வேகத்தை வெறும் 6.5 நொடியில் பிக்கப் செய்துவிடும் திறன் கொண்டதாக இருக்கிறது. இந்த வீடியோவில் தில்லை நடராஜன் காரின் மைலேஜ் குறித்த கேள்வியை சந்தானத்திடம் கேட்டடிருப்பார். அதற்கு சந்தானம் காமெடியாக அதை நினைத்து தான் அழுது கொண்டிருப்பதாக கூறியிருப்பார்.

ஆனால் இந்த காரின் மைலேஜ் மிக குறைாவக எலலாம் இல்லை. லிட்டருக்கு 15.7 கி.மீ மைலேஜை வழங்கும் என அராய் சான்று வழங்கியுள்ளது. சிட்டி பயன்பாட்டில் சற்று மைலேஜ் குறைவாக இருந்தாலும் நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது மற்ற கார்களுக்கு இணையான மைலேஜ் நிச்சயம் கிடைக்கும் என சொல்லி விடலாம். சரியான பராமிப்பு இருந்தாலே இந்த கார் சிறப்பாக செயல்படும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தனியார் டிவி சேனல் நிகழ்ச்சியில் ரியாலிட்டி ஷோ பங்கேற்பாளர் ஒருவர் ஆசையை நடிகர் சந்தானம் அந்த தருணமே நிறைவேற்றியது நிச்சயம் வரவேற்க்க தக்கது தான். கார் வாங்கும் கனவு பலருக்கு இருக்கும். இந்த வீடியோவில் நடிகர் சந்தானம் தனக்கும் கார் வாங்கும் கனவு எப்படி இருந்தது என்பதை கூறியிருக்கிறார். இதுவும் பலரை நெகிழ வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications









