உங்கள் காரில் ஓவர்லோடு ஏற்றினால் என்ன நடக்கும் தெரியுமா?

கார்களில் அதிக அளவு பாரத்தை ஏற்றி மிகப்பெரிய தவறை செய்து வருகின்றனர். கார் என்பது மிஷின் தான் என்றால் அது தாங்குவதற்கு என்ன ஒரு அளவு உள்ளது. அதையும் மீறி சிலர் கார்களில் ஓவர்லோடுகளை ஏற்றி வருகின்றனர

உலகின் பெரும்பாலான நாடுகளில் கார்களை முடிந்த அளவு எவ்வளவு பயன்படுத்த முடிமோ? எதற்கெல்லாம் பயன்படுத்த முடியுமோ அதற்கெல்லாம் பயன்படுத்துகின்றனர். அவ்வாறு அவர்கள் செய்யும் போது ஒரு இமாலய தவறை செய்து விடுகின்றனர்.

உங்கள் காரில் ஓவர் லோடு ஏற்றினால் என்ன நடக்கும் தெரியுமா?

கார்களில் அதிக அளவு பாரத்தை ஏற்றி மிகப்பெரிய தவறை செய்து வருகின்றனர். கார் என்பது மிஷின் தான் என்றால் அது தாங்குவதற்கு என்ன ஒரு அளவு உள்ளது. அதையும் மீறி சிலர் கார்களில் ஓவர்லோடுகளை ஏற்றி வருகின்றனர்.

உங்கள் காரில் ஓவர் லோடு ஏற்றினால் என்ன நடக்கும் தெரியுமா?

கார்களில் மட்டுமில்லாமல் லாரி, லோடு ஆட்டோ, பயணிகள் ஆட்டோ என எல்லா வாகனங்களிலும் இந்த கூத்து நடந்து தான் வருகிறது. தமிழகத்தில் வெளிமாநிலங்களுக்கு வைக்கோல் ஏற்றிச் செல்லும் லாரியை பார்த்திருக்கிறீர்களா?

உங்கள் காரில் ஓவர் லோடு ஏற்றினால் என்ன நடக்கும் தெரியுமா?

லாரியை விட இரண்டு மடங்கு வைக்கோல் வைக்கப்பட்டுள்ள அகலம் அதிகமாக இருக்கும் இந்த லாரி ஒரு ரோட்டில் போனால் எதிரில் வருபவர்களும், இவர்களுக்கு பின்னால் வருபவர்களும் இவர்களை தாண்டி செல்வது கடினம் தான்.

உங்கள் காரில் ஓவர் லோடு ஏற்றினால் என்ன நடக்கும் தெரியுமா?

இவ்வாறாக ஓவர் லோடு ஏற்றுவது சட்டப்படி தவறு தான்.ஆனால் அதையும் மீறி அது உங்கள் வாகனங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதை பற்றி நாம் கீழே விரிவாக பார்க்கலாம்.

உங்கள் காரில் ஓவர் லோடு ஏற்றினால் என்ன நடக்கும் தெரியுமா?

ஆக்ஸிலரேஷன் மற்றும் பிரேக்கிங்

உங்கள் கார் அதிக சிசி, அதிக பவர்/டார்க் திறன் கொண்டது என எண்ணி அதில் அதிக பாாரத்தை ஏற்றாதீர்கள். நீங்கள் பெராரி கார் வைத்திருந்தாலும் சாரி சாதாரண ஆட்டோ வைத்திருந்தாலும் சரி அதற்கான அளவை தாண்டி பொருள் ஏற்றும் போது எந்த வாகனமும் அதை தாங்காது. அதை பாரத்தை தூக்கி செல்ல திணறும்.

உங்கள் காரில் ஓவர் லோடு ஏற்றினால் என்ன நடக்கும் தெரியுமா?

இதனால் நீங்கள் தேவைக்கு அதிகமாக ஆக்ஸிரேஷன் கொடுக்க வேண்டியது வரும். இதனால் அதிக பெட்ரோல் செலவாவதோடு இன்ஜினின் வாழ்நாளும் குறையும். அதே நேரத்தில் நீங்கள் பிரேக் பிடிக்கும் போதும் அதிக அழுத்தம் தேவைப்படும் இதனால் பிரேகிலும் கோளாறுகள் ஏற்படலாம். சில சமயம் பிரேக் பெயிலியர் ஆக கூட வாய்ப்புள்ளது.

உங்கள் காரில் ஓவர் லோடு ஏற்றினால் என்ன நடக்கும் தெரியுமா?

சஸ்பென்சன்

உங்கள் காரின் சஸ்பென்சன் என்பது உங்கள் காரில் ஏற்றுவதற்கான அதிக பட்ச எடையை கணக்கில் கொண்டே வடிவமைக்கப்பட்டிருக்கும் அப்படி இருக்கையில் நீங்கள் அதிக பாரத்தை ஏற்றினால் சஸ்பென்சன் சரியாக வேலை செய்யாமல்போகும்.

உங்கள் காரில் ஓவர் லோடு ஏற்றினால் என்ன நடக்கும் தெரியுமா?

நீங்கள் ஒரு முறை அதிக பாரம் ஏற்றி சஸ்பென்சன் தாங்கவில்லை என்றால் அடுத்து நீங்கள் அந்த பாரத்தை இறக்கினாலும் அந்த பிரச்னை சரியாகாது. ஒரு முறை அதிக பாரத்தை ஏற்ற முயன்று செலவுகளை இழுத்துக்கொள்ளதீர்கள்.

உங்கள் காரில் ஓவர் லோடு ஏற்றினால் என்ன நடக்கும் தெரியுமா?

டயர்

காரில் நீங்கள் அதிக பாரத்தை ஏற்றும் போது அதன் சமநிலையாக இருக்கும் என்பதை நீங்கள் கூற முடியாது. ஒருபுறம் எடை அதிகமாக இருந்து மறுபுறம் குறைவாகஇருந்தால் எடை அதிகமாக இருக்கும் பகுதியில் டயர் ஒரு பக்கமாக அழுத்தம் பெரும் இதனால் டயரின் ஒரு பகுதி மற்றமு் அதிக தேய்மானத்திற்குள்ளாகும்.

உங்கள் காரில் ஓவர் லோடு ஏற்றினால் என்ன நடக்கும் தெரியுமா?

காரை இயக்க சிரமம்

காரில் அதிக பாரத்தை முறையான ஏற்றும் போது காரில் வேகமாக சென்று திரும்பும் போது சிரமம் ஏற்படும். காரை திருப்புகையில் ஒரு பக்கமாக கார் இழுக்கும். இதனால் விபத்து கூட ஏற்படலாம்.

உங்கள் காரில் ஓவர் லோடு ஏற்றினால் என்ன நடக்கும் தெரியுமா?

பராமரிப்பு செலவு அதிகரிக்கும்

உங்கள் காரில் உள்ள அனைத்து பாகங்களும் காரில் ஏற்றக்கூடிய அதிகபட்ச எடையை கணக்கில் கொண்டே உருவாக்கப்பட்டிருக்கும். அப்படி இருக்கையில் நீங்கள அதை விட அதிகமாக பாரத்தை ஏற்றும் போது உதிரி பாகங்களின் ஆயுள் விரைவாக குறையும். இதனால் உங்கள் காரின் பாராமரிப்பு செலவு அதிகரிக்கும்.

உங்கள் காரில் ஓவர் லோடு ஏற்றினால் என்ன நடக்கும் தெரியுமா?

இன்சூரன்ஸ் கிடைக்காது

ஒருவேலை நீங்கள் காரில் அதிக பாரத்தை ஏற்றி செல்லும் போது கார் விபத்தில் சிக்கினால் நீங்கள் காருக்காக இன்சூரன்ஸ் செய்திருந்தாலும். இந்நிறுவனம் காரில் விதிகளை மீறி அதிக பாரம் ஏற்றியதை கூறி உங்களுக்கான இன்சூரன்ஸ் பணத்தை வழங்க மறுக்கும். இதனால் நீங்கள் பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

உங்கள் காரில் ஓவர் லோடு ஏற்றினால் என்ன நடக்கும் தெரியுமா?

இதை கருத்தில் கொண்டு நீங்கள் காரில் அதிக பாரம் ஏற்றுவதை தவிர்த்து அனுமதிக்கப்பட்ட அளவுடைய பாரத்தை மட்டுமே ஏற்றி பயணம் செய்ய வேண்டும். உங்கள் காரில் அதிகம் பாரம் ஏற்றி சென்று சிக்கலில் மாட்டிக்கொண்ட அனுபவம் இருந்தால் கமெண்டில் பதிவு செய்யுங்கள். இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Reasons Why You Should Never Overload Your Car.Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X