இந்தியர்கள் தேவையே இல்லாமல் ஹாரன் அடிப்பது ஏன் தெரியுமா? இந்த காமெடி வேற எங்கயும் நடக்கவே நடக்காது

இந்தியாவில் தேவையே இல்லாமல் ஹாரன் அடிக்கும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது. இதற்கான காரணங்கள், பாதிப்புகள், தீர்வுகள் குறித்து அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு.

இந்தியர்கள் தேவையே இல்லாமல் ஹாரன் அடிப்பது ஏன் தெரியுமா? இந்த காமெடி வேற எங்கயும் நடக்கவே நடக்காது

இந்தியாவின் முன்னணி நகரங்கள் அனைத்தும் ஒலி மாசுபாடு பிரச்னையால் தற்போது மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எரிச்சல், மனச்சோர்வு, மன அழுத்தம், காது கேளாமை, ஞாபக மறதி மற்றும் பதற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு ஒலி மாசுபாடு காரணமாக உள்ளது. அத்துடன் சாலை விபத்துக்களுக்கும் இது வழிவகுக்கிறது.

இந்தியர்கள் தேவையே இல்லாமல் ஹாரன் அடிப்பது ஏன் தெரியுமா? இந்த காமெடி வேற எங்கயும் நடக்கவே நடக்காது

ஆனால் ஒலி மாசுபாடு பிரச்னையை நாம் குறைத்து மதிப்பிட்டு கொண்டிருக்கிறோம். அதாவது இதனை ஒரு சீரியஸான பிரச்னையாக நாம் கருதுவது கிடையாது. ஒலி மாசுபாடு அடைவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. ஆனால் சாலையில் பயணிக்கும்போது வாகனங்களின் ஹாரனை தேவையில்லாமல் ஒலிப்பதுதான் ஒலி மாசுபாட்டிற்கு மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.

இந்தியர்கள் தேவையே இல்லாமல் ஹாரன் அடிப்பது ஏன் தெரியுமா? இந்த காமெடி வேற எங்கயும் நடக்கவே நடக்காது

வாகனங்களில் ஹாரன் என்பது ஒரு காரணத்திற்காகவே வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தேவையே இல்லாமல் ஹாரன் அடிக்கும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது. குறிப்பாக இந்தியர்களிடம்தான் இந்த கெட்ட பழக்கம் மிகவும் அதிகமாக காணப்படுகிறது. வெளிநாட்டில் இருந்து ஒருவர் இந்தியாவிற்கு புதிதாக வந்தால், அவர்களின் மனதில் பின்வரும் கேள்வி நிச்சயமாக எழும்.

இந்தியர்கள் தேவையே இல்லாமல் ஹாரன் அடிப்பது ஏன் தெரியுமா? இந்த காமெடி வேற எங்கயும் நடக்கவே நடக்காது

''இந்தியர்கள் எதற்கெடுத்தாலும் ஹாரனை அடித்து கொண்டே இருப்பது ஏன்?'' என்பதுதான் அந்த கேள்வி. தேவையில்லாமல் ஹாரன் அடிப்பதன் காரணமாக, நடுரோட்டில் வாகன ஓட்டிகளுக்கு இடையே தகராறு ஏற்படும் நிகழ்வு இந்தியாவில் தற்போது சகஜமான ஒரு விஷயமாக மாறி விட்டது. அளவுக்கு அதிகமான ஹாரன் ஒலி ஏற்படுத்தும் எரிச்சல் வாகன ஓட்டிகளை ஆத்திரமூட்டி தகராறுக்கு வழிவகுக்கிறது.

இந்தியர்கள் தேவையே இல்லாமல் ஹாரன் அடிப்பது ஏன் தெரியுமா? இந்த காமெடி வேற எங்கயும் நடக்கவே நடக்காது

இது போன்ற பிரச்னைகளில் சிக்கி கொள்ளாமல் இருக்க வேண்டுமென்றால், ஹாரனை எப்போது, எதற்காக பயன்படுத்த வேண்டும்? எப்போதெல்லாம் ஹாரனை உபயோகிக்க கூடாது? என்ற விஷயங்களை நீங்கள் தெரிந்து கொள்வது மிகவும் அவசியமானது. வேறு ஏதேனும் வாகனம் ஒன்று உங்கள் மீது மோதுவதற்கு வந்தால், நீங்கள் ஹாரனை அடித்து அந்த வாகனத்தின் டிரைவரை எச்சரிக்கை செய்யலாம்.

இந்தியர்கள் தேவையே இல்லாமல் ஹாரன் அடிப்பது ஏன் தெரியுமா? இந்த காமெடி வேற எங்கயும் நடக்கவே நடக்காது

இதுபோன்ற சமயங்களில் ஹாரன் அடிப்பது அவசியமானது. அதேபோல் ஆபத்தில் இருக்கும் பாதசாரிகளை எச்சரிக்கை செய்யவும் நீங்கள் ஹாரனை ஒலிக்கலாம். உங்கள் வாகனமோ அல்லது வேறு ஏதேனும் ஒரு வாகனமோ பாதசாரிகளின் மீது மோதுவதற்கான அபாயம் காணப்படும் பட்சத்தில், நீங்கள் ஹாரனை ஒலித்து பாதசாரிகளை எச்சரிக்கலாம்.

இந்தியர்கள் தேவையே இல்லாமல் ஹாரன் அடிப்பது ஏன் தெரியுமா? இந்த காமெடி வேற எங்கயும் நடக்கவே நடக்காது

இது பாதுகாப்பு தொடர்பானது என்பதால், ஆபத்தில் இருக்கும் பாதசாரிகளை எச்சரிக்கை செய்ய ஹாரனை ஒலிப்பது நல்ல ஐடியாதான். ஆனால் உங்கள் நண்பர்கள் அல்லது தெரிந்தவர்களுக்கு 'ஹாய்' சொல்வதற்காக எல்லாம் ஹாரனை அடிப்பது கொஞ்சம் ஓவர்தான். இந்திய வாகன ஓட்டிகள் பலரிடம் இந்த பழக்கம் இருக்கிறது என்பதை மறுக்க முடியாது.

இந்தியர்கள் தேவையே இல்லாமல் ஹாரன் அடிப்பது ஏன் தெரியுமா? இந்த காமெடி வேற எங்கயும் நடக்கவே நடக்காது

சாலையில் தங்களுக்கு தெரிந்தவர்கள் அல்லது நண்பர்கள் யாரையாவது பார்த்து விட்டால் போதும், உடனே ஹாரனை அடித்து அவர்களின் கவனத்தை தங்கள் பக்கம் திருப்புவதை பலர் வழக்கமாக கொண்டுள்ளனர். இது எவ்வளவு பெரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அவர்கள் கொஞ்சம் கூட உணர்வது கிடையாது.

இந்தியர்கள் தேவையே இல்லாமல் ஹாரன் அடிப்பது ஏன் தெரியுமா? இந்த காமெடி வேற எங்கயும் நடக்கவே நடக்காது

நீங்கள் தேவையில்லாமல் அடிக்கும் இந்த ஹாரனுக்கு ரெஸ்பான்ஸ் செய்யும் விதமாக, உங்களை சுற்றியுள்ள டிரைவர்கள் தங்கள் வாகனத்தின் வேகத்தை தேவையில்லாமல் குறைக்கலாம் அல்லது கூட்டலாம். உங்கள் நண்பருக்கு ஹாய் சொல்வதற்காகதான் நீங்கள் ஹாரனை அடித்தீர்கள் என்பது அவர்களுக்கு தெரியாதல்லவா?

இந்தியர்கள் தேவையே இல்லாமல் ஹாரன் அடிப்பது ஏன் தெரியுமா? இந்த காமெடி வேற எங்கயும் நடக்கவே நடக்காது

வேகத்தில் ஏற்படும் இந்த தேவையில்லாத திடீர் மாற்றம் காரணமாக அவர்கள் பரிதாபமாக விபத்தில் சிக்கி கொள்ள கூடும். எனவே இப்படி ஒரு பழக்கம் உங்களிடம் இருந்தால் தற்போதே அதை விட்டு விடுங்கள். அதே போன்று கோவத்தை வெளிக்காட்டும் வகையில், ஹாரனை அழுத்தி பிடிக்கும் பழக்கமும் பலரிடம் காணப்படுகிறது.

இந்தியர்கள் தேவையே இல்லாமல் ஹாரன் அடிப்பது ஏன் தெரியுமா? இந்த காமெடி வேற எங்கயும் நடக்கவே நடக்காது

அதாவது கோவத்தில் இருக்கும்போது எதற்காக ஹாரன் அடிக்கிறோம்? என்பதே தெரியாமல் பலர் ஹாரனை அடித்து கொண்டிருப்பார்கள். சாலையில் மற்றவர்கள் செய்யும் முட்டாள்தனமான ஒரு சில காரியங்களால் கோபமடைந்து அவர்கள் இவ்வாறு செய்கின்றனர். அல்லது வேறு எங்கேயோ இருக்கும் கோபத்தை ஹாரன் மூலமாக சாலையில் காட்டுகின்றனர்.

இந்தியர்கள் தேவையே இல்லாமல் ஹாரன் அடிப்பது ஏன் தெரியுமா? இந்த காமெடி வேற எங்கயும் நடக்கவே நடக்காது

நீங்கள் இந்த ரகத்தை சேர்ந்தவர் என்றால், உடனே மாறி விடுவது நல்லது. ஏனெனில் நீங்கள் இடைவிடாமல் அடிக்கும் ஹாரனின் ஒலி மற்றவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தி, உங்களுக்கு சிக்கலை உண்டாக்கலாம். இதுதவிர குழந்தைகளை மகிழ்விக்கிறேன் பேர்வழி என்ற பெயரிலும் ஒரு சிலர் தேவையில்லாத சமயங்களில் ஹாரனை அடிப்பார்கள். கேட்டால் ஒரு ஜாலிக்காக அடித்தேன் என்பார்கள்.

இந்தியர்கள் தேவையே இல்லாமல் ஹாரன் அடிப்பது ஏன் தெரியுமா? இந்த காமெடி வேற எங்கயும் நடக்கவே நடக்காது

பாஸ், நீங்கள் உங்கள் நண்பர்களுக்கு ஹாய் சொல்லவும், ஜாலியாக விளையாடுவதற்கும் ஹாரன் டிசைன் செய்யப்படவில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். இதுதவிர நம் நாட்டில் உள்ள பெரும்பாலான டிராபிக் சிக்னல்களில் நீங்கள் ஒரு பொதுவான விஷயத்தை பார்க்க முடியும். டிராபிக் சிக்னலில் பச்சை விளக்கு எரிந்து விட்டால் போதும், உடனே அங்கிருக்கும் அனைவரும் ஹாரனை அடிக்க தொடங்கி விடுவார்கள்.

இந்தியர்கள் தேவையே இல்லாமல் ஹாரன் அடிப்பது ஏன் தெரியுமா? இந்த காமெடி வேற எங்கயும் நடக்கவே நடக்காது

சிக்னல் பச்சை விளக்கிற்கு மாறிய உடனேயே ஹாரனை அடிக்க வேண்டும் என இவர்களுக்கு யார் சொல்லி கொடுத்தார்கள் என்பது தெரியவில்லை. ஏறக்குறைய இந்தியாவில் மட்டும்தான் இதுபோன்ற காமெடிகளை பார்க்க முடியும். ஆனால் சிக்னலில் சிகப்பு விளக்கு எரியும்போது, செல்போனில் மெசேஜ் செய்வது போன்ற ஒரு சில மோசமான பழக்க வழக்கங்கள் சிலருக்கு இருக்கிறது.

இந்தியர்கள் தேவையே இல்லாமல் ஹாரன் அடிப்பது ஏன் தெரியுமா? இந்த காமெடி வேற எங்கயும் நடக்கவே நடக்காது

இதனால் சிக்னல் பச்சை விளக்கிற்கு மாறியதை அவர்கள் கவனிப்பது இல்லை. அவர்கள் வண்டியை எடுக்க வேண்டும் என்பதற்காகவும், பின்னால் இருப்பவர்கள் ஹாரன் அடிக்கின்றனர். இந்தியாவில் ஒலி மாசுபாடு பிரச்னையை குறைக்க வேண்டுமென்றால், வாகன ஓட்டிகள் தேவையில்லாமல் ஹாரன் அடிப்பதை கட்டாயம் குறைத்தாக வேண்டும்.

இந்தியர்கள் தேவையே இல்லாமல் ஹாரன் அடிப்பது ஏன் தெரியுமா? இந்த காமெடி வேற எங்கயும் நடக்கவே நடக்காது

இதற்கு என்னென்ன செய்யலாம்? என்பதை இனி பார்க்கலாம். உண்மையில் இந்தியாவை பொறுத்தவரை, தேவையில்லாமல் ஹாரன் அடிப்பதை வாகன ஓட்டிகள் ஒரு பிரச்னையாக கருதுவது கிடையாது. எனவே தேவையில்லாமல் ஹாரன் அடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் ஒலி மாசுபாடு குறித்து விரிவான விழிப்புணர்வை அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டியது அவசியம்.

இந்தியர்கள் தேவையே இல்லாமல் ஹாரன் அடிப்பது ஏன் தெரியுமா? இந்த காமெடி வேற எங்கயும் நடக்கவே நடக்காது

மருத்துவமனைகள் மற்றும் பள்ளிக்கூடங்கள் இருக்கும் இடங்களில் ஹாரன் அடிக்க கூடாது என்ற போர்டுகள் அல்லது போஸ்டர்கள் இருப்பதை உங்களால் காண முடியும். ஆனால் பெரும்பாலான வாகன ஓட்டிகள் அதை கடைபிடிப்பது கிடையாது. எனவே இது தொடர்பாகவும் வாகன ஓட்டிகளுக்கு விரிவாக எடுத்துரைக்க வேண்டும்.

இந்தியர்கள் தேவையே இல்லாமல் ஹாரன் அடிப்பது ஏன் தெரியுமா? இந்த காமெடி வேற எங்கயும் நடக்கவே நடக்காது

டிவி, ரேடியோ, செய்திதாள் மற்றும் இணையதளங்கள் மூலமாக இந்த விழிப்புணர்வு பணிகளை செய்யலாம். அத்துடன் புகழ்பெற்ற சினிமா நட்சத்திரங்களை இந்த பணிகளுக்கு பயன்படுத்தலாம். இதன் மூலமாக ஒலி மாசுபாட்டின் பின் விளைவுகள் புரிய வரும்போது, தேவையில்லாமல் ஹாரன் அடிப்பதை வாகன ஓட்டிகள் குறைத்து கொள்வார்கள்.

இந்தியர்கள் தேவையே இல்லாமல் ஹாரன் அடிப்பது ஏன் தெரியுமா? இந்த காமெடி வேற எங்கயும் நடக்கவே நடக்காது

அதேபோல் தேவையில்லாமல் ஹாரன் அடிப்பவர்களுக்கு எதிரான சட்ட திட்டங்களை மிகவும் கடுமையாக்க வேண்டும். தேவையில்லாத சமயங்களில் ஹாரன் அடிப்பவர்களுக்கு அபராதம் உள்ளிட்ட தண்டனைகளை வழங்குவதன் மூலமாக இந்தியாவில் இந்த பிரச்னையை ஓரளவிற்கு முடிவுக்கு கொண்டு வர முடியும். இது தொடர்பான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.

இந்தியர்கள் தேவையே இல்லாமல் ஹாரன் அடிப்பது ஏன் தெரியுமா? இந்த காமெடி வேற எங்கயும் நடக்கவே நடக்காது

ஒரு சிலர் தேவையற்ற சமயங்களில் ஹாரன்களை அடிப்பதால், உங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் மற்றும் இந்த பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர உங்களிடம் உள்ள திட்டங்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸ் வாயிலாக பகிர்ந்து கொள்ளுங்கள்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Dangers Of Unnecessary Honking - Solutions. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X