இந்தியாவிலேயே இருந்திருந்தால் இது எல்லாம் நடந்திருக்குமா? துபாய் அரச குடும்பம் வைத்திருக்கும் புகாட்டி கார்!!
புகாட்டி (Bugatti) காரை ஒருவர் வாங்குகிறார் என்றால், நிச்சயமாக அவர் பெரும் பணக்காரராக தான் இருக்க முடியும். ஏனெனில், அந்த அளவிற்கு புகாட்டி கார்களின் விலைகள் பல கோடி ரூபாய்களில் மிகவும் அதிகமாக உள்ளன. இன்னும் சொல்லப்போனால், இந்தியாவில் புகாட்டி கார்கள் நேரடியாக விற்பனை செய்யப்படுவது இல்லை. அதாவது, இந்தியாவில் எதாவது ஒரு புகாட்டி காரை வாங்க விரும்புகிறீர்கள் எனில், அதற்கென செயல்படும் நிறுவனங்களை அணுக வேண்டும்.
இந்த நிறுவனங்கள் நேரடியாக புகாட்டி நிறுவனத்துடன் தொடர்பில் இருப்பது இல்லை. மாறாக, வெளிநாடுகளில் செயல்படும் புகாட்டி ஷோரூம்கள் உடன் இணைப்பில் இருக்கின்றன. கஸ்டமர் புக் செய்யும் புகாட்டி காரை கப்பல் வழியாக இந்தியாவிற்கு கொண்டுவந்து டெலிவிரி செய்கின்றன. இதற்கு பெரிய அளவில் பணம் செலவாகும்.

எந்த அளவிற்கு என்றால், காரின் விலையில் 2இல் இருந்து 3 மடங்கு அதிகமாக பணம் செலவாகும். ஏனெனில், இந்திய அரசாங்கம் இறக்குமதி வரி என பெரிய தொகையை கட்டணமாக இத்தகைய கார் இறக்குமதிகளுக்கு விதிக்கிறது. இது இல்லாமல், காரை பத்திரமாக கொண்டுவந்ததற்கு என குறிப்பிட்ட தொகையை காரை இந்தியாவிற்கு கொண்டுவரும் நிறுவனம் எடுத்துக் கொள்ளும்.
இது எல்லாம், இந்தியாவிற்கு புகாட்டி போன்றதான அல்ட்ரா-லக்சரி கார்களை கொண்டுவருபவர்களுக்கு ஏற்படும் செலவுகளாகும். அதுவே, புகாட்டி கார்கள் விற்பனை செய்யப்படும் நாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அங்குள்ளவர்களை போன்று, அவர்களும் காருக்கான ஆன்-ரோடு விலையை மட்டும் செலுத்தி காரை பெற்றுக் கொள்ளலாம்.

அந்த வகையில், வெளிநாட்டில் வசிக்கும் இந்திய தொழிலதிபர் ஒருவர் தற்போது விலையுயர்ந்த புகாட்டி கார் ஒன்றை வாங்கி உள்ளார். பெரும்பாலும் அபுதாபி, துபாய், கத்தார் போன்ற மத்திய கிழக்கு பகுதிகளில் இருந்துதான் அதிகமாக இவ்வாறான சொகுசு கார்கள் இந்தியாவிற்கு கொண்டுவரப்படுகின்றன. இதனாலேயே, மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் இந்திய செல்வந்தர்கள் எப்படியாவது அங்கு ஒரு அல்ட்ரா-லக்சரி காரை வாங்க விரும்புகின்றனர்.
அந்த வகையில் தற்போது துபாயில் புகாட்டி சிரோன் (Chiron) காரை வாங்கியிருக்கும் இந்த இந்திய வம்சாவளி தொழிலதிபரின் பெயர், அடெல் சாஜன் (Adel Sajan) ஆகும். துபாயில் தானுபே (Danube) என்கிற பல்நாட்டு நிறுவன குழுமத்தின் இயக்குனராக இருக்கும் அடெல் சாஜன் ரியல் எஸ்டேட், கட்டுமானத்திற்கான பொருட்களை விற்பனை செய்வது மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் சில்லறை விற்பனைகளை மேற்கொள்வது உள்ளிட்ட தொழில்களை மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில், துபாயில் உள்ள புகாட்டியின் அங்கீகரிக்கப்பட்ட ஷோரூமுக்கு மனைவி மற்றும் குழந்தைகள் சென்று பிராண்ட்-நியூ சிரோன் காரை தொழிலதிபர் அடெல் சாஜன் டெலிவிரி பெற்றுள்ளார். சிரோன் ஆனது பொது விற்பனையில் இருக்கும் உலகின் மிக அதிவேகமான ஹைப்பர் கார் ஆகும். பெரிய அளவிலான 8 லிட்டர் குவாட்-டர்போசார்ஜ்டு டபிள்யூ16 என்ஜின் உடன் உருவாக்கப்படும் புகாட்டி சிரோன் காரின் மதிப்பு இந்திய ரூபாயில் ஏறக்குறைய ரூ.25 கோடி ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நம்மில் பலருக்கு புகாட்டி சிரோன் காரை சாலையில் காண்பதே கனவாக இருக்கும்போது, இந்திய வம்சாவளியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் துபாயில் புகாட்டி சிரோன் காரை வாங்கி இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் இவ்வாறான அல்ட்ரா-லக்சரி காரை வாங்கிய முதல் இந்தியர் அடெல் சாஜன் கிடையாது. இதற்கு முன்னர் பல இந்தியர்கள் இவ்வாறு பல்வேறு விதமான கார்களை வாங்கி உள்ளனர்.
Souce: Cartog (https://www.cartoq.com/)


Click it and Unblock the Notifications








