நடுங்க வைக்கும் கருப்பு பக்கம்.. உல்லாச கப்பல்களில் இருந்து பயணிகள் திடீரென மாயமாகும் மர்மம் இதுதான்

உல்லாச கப்பல்களில் இருந்து மர்மமான முறையில் பயணிகள் திடீரென மாயமாகி வருகின்றனர். இதன் பின்னணி நடுங்க வைக்கும் வகையில் உள்ளது.

நடுங்க வைக்கும் கருப்பு பக்கம்.. உல்லாச கப்பல்களில் இருந்து பயணிகள் திடீரென மாயமாகும் மர்மம் இதுதான்

வாழ்நாளில் ஒரு முறையாவது, ஆடம்பரமான உல்லாச கப்பல்களில் பயணித்து விட வேண்டும் என்ற ஆவல் நிச்சயமாக அனைவருக்கும் இருக்கும். பார்கள், ஸ்பாக்கள், நீச்சல் குளங்கள், 5 ஸ்டார் ஹோட்டல்களுக்கு இணையான ரெஸ்டாரெண்ட்கள் என உல்லாச கப்பல்களில் இருக்கும் ஒவ்வொரு அம்சமும் சுற்றுலா பயணிகளை சுண்டியிழுக்கிறது.

நடுங்க வைக்கும் கருப்பு பக்கம்.. உல்லாச கப்பல்களில் இருந்து பயணிகள் திடீரென மாயமாகும் மர்மம் இதுதான்

ஆனால் உல்லாச கப்பல்களில் சொகுசாக பயணம் செய்ய வேண்டும் என்ற ஆசை உள்ளவர்களில் நீங்களும் ஒருவர் என்றால், இந்த செய்தி நிச்சயம் உங்களுக்கு பேரதிர்ச்சியாகதான் இருக்கும். உல்லாச கப்பல்களின் ஆடம்பரமான ஒரு பக்கத்தை பற்றி மட்டுமே நீங்கள் இதுவரை அதிகம் கேள்விபட்டிருப்பீர்கள். ஆனால் உல்லாச கப்பல்கள் பற்றி யாருக்கும் தெரியாத கருப்பு பக்கம் ஒன்று உள்ளது.

நடுங்க வைக்கும் கருப்பு பக்கம்.. உல்லாச கப்பல்களில் இருந்து பயணிகள் திடீரென மாயமாகும் மர்மம் இதுதான்

உல்லாச கப்பல்களில் ஒரு ஆண்டுக்கு மட்டும் 20 மில்லியன் பயணிகள் பயணிக்கின்றனர். அதாவது 2 கோடி பேர். ஆனால் இது தோராயமான எண்கள் மட்டும்தான். ஒரு ஆண்டுக்கு உல்லாச கப்பல்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருந்தாலும் கூட ஆச்சரியப்படுவதற்கு எதுவும் கிடையாது.

நடுங்க வைக்கும் கருப்பு பக்கம்.. உல்லாச கப்பல்களில் இருந்து பயணிகள் திடீரென மாயமாகும் மர்மம் இதுதான்

இவர்களில் ஒரு ஆண்டுக்கு மட்டும் சுமார் 20 பயணிகள் உல்லாச கப்பல்களில் இருந்து மர்மமான முறையில் திடீரென மாயமாகி விடுகின்றனர். இந்த வகையில் கடந்த 2000ம் ஆண்டில் இருந்து தற்போது வரை 300-350 பேர், உல்லாச கப்பல்களில் இருந்து மர்மமான முறையில் மாயமாகி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த எண்ணிக்கை 400ஆக கூட இருக்கலாம் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

நடுங்க வைக்கும் கருப்பு பக்கம்.. உல்லாச கப்பல்களில் இருந்து பயணிகள் திடீரென மாயமாகும் மர்மம் இதுதான்

உல்லாச கப்பல்களில் இருந்து திடீரென மர்மமான முறையில் மாயமானவர்கள் பற்றிய ஒரு சில தகவல்கள் அதிர்ச்சியளிக்கும் வகையில் இருக்கின்றன. ஒரு முறை பெண் ஒருவர் தனது உறவினர்களுடன் உல்லாச கப்பல் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்தார். ஆனால் திட்டமிட்டபடி அவர் கேபினுக்கு திரும்பி வரவில்லை.

நடுங்க வைக்கும் கருப்பு பக்கம்.. உல்லாச கப்பல்களில் இருந்து பயணிகள் திடீரென மாயமாகும் மர்மம் இதுதான்

இதற்காக அவரது உறவினர்கள் அதிர்ச்சியடையவில்லை. உல்லாச கப்பலின் ஏதேனும் ஒரு பகுதியில் அவர் தனியாக பயணத்தை ரசித்து கொண்டிருப்பார் என்று நினைத்து கொண்டனர். ஆனால் உல்லாச பயணம் முடியும் சமயத்தில்தான், அந்த பெண் மாயமானதை அவர்கள் உணர்ந்தனர். இதே போன்று மற்றொரு சம்பவத்தில், தேனிலவு சென்ற ஆண் ஒருவர் திடீரென மர்மமாக மறைந்து போனார்.

நடுங்க வைக்கும் கருப்பு பக்கம்.. உல்லாச கப்பல்களில் இருந்து பயணிகள் திடீரென மாயமாகும் மர்மம் இதுதான்

அவர் தற்போது வரை திரும்பி வரவே இல்லை. இது தொடர்பாக விசாரணை நடத்திய அதிகாரிகள், அவரது கேபினில் ரத்த கறைகள் இருப்பதை கண்டறிந்தனர். மேலும் உல்லாச கப்பலின் பக்கவாட்டு பகுதியிலும், ரத்த கோடுகள் இருப்பதை அவர்கள் கண்டுபிடித்தனர். இதேபோல் ஒரு முறை உல்லாச கப்பலின் பெண் பணியாளர் ஒருவர் போனில் பேசி கொண்டிருந்தார்.

நடுங்க வைக்கும் கருப்பு பக்கம்.. உல்லாச கப்பல்களில் இருந்து பயணிகள் திடீரென மாயமாகும் மர்மம் இதுதான்

அவரது முகத்தில் கவலை படர்ந்திருந்தது. அதுதான் அந்த பெண்ணை கடைசியாக பார்த்தது. அதன் பின்பு அவர் திடீரென மாயமாகி விட்டார். இவை ஒரு சில உதாரணங்கள் மட்டும்தான். இதுபோல் இன்னும் பலர் உல்லாச கப்பல்களில் இருந்து, மர்மமான முறையில் மாயமாகி கொண்டுள்ளனர். அவர்கள் எங்கு போகின்றனர்? அவர்களுக்கு என்ன ஆனது? என்பதை யாராலும் கண்டுபிடிக்க முடிவதில்லை.

நடுங்க வைக்கும் கருப்பு பக்கம்.. உல்லாச கப்பல்களில் இருந்து பயணிகள் திடீரென மாயமாகும் மர்மம் இதுதான்

ஆனால் உல்லாச கப்பல்களில் இருந்து பயணிகள் மாயமாவதற்கு ஒரு சில காரணங்கள் கூறப்படுகின்றன. பொதுவாக உல்லாச கப்பல்கள் என்றாலே மது விருந்துடன் ஆட்டம், பாட்டம் களைகட்டும். அதுபோன்ற சமயங்களில், போதை தலைக்கேறியதால் ஒரு சிலர் தவறுதலாக உல்லாச கப்பல்களில் இருந்து கடலில் விழுந்து மாயமாகி விடுவதாக கூறப்படுகிறது.

நடுங்க வைக்கும் கருப்பு பக்கம்.. உல்லாச கப்பல்களில் இருந்து பயணிகள் திடீரென மாயமாகும் மர்மம் இதுதான்

இதுதவிர உல்லாச கப்பல்களின் ஆபத்தான இடங்களில் நின்று கொண்டு செல்பி எடுப்பது போன்ற விபரீத சம்பவங்களாலும், ஒரு சிலர் கடலில் தவறி விழுந்து விடுவதாக உல்லாச கப்பல்களின் பணியாளர்கள் கூறுகின்றனர். அவர்களை யாரும் கவனிக்காமல் போனால், அவர்கள் உயிருடன் திரும்பி வருவது சிரமம்தான்.

நடுங்க வைக்கும் கருப்பு பக்கம்.. உல்லாச கப்பல்களில் இருந்து பயணிகள் திடீரென மாயமாகும் மர்மம் இதுதான்

அத்துடன் வாழ்க்கையில் விரக்தியடைந்த ஒரு சிலர் தற்கொலை செய்து கொள்வதற்கான இடமாக உல்லாச கப்பல்களை தேர்வு செய்வதாகவும் கூறப்படுகிறது. உல்லாச கப்பல்களில் பயணம் செய்யும்போது, கடலில் குதித்து அவர்கள் உயிரை மாய்த்து கொள்கின்றனர். இவ்வாறு மாயமானவர்களின் உடல்களை கண்டறிவது கூட பெரும் சவாலான காரியமாகதான் இருக்கிறது.

நடுங்க வைக்கும் கருப்பு பக்கம்.. உல்லாச கப்பல்களில் இருந்து பயணிகள் திடீரென மாயமாகும் மர்மம் இதுதான்

உல்லாச கப்பல்களில் இருந்து மாயமாகும் பெரும்பாலானோர் காப்பாற்றப்படுவதில்லை என்பது சோகமான ஒரு செய்திதான். சில சமயங்களில் விரிவான தேடுதல் வேட்டை நடத்தப்படவே செய்கிறது. ஆனால் பெரும்பாலான தேடுதல் பணிகள் ஏமாற்றத்தில்தான் முடிகின்றன. மாயமானவர்களின் உடல்கள் பெரும்பாலும் கிடைப்பதில்லை.

நடுங்க வைக்கும் கருப்பு பக்கம்.. உல்லாச கப்பல்களில் இருந்து பயணிகள் திடீரென மாயமாகும் மர்மம் இதுதான்

ஒரு சில தேடுதல் மற்றும் மீட்பு பணிகளின்போது, உல்லாச கப்பல்களில் இருந்து மாயமானவர்களுடைய உடலின் எஞ்சிய பகுதி அல்லது அவர்களின் உடைமைகள் ஏதேனும் மட்டும் கிடைக்கிறது. இதை மட்டும் வைத்து கொண்டு அவர்களுடைய உறவினர்கள் இறுதி சடங்கு நடத்தும் அவலமும் நடப்பதாக கூறப்படுகிறது.

நடுங்க வைக்கும் கருப்பு பக்கம்.. உல்லாச கப்பல்களில் இருந்து பயணிகள் திடீரென மாயமாகும் மர்மம் இதுதான்

உல்லாச கப்பல்களில் இருந்து மாயமாகும் நபர்களின் வழக்குகள் பெரும்பாலும் தீர்க்கப்படுவது கிடையாது. இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. உல்லாச கப்பல்களில் நீங்கள் ஏறும்போது உண்மையில் நீங்கள் வெளிநாட்டு மண்ணில் காலடி எடுத்து வைக்கிறீர்கள் என்பதே இதற்கு முதன்மையான காரணமாக கூறப்படுகிறது.

நடுங்க வைக்கும் கருப்பு பக்கம்.. உல்லாச கப்பல்களில் இருந்து பயணிகள் திடீரென மாயமாகும் மர்மம் இதுதான்

அதாவது உல்லாச கப்பல்கள் பெரும்பாலும் பனாமா அல்லது பஹாமஸில்தான் பதிவு செய்யப்படுகின்றன. எனவே அவர்களின் விதிமுறைகள்தான் பின்பற்றப்படுகின்றன. இதன் காரணமாக வெளிநாட்டினர் யாராவது உல்லாச கப்பலில் இருந்து மாயமானால், அவர்களை கண்டறிவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன.

நடுங்க வைக்கும் கருப்பு பக்கம்.. உல்லாச கப்பல்களில் இருந்து பயணிகள் திடீரென மாயமாகும் மர்மம் இதுதான்

இதில் பல்வேறு அரசாங்கங்கள் தலையிட்டாலும், உல்லாச கப்பலில் இருந்து மாயமானவர்களை கண்டறிவது சவாலான காரியமாகவே இருக்கிறது. உல்லாச கப்பலில் இருந்து ஒருவர் மாயமானால், துறைமுகங்களிலும், கடலிலும் விரிவான தேடுதல் வேட்டை நடத்தப்படுகிறது. ஆனால் சிறிய அளவிலான ஆதாரங்கள் மட்டுமே கிடைக்கின்றன.

நடுங்க வைக்கும் கருப்பு பக்கம்.. உல்லாச கப்பல்களில் இருந்து பயணிகள் திடீரென மாயமாகும் மர்மம் இதுதான்

எனவே உல்லாச கப்பல்களில் பயணிக்கும்போது கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். உல்லாச கப்பல்களில் பெண்களை விட ஆண்கள்தான் மாயமாவதற்கான வாய்ப்புகள் அதிகம் என கூறப்படுகிறது. அதேசமயம் உல்லாச கப்பல்களில் இருந்து மாயமாகும் பயணிகளின் சராசரி வயது 44 ஆக இருக்கிறது என்பது கூடுதல் தகவல்.

Article Published On: Friday, January 17, 2020, 15:25 [IST]
English summary
Dark Side Of Cruise Ships. Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+