டொனால்டு டிரம்பின் டேஸ்ட்டுக்கு தக்கபடி உருவாக்கப்பட்ட தங்க நிற கவச வாகனம்!

Written By:

வரும் ஜனவரி 20ந் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள டொனால்டு டிரம்ப் பதவி ஏற்க உள்ளார். அமெரிக்காவின் பெரும் கோடீஸ்வர்களில் ஒருவரான டொனால்டு டிரம்ப் பற்றியும், அவரது தங்க முலாம் பூசப்பட்ட வீடு, வாகனங்கள் பற்றியும் பல சுவாரஸ்யமான செய்திகள் வந்து கொண்டு இருக்கின்றன.

இந்த நிலையில், தற்போதைய அமெரிக்க அதிபரான பாரக் ஒபாமா பயன்படுத்தி வரும் அதிகாரப்பூர்வ லிமோசின் காருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு, டொனால்டு டிரம்ப் பயன்படுத்துவதற்காக புதிய லிமோசின் ரக கார் தயாரிக்கப்பட்டு வருகிறது.

 டொனால்டு டிரம்ப் மனதை கவருமா இந்த தங்க நிற கவச வாகனம்!

இந்த நிலையில், லத்வியா நாட்டை சேர்ந்த டார்ட்ஸ் மோட்டார்ஸ் என்ற நிறுவனம் டொனால்டு டிரம்பின் தனிப்பட்ட ஆடம்பர வாழ்க்கையையும், அவரது கார் ஆர்வத்தையும் பிரதிபலிக்கும் விதத்தில் புதிய கவச எஸ்யூவி மாடல் ஒன்றின் படங்களை வெளியிட்டு இருக்கிறது.

 டொனால்டு டிரம்ப் மனதை கவருமா இந்த தங்க நிற கவச வாகனம்!

வீடு, வாகனங்களில் தங்க முலாம் பூசப்பட்ட பாகங்களை பதித்து வைத்து இருக்கும் டொனால்டு டிரம்பின் ஆர்வத்திற்கு ஏற்ப இந்த எஸ்யூவி ரக வாகனமும் தங்க நிறத்தில் இருக்கிறது.

 டொனால்டு டிரம்ப் மனதை கவருமா இந்த தங்க நிற கவச வாகனம்!

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல் கிளாஸ் எஸ்யூவியின் அடிப்படையில் இந்த கவச வாகனம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த வாகனமானது பி-7 பாதுகாப்பு தரம் நிறைந்த கவச வாகன பண்புகளையும், கட்டமைப்பையும் பெற்றிருக்கிறது.

 டொனால்டு டிரம்ப் மனதை கவருமா இந்த தங்க நிற கவச வாகனம்!

இந்த வாகனத்தில் இருக்கும் எஞ்சின் அதிகபட்சமாக 1,500 பிஎச்பி பவரை அளிக்க வல்லதாக இருக்கும். மேலும், இந்த காரின் கதவு கைப்பிடிகளை வெளியாட்கள் தொட்டால் ஷாக் அடிக்குமாம்.

 டொனால்டு டிரம்ப் மனதை கவருமா இந்த தங்க நிற கவச வாகனம்!

இந்த வாகனம் டொனால்டு டிரம்பை கவர்ந்துவிட்டால், கட்டமைத்து தர தயாராக இருக்கிறதாம் டார்ட்ஸ் மோட்டார்ஸ். டிரம்புக்கு பணம் பாொருட்டல்ல என்றாலும், இந்த வாகனம் அவரை கவருமா என்பதுதான் இங்கு விஷயம்.

 டொனால்டு டிரம்ப் மனதை கவருமா இந்த தங்க நிற கவச வாகனம்!

1869ம் ஆண்டிலிருந்து சர்வாதிகாரிகள், மன்னர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பெரும் கோடீஸ்வரர்களுக்கு இது போன்ற விசேஷமான வகை வாகனங்களை வடிவமைத்து கொடுத்து வருகிறதாம் டார்ட்ஸ் மோட்டார்ஸ்.

 டொனால்டு டிரம்ப் மனதை கவருமா இந்த தங்க நிற கவச வாகனம்!

கடந்த 2013ம் ஆண்டு அமெரிக்காவின் புகழ்பெற்ற பாடகரான கென்யே வெஸ்ட்டுக்கு இரண்டு ஹம்மர் எச்1 எஸ்யூவிகளை கவச வாகனங்களாக டார்ட்ஸ் நிறுவனம் மாற்றிக் கொடுத்துள்ளதாம். ஒவ்வொரு காரும் 2 மில்லியன் டாலர்கள் மதிப்பில் வேலைப்பாடுகள் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Dartz Reveals the ultimate Trumpmobile Pictures.
Please Wait while comments are loading...

Latest Photos