ஐதராபாத்தில் கொரோனா பிரச்னை ஏற்படுவதற்கு முன்பு இருந்ததை விட வாகன போக்குவரத்து அதிகரிப்பு...

ஐதராபாத் நகரில், கொரோனா பிரச்னை ஏற்படுவதற்கு முன்பு இருந்ததை விட வாகன போக்குவரத்து தற்போது அதிகரித்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஐதராபாத்தில் கொரோனா பிரச்னை ஏற்படுவதற்கு முன்பு இருந்ததை விட வாகன போக்குவரத்து அதிகரிப்பு...

இந்திய சாலைகள் போக்குவரத்து நெரிசலுக்கு பெயர் பெற்றவை. குறிப்பாக சென்னை, பெங்களூர், ஐதராபாத், மும்பை, டெல்லி மற்றும் கொல்கத்தா போன்ற பெரு நகர சாலைகளில், போக்குவரத்து நெரிசல் பிரச்னை தலைவிரித்தாடும். ஆனால் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் அனைவரும் வீடுகளுக்குள் முடங்கினர்.

ஐதராபாத்தில் கொரோனா பிரச்னை ஏற்படுவதற்கு முன்பு இருந்ததை விட வாகன போக்குவரத்து அதிகரிப்பு...

பள்ளி, கல்லூரிகள், பொழுதுபோக்கு பூங்காங்கள், திரையரங்குகள் மூடப்பட்டன. அலுவலக ஊழியர்கள் வீட்டில் இருந்தபடியே வேலை செய்யும்படி கேட்டு கொள்ளப்பட்டனர். பேருந்து, ஆட்டோ, டாக்ஸி போன்ற பொது போக்குவரத்து வாகனங்களை இயக்குவதற்கு தடை விதிக்கப்பட்டது. தனியார் கார், இரு சக்கர வாகனங்களை இயக்குவதற்கு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன. இதனால் சாலைகள் வெறிச்சோடின.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

ஐதராபாத்தில் கொரோனா பிரச்னை ஏற்படுவதற்கு முன்பு இருந்ததை விட வாகன போக்குவரத்து அதிகரிப்பு...

ஆனால் தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால், கிட்டத்தட்ட இயல்பு நிலை திரும்பி விட்டது. இந்திய சாலைகள் மீண்டும் பரபரப்பாக மாறி விட்டன. ஆனால் இன்னமும் ஒரு சில பகுதிகளில் வாகன போக்குவரத்து குறைவாகதான் காணப்படுகிறது. வழக்கம் போல் பயணங்களை மேற்கொள்ள ஒரு சிலர் அஞ்சுவது இதற்கு காரணமாக உள்ளது.

ஐதராபாத்தில் கொரோனா பிரச்னை ஏற்படுவதற்கு முன்பு இருந்ததை விட வாகன போக்குவரத்து அதிகரிப்பு...

ஆனால் ஐதராபாத் நகரில் ஆச்சரியம் அளிக்கும் விதமாக, கொரோனா வைரஸ் பிரச்னை ஏற்படுவதற்கு முன்பு இருந்ததை காட்டிலும் தற்போது அதிக வாகனங்கள் சாலையில் இயங்குகின்றன. ஐதராபாத் நகரில் வாகன போக்குவரத்து தொடர்பாக வெளியாகியுள்ள தரவுகள் இதனை நமக்கு தெளிவாக எடுத்து காட்டுகின்றன.

ஐதராபாத்தில் கொரோனா பிரச்னை ஏற்படுவதற்கு முன்பு இருந்ததை விட வாகன போக்குவரத்து அதிகரிப்பு...

ஐதராபாத் நகரில் பரபரப்பாக இயங்கும் 7 பகுதிகளில் கடந்த நவம்பர் 2ம் தேதி 1,24,528 வாகனங்கள் பயணம் செய்துள்ளன. ஆனால் கொரோனா வைரஸ் பிரச்னை ஏற்படுவதற்கு முன்னதாக கடந்த பிப்ரவரி 3ம் தேதி இந்த எண்ணிக்கை வெறும் 1,10,478 ஆக மட்டுமே இருந்தது. அதே சமயம் ஊரடங்கு அமலுக்கு கொண்டு வரப்பபடுவதற்கு முன்னதாக மார்ச் 2ம் தேதி இந்த எண்ணிக்கை 1,02,119 ஆக மட்டுமே இருந்தது.

ஐதராபாத்தில் கொரோனா பிரச்னை ஏற்படுவதற்கு முன்பு இருந்ததை விட வாகன போக்குவரத்து அதிகரிப்பு...

அதே நேரத்தில் ஊரடங்கு மிகவும் கடுமையாக இருந்த ஏப்ரல் 6ம் தேதி இந்த எண்ணிக்கை வெறும் 34,739 ஆக மட்டுமே இருந்துள்ளது. இங்கே குறிப்பிடப்பட்டுள்ள நாட்கள் அனைத்தும் திங்கள் கிழமையாகும். அதாவது கொரோனா பிரச்னை ஏற்படுவதற்கு முன்பு, ஊரடங்கு மற்றும் ஊரடங்கிற்கு பிறகான திங்கள் கிழமைகளில் வாகன போக்குவரத்து தொடர்பான தரவுகள் எடுக்கப்பட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டது.

ஐதராபாத்தில் கொரோனா பிரச்னை ஏற்படுவதற்கு முன்பு இருந்ததை விட வாகன போக்குவரத்து அதிகரிப்பு...

இதில், ஐதராபாத் நகரில் கொரோனா வைரஸ் பிரச்னை ஏற்படுவதற்கு முன்பு இருந்ததை விட தற்போது வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. இத்தனைக்கும் பள்ளி, கல்லூரிகள், இதர கல்வி நிறுவனங்கள் மற்றும் திரையரங்குள் ஆகியவை மீண்டும் திறக்கப்படுவதற்கு முன்பே கொரோனா பிரச்னை ஏற்படுவதற்கு முந்தைய நிலையை விட தற்போது வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐதராபாத்தில் கொரோனா பிரச்னை ஏற்படுவதற்கு முன்பு இருந்ததை விட வாகன போக்குவரத்து அதிகரிப்பு...

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ''இது பொருளாதாரம் மீண்டு வருவதற்கான நல்ல அறிகுறிதான். ஆனால் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தற்காத்து கொள்வதற்கு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தவறாமல் பின்பற்ற வேண்டும்'' என்றனர். முழுமையாக இயல்பு நிலை திரும்பும்பட்சத்தில், வாகன போக்குவரத்து இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Data Analysis: More Vehicles On Hyderabad Roads Than On Pre-Covid Days - Details. Read in Tamil
Story first published: Tuesday, November 10, 2020, 21:43 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X