சிங்க பெண்களையே மிஞ்சுட்டாங்க.. அப்பா-அம்மாவ பெருமிதத்தால கண் கலங்க வச்சுட்டாங்க இந்த பெண்..
பரிசளிப்பு என்பது இப்போதெல்லாம் ரொம்ப சர்வ சாதாரணமான ஒன்றாக மாறிவிட்டது. ஆனால், அனைத்து பரிசளிப்பு நிகழ்வுகளும் மக்களின் மனதைக் கவரும் வகையில் அமைந்துவிடுவதில்லை. அதேவேளையில், ஒரு சில பரிசளிப்பு நிகழ்வுகள் மிகப் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துவிடும். அந்தமாதிரியான ஓர் பரிசளிப்பு சம்பவமே தற்போது அரங்கேறி இருக்கின்றது. அதுபற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம்.
இளம் பெண் ஒருவர் அவரின் தந்தையின் நீண்ட நாள் கனவான ஓர் பைக்கை பரிசாக வழங்கி இருக்கின்றார். ராயல் என்பீல்டு கிளாசிக் 350 (Royal Enfield Classic 350) பைக்கையே அவர் பரிசாக வழங்கி இருக்கின்றார். இதனை சர்ப்ரைஸ் அவர் வழங்கி இருக்கின்றார். ஒரு சிலருக்கு இந்த நிகழ்வு மிகவும் சாதாரணமான ஒன்றாக தென்படலாம்.

ஆனால், அந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு அது சாதாரணமான நிகழ்வல்ல. அது ஓர் மறக்க முடியாத நிகழ்வே ஆகும். இதற்கு பரிசளிப்பு வீடியோவே சான்றாக இருக்கின்றது. கண்கள் கட்டப்பட்டநிலையில், ஷோரூம் அழைத்து வரப்பட்ட இளம் பெண்ணின் தந்தையை, கண்கட்டை அவிழ்த்து பைக்கை பார்த்த உடன் ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார்.
அவர் மட்டுமல்ல ஒட்டுமொத்த குடும்பத்தினரும் ஒரு நிமிடம் அப்படியே உறைந்து போய்விட்டனர். குறிப்பாக, அந்த இளம்பெண்ணின் அம்மா ஆனந்த கண்ணீரையே வடிக்க தொடங்கிவிட்டார். ஒட்டுமொத்த நிகழ்வும் ஷோரூமிலேயே அரங்கேறியது என்பது குறிப்பிடத்தகுந்தது. மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆர்த்தி சவந்த். இந்த இளம்பெண்ணே தன்னுடைய தந்தைக்கு பைக்கை சர்ப்ரைஸ் பரிசாக வழங்கி இருக்கின்றார்.

இப்போதைய நிலவரப்படி இந்தியாவில் ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக் 1 லட்சத்து 93 ஆயிரத்து 080 ரூபாய் தொடங்கி 2 லட்சத்து 24 ஆயிரத்து 755 ரூபாய் வரையிலான விற்கப்படுகின்றது. இரண்டு எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும். அதிகமான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.
இத்தகைய காஸ்ட்லியான பைக்கையே தந்தைக்கு பரிசாக வழங்கப்பட்டு இருக்கின்றது. இது ஓர் 350 சிசி பைக் ஆகும். இந்த பைக்கில் 349சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது ஓர் ஏர்-ஆயில் கூல்டு மோட்டார் ஆகும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 20.2 பிஎஸ் பவரையும், 27 என்எம் டார்க்கையும் வெளியேற்றும்.

கிளாசிக் 350 பைக் ஒரு லிட்டருக்கு 36.2 கிமீ வரையில் மைலேஜ் தரும். டூயல் சேனல் ஏபிஎஸ் மற்றும் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் என இரண்டு விதமான ஆப்ஷன்களில் இந்த பைக் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதுதவிர, நான்கு விதமான வண்ண ஆப்ஷன்களும் இந்த பைக்கில் வழங்கப்படுகின்றது.
கிளாசிக் 350 பைக்கின் ஒட்டுமொத்த எடையே 195 கிலோ மட்டுமே ஆகும். இதன் உயரம் 805 மிமீ ஆகும். ஆகையால், கொஞ்சம் உயரமாக இருந்தாலே இந்த பைக்கை இயக்கிக் கொள்ள முடியும். இந்த பைக்கில் சுமார் 13 லிட்டர் வரை பெட்ரோலை நிரப்பிக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
ராயல் என்பீல்டு நிறுவனம் இந்த பைக்கை இந்தியாவில் மட்டுமின்றி தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், கொரியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற உலக நாடுகள் பலவற்றில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. மேலும், இந்தியாவைப் போலவே இந்த உலக நாடுகளிலும் கிளாசிக் 350 பைக்கிற்கு நல்ல வரவேற்பே கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
இந்த பைக்கில் நடுத்தர டிஜிட்டல் திறன் கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், ட்ரிப்பர் நேவிகேஷன் உள்ளிட்ட நவீன கால அம்சங்கள் சில வழங்கப்பட்டு இருக்கின்றது. இத்துடன் சிறந்த ரைடு அனுபவத்தை வழங்கும் விதமாக முன் பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்கும், பின் பக்கத்தில் மோனோஷாக் அப்சார்பரும் வழங்கப்பட்டு இருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கக் கூடிய பைக்காக கிளாசிக் 350 இருக்கின்றது. இந்த பைக்கையே இளம் பெண் தன்னுடைய தந்தைக்கு பரிசாக வழங்கி இருக்கின்றார். இந்த பைக்கிற்கு சில நடிகைகளும் இந்தியாவில் ஃபேன் என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications









