அவரு முகத்தை பாருங்க! என்ன நடக்குதுனே தெரியாம ஒறஞ்சு போய்ட்டாரு! இந்த மாரி பொண்ணுங்கலாம் ரேர் பீஸ் செட்டியார்!
குழந்தைகளின் கனவுகளை நிறைவேற்றுவதற்காக பெற்றோர்கள் தங்கள் கனவுகளை தியாகம் செய்ய கொஞ்சம் கூட தயங்குவதே இல்லை. எனவே குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாக மாறிய பின்பு, தங்கள் பெற்றோர்களின் கனவுகளை நிறைவேற்ற முயற்சி செய்கின்றனர். ஆனால் ஒரு சிலரால் மட்டுமே இதில் வெற்றியடைய முடிகிறது.
அப்படி வெற்றியடைந்தவர்களை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி. சமூக வலை தளங்களில் தற்போது வைரல் வீடியோ (Viral Video) ஒன்று பரவி வருகிறது. 2 சகோதரிகள் தங்கள் தாயையும், தந்தையையும் சர்ப்ரைஸாக, நிஸான் (Nissan) ஷோரூமிற்கு அழைத்து சென்று, மேக்னைட் (Magnite) காரை பரிசாக வழங்கியதை இந்த வீடியோவில் பார்க்க முடிகிறது.

கார் ஷோரூம் ஊழியர் சாவியை கொடுத்தபோது, அந்த தந்தை திகைப்புடன் பார்த்ததுதான் இந்த வீடியோவின் ஹைலைட்டே! இதற்கு பிறகுதான், மகள்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து நிஸான் மேக்னைட் காரை பரிசாக வழங்கியிருப்பது அவருக்கு தெரிய வருவதை போல் இந்த திகைப்பு இருக்கிறது.
சந்தேகம், ஆச்சரியம் மற்றும் மகிழ்ச்சி என அந்த தந்தை பல முக பாவனைகளை காட்டுகிறார். பொதுவாக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் இருந்து பெரிதாக எதையும் எதிர்பார்ப்பதில்லை. அப்படி இருக்கும்போது மகள்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து நிஸான் மேக்னைட் போன்ற ஒரு அருமையான காரை பரிசாக வழங்கினால், அந்த தந்தையின் முகத்தில் தோன்றிய அத்தனை பாவனைகளும், யாராக இருந்தாலும் ஏற்படும்.

இந்த தந்தைக்கு அவரது மகள்கள் பரிசாக வழங்கிய நிஸான் மேக்னைட், சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்தது ஆகும். இந்திய சந்தையில் கியா சொனெட் (Kia Sonet), ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue), மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza) போன்ற கார்களுடன், நிஸான் மேக்னைட் போட்டியிட்டு வருகிறது.
இதுதவிர டாடா நெக்ஸான் (Tata Nexon), ரெனால்ட் கைகர் (Renault Kiger) மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 (Mahindra XUV300) ஆகிய கார்களுக்கும், நிஸான் மேக்னைட் விற்பனையில் சவால் அளித்து வருகிறது. நிஸான் மேக்னைட் காரின் ஆரம்ப விலை (Price) வெறும் 6 லட்ச ரூபாய் மட்டுமே.
அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 11.02 லட்ச ரூபாயாக உள்ளது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். இதில் எந்த வேரியண்ட்டை இந்த சகோதரிகள் தங்கள் தந்தைக்கு பரிசாக வழங்கியுள்ளனர்? என்பது உறுதியாக தெரியவில்லை. எனினும் அவர்கள் டாப் வேரியண்ட்டை பரிசாக வழங்கியிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிஸான் மேக்னைட் காரில் மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இதில், 1.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் (Petrol Engine) ஒன்றாகும். மற்றொன்று 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆகும். அத்துடன் பல்வேறு அதிநவீன வசதிகளும் (Features) இந்த காரில் கொடுக்கப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இது போன்ற நிகழ்வுகளை காண்பது உண்மையிலேயே மிகவும் மகிழ்ச்சியான ஒரு விஷயமாக இருக்கிறது. இந்த சகோதரிகளின் செயல்பாடு மற்றவர்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக அமையும் என நாங்கள் கருதுகிறோம். இவர்களை போல் மற்றவர்களும் தங்கள் பெற்றோர்களின் கனவுகளை நிறைவேற்ற முயற்சி செய்ய வேண்டும் என்பதே எங்கள் கருத்து!


Click it and Unblock the Notifications








