நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹீம் காரை ஏலம் எடுத்த இந்துமகாசபை தலைவர்... எதற்கு தெரியுமா?

Written By:

மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்படும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹீம் தற்போது வெளிநாட்டில் தலைமறைவாக உள்ளான். அவனுக்கு மும்பை உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், வெளிநாடுகளிலும் ஏராளமான சொத்துக்கள் உள்ளன.

இந்தநிலையில், அவனது பெயரிலும், அவனது கூட்டாளிகள் பெயரிலும் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள் நேற்று மும்பையில் அரசு சார்பில் பலத்த பாதுகாப்புடன் ஏலம் விடப்பட்டன.

இந்தநிலையில், தாவூத் இப்ராஹீம் பயன்படுத்தியதாக கூறப்படும் காரை இந்து மகாசபை தலைவர் சுவாமி சக்ரபாணி ஏலத்தில் எடுத்துள்ளார்.

அந்த காரை தீயிட்டு கொளுத்துவதற்காகவே ஏலத்தில் எடுத்துள்ளதாக அவர் கூறியிருக்கிறார். கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

ஹூண்டாய் கார்

ஹூண்டாய் கார்

தாவூத் இப்ராஹீமுக்கு சொந்தமான பச்சை நிற ஹூண்டாய் ஆக்சென்ட் கார் பறிமுதல் செய்யப்பட்டு மும்பையிலுள்ள அரசுக்கு சொந்தமான சமுதாய கூடம் ஒன்றின் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. MH-04-AX-3676 என்ற பதிவு எண் கொண்ட அந்த கார் மிகவும் மோசமான நிலையில் இருந்தது.

மிரட்டல்

மிரட்டல்

தாவூத் இப்ராஹீமுக்கு சொந்தமான 15 ஆண்டுகள் பழமையான அந்த ஹூண்டாய் ஆக்சென்ட் காருக்கு டெபாசிட் தொகையாக ரூ.4,000 செலுத்த அறிவுறுத்தப்பட்டதுடன், ஏலத்தில் அடிப்படை விலையாக ரூ.15,700 நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இறுதியாக, அந்த காரை இந்து மகாசபை தலைவர் சுவாமி சக்ரபாணி அந்த காரை ரூ.32,000க்கு ஏலம் எடுத்தார்.

காரை கொள்ளுத்துவோம்...

காரை கொள்ளுத்துவோம்...

தாவூத் இப்ராஹீம் காரை ஏலத்தில் எடுத்த இந்து மகாசபை தலைவர் சக்ரபாணி கூறுகையில், காரை ஆம்புலன்ஸாக மாற்ற திட்டமிட்டுள்ளோம்.

முடியாதபட்சத்தில், இந்த காரில் தாவூத்தின் உருவ பொம்மையை வைத்து தீயிட்டு கொளுத்த இருப்பதாக தெரிவித்துள்ளார்.

தாவூத் ஓட்டாத கார்

தாவூத் ஓட்டாத கார்

தாவூத் இப்ராஹீம் பயன்படுத்திய கார் என்று ஒரு தகவலும் இருக்கிறது. ஆனால், அவன் இந்தியாவை விட்டு வெளியேறி நீண்ட காலமாகிவிட்ட நிலையில், இந்த ஆக்சென்ட் கார் அவனது கூட்டாளிகள் பயன்படுத்தியதாக தெரிகிறது. இந்த காரை ஒருமுறை கூட தாவூத் ஓட்டியதில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

தனியார் நிறுவனம்

தனியார் நிறுவனம்

தாவூத் இப்ராஹீம் சொத்துக்களை ஏலம் விடுவதற்கு தனியார் ஏல நிறுவனத்தை அரசு நியமித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

செய்திகள் உடனுக்குடன்…

செய்திகள் உடனுக்குடன்…

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Hindu Mahasabha Leader won the bid to purchase Dawood’s Hyundai Accent, which was priced at measly Rs 32,000.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark