தமிழகத்தை புறக்கணித்த மத்திய அரசுக்கு அவமானம்... மோடியின் சாதனை என தம்பட்டம் அடித்த பாஜக கப்சிப்...

தமிழகத்தை புறக்கணித்த மத்திய அரசு தற்போது அவமானத்தில் சிக்கி கொண்டுள்ளது. இது மோடியின் சாதனை என தம்பட்டம் அடித்த பாஜக இதனால் கப்சிப் ஆகியுள்ளது.

தமிழகத்தை புறக்கணித்த மத்திய அரசுக்கு அவமானம்... மோடியின் சாதனை என தம்பட்டம் அடித்த பாஜக கப்சிப்...

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளதால், வரும் ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்றத்திற்கு தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே மத்திய அரசின் சாதனைகளை பாஜகவினர் மக்களுக்கு எடுத்துரைத்து வருகின்றனர்.

தமிழகத்தை புறக்கணித்த மத்திய அரசுக்கு அவமானம்... மோடியின் சாதனை என தம்பட்டம் அடித்த பாஜக கப்சிப்...

இதில், பாஜகவினர் தவறாமல் குறிப்பிடும் விஷயங்களில் ஒன்று டிரெயின்-18 (Train 18). பெரும் சாதனை என பாஜகவினர் கூறி வரும் டிரெயின்-18 ரயிலை, சென்னை பெரம்பூரில் உள்ள ஐசிஎப் எனப்படும் ரயில் பெட்டி தொழிற்சாலைதான் (ICF-Integral Coach Factory) தயார் செய்தது.

தமிழகத்தை புறக்கணித்த மத்திய அரசுக்கு அவமானம்... மோடியின் சாதனை என தம்பட்டம் அடித்த பாஜக கப்சிப்...

இன்றைய தேதியில் டிரெயின்-18தான் இந்தியாவின் அதிவேக ரயில். டெல்லி-ராஜதானி இடையே, கடந்த சில மாதங்களுக்கு முன் டிரெயின்-18 ரயில் சோதனை செய்து பார்க்கப்பட்டது. அப்போது இது மணிக்கு 180 கிலோ மீட்டர்கள் வேகத்தில் சென்றது.

தமிழகத்தை புறக்கணித்த மத்திய அரசுக்கு அவமானம்... மோடியின் சாதனை என தம்பட்டம் அடித்த பாஜக கப்சிப்...

தற்போதைய நிலையில் இந்தியாவில் வேறு எந்த ரயிலும் இவ்வளவு வேகத்தில் பயணிக்காது. இதுதவிர டிரெயின்-18 ரயிலில் இன்ஜின் இருக்காது என்பதும் குறிப்பிடத்தகுந்த விஷயம். எனவே இதுதான் இந்தியாவின் முதல் இன்ஜின்லெஸ் (Engineless) ரயிலாக பார்க்கப்படுகிறது.

தமிழகத்தை புறக்கணித்த மத்திய அரசுக்கு அவமானம்... மோடியின் சாதனை என தம்பட்டம் அடித்த பாஜக கப்சிப்...

இதன் பெட்டிகளில் பொருத்தப்பட்டுள்ள மின் மோட்டார்களின் உந்து சக்தியில்தான் டிரெயின்-18 ரயில் இயங்கும். 1,128 பேர் அமர்ந்து பயணம் செய்யக்கூடிய வகையில், 16 கோச்கள் பொருத்தப்பட்டுள்ள டிரெயின்-18 ரயிலில் ஏராளமான வசதிகள் இடம்பெற்றுள்ளன.

தமிழகத்தை புறக்கணித்த மத்திய அரசுக்கு அவமானம்... மோடியின் சாதனை என தம்பட்டம் அடித்த பாஜக கப்சிப்...

இதில், தானியங்கி கதவுகள், வை-பை, சிசிடிவி கேமரா, டிவி திரை, லக்ஸரியான இருக்கைகள் ஆகியவை குறிப்பிடத்தகுந்தவை. இதுதவிர ரயில் முழுக்க ஏசி வசதியும் செய்யப்பட்டுள்ளது. எனவேதான் இதனை பாஜகவினர் தங்களின் சாதனை என குறிப்பிட்டு வந்தனர்.

தமிழகத்தை புறக்கணித்த மத்திய அரசுக்கு அவமானம்... மோடியின் சாதனை என தம்பட்டம் அடித்த பாஜக கப்சிப்...

இதன்பின் டிரெயின்-18 ரயிலுக்கு ''வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்'' என பெயர் சூட்டப்பட்டது. அத்துடன் இந்த ரயில் டெல்லி-வாரணாசி இடையே இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்த சூழலில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று (பிப்ரவரி 15) தொடங்கி வைத்தார்.

தமிழகத்தை புறக்கணித்த மத்திய அரசுக்கு அவமானம்... மோடியின் சாதனை என தம்பட்டம் அடித்த பாஜக கப்சிப்...

இதற்கான விழா டெல்லியில் நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி பச்சை கொடியசைக்க, வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் கம்பீரமாக வாரணாசிக்கு புறப்பட்டது. பின்னர் வாரணாசியில் இருந்து இன்று அதிகாலை (பிப்ரவரி 16) மீண்டும் டெல்லி நோக்கி வந்து கொண்டிருந்தது.

தமிழகத்தை புறக்கணித்த மத்திய அரசுக்கு அவமானம்... மோடியின் சாதனை என தம்பட்டம் அடித்த பாஜக கப்சிப்...

ஆனால் டெல்லிக்கு 200 கிலோ மீட்டர்கள் முன்பாக உள்ள டுன்ட்லா என்னும் இடத்தில், சுமார் 6 மணியளவில் ரயில் திடீரென பழுதடைந்து நின்றது. சில பெட்டிகளுக்கு மின்சாரம் தடை பட்டதுடன், ரயிலில் இருந்து லேசான புகையுடன் கருகிய நெடி வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தை புறக்கணித்த மத்திய அரசுக்கு அவமானம்... மோடியின் சாதனை என தம்பட்டம் அடித்த பாஜக கப்சிப்...

அத்துடன் ரயிலை 40 கிலோ மீட்டர்கள் வேகத்திற்கு மேல் இயக்க முடியவில்லை. எனவே 10 கிலோ மீட்டர்கள் வேகத்தில் மிகவும் மெதுவாக இயக்கப்பட்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், சாம்ரோலா எனும் ரயில் நிலையத்திற்கு கொண்டு சென்று நிறுத்தப்பட்டது.

தமிழகத்தை புறக்கணித்த மத்திய அரசுக்கு அவமானம்... மோடியின் சாதனை என தம்பட்டம் அடித்த பாஜக கப்சிப்...

முன்னதாக பயணிகள் அனைவரும் வேறு ரயிலில் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதன்பின்னர் சாம்ரோலா ரயில் நிலையத்தில் வைத்து, முதற்கட்ட பழுதுகள் மட்டும் நீக்கப்பட்ட பின் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மீண்டும் டெல்லி நோக்கி புறப்பட்டது.

தமிழகத்தை புறக்கணித்த மத்திய அரசுக்கு அவமானம்... மோடியின் சாதனை என தம்பட்டம் அடித்த பாஜக கப்சிப்...

அப்போதும் மிக மெதுவாக இயக்கப்பட்ட ரயில் இன்று மதியம் டெல்லி சென்றடைந்தது. வந்தே பாரத் ரயில் சேவை பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில்தான் தொடங்கப்பட்டது. ஆனால் சேவை தொடங்கப்பட்ட அடுத்த நாளே ரயில் பழுதாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தை புறக்கணித்த மத்திய அரசுக்கு அவமானம்... மோடியின் சாதனை என தம்பட்டம் அடித்த பாஜக கப்சிப்...

இன்டர்னல் சிஸ்டத்தில் ஏற்பட்ட பழுது காரணமாகவே புகையுடன் கூடிய கருகிய நெடி வந்திருக்கலாம் என கூறப்படுகிறது. அதே நேரத்தில் பிரேக் சிஸ்டம் ஜாம் ஆகிவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுதவிர வேகத்தை அதிகரிக்கும்போது, பயங்கர சப்தம் எழுந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தை புறக்கணித்த மத்திய அரசுக்கு அவமானம்... மோடியின் சாதனை என தம்பட்டம் அடித்த பாஜக கப்சிப்...

எதனால் பழுது ஏற்பட்டது என்பதை உடனடியாக கண்டறிய முடியவில்லை. தொழில்நுட்ப ரீதியாக ஏற்பட்ட இந்த பழுதை சரி செய்யும் பணியில், ரயில்வே பொறியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் வர்த்தக ரீதியிலான பயணம் நாளை (பிப்ரவரி 17) முதல்தான் தொடங்குகிறது.

தமிழகத்தை புறக்கணித்த மத்திய அரசுக்கு அவமானம்... மோடியின் சாதனை என தம்பட்டம் அடித்த பாஜக கப்சிப்...

ஆனால் பெரிய அளவிலான தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. எனவே நாளைக்குள் பழுது நீக்கப்படுமா? என்பது தெரியவில்லை. எனவே நாளை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயங்குவதில் தொடர்ந்து சந்தேகம் நிலவுகிறது.

தமிழகத்தை புறக்கணித்த மத்திய அரசுக்கு அவமானம்... மோடியின் சாதனை என தம்பட்டம் அடித்த பாஜக கப்சிப்...

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ''பிரேக் லாக்கிங், வீல் ப்ரிக்சன் (சக்கர உராய்வு) என பெரிய அளவில் கோளாறு ஏற்பட்டுள்ளது. ஒருவேளை பொறியாளர்களால் பழுதை சரி செய்ய இயலாமல் போனால், வேறொரு இன்ஜின் பொருத்தி ரயிலை இயக்க முடியுமா? என ஆராய்ந்து வருகிறோம்.

தமிழகத்தை புறக்கணித்த மத்திய அரசுக்கு அவமானம்... மோடியின் சாதனை என தம்பட்டம் அடித்த பாஜக கப்சிப்...

ஆனால் இன்ஜினை இணைப்பதிலேயே ஏராளமான நடைமுறை சிக்கல்கள் நிலவி வருகின்றன. இன்ஜின் கப்லர் கவர் ஆகியுள்ளது. எனவே கப்லர் கவரை நீக்கியாக வேண்டிய தேவையுள்ளது. எனவே தற்போது எதையும் உறுதியாக சொல்ல முடியாது'' என்றனர்.

தமிழகத்தை புறக்கணித்த மத்திய அரசுக்கு அவமானம்... மோடியின் சாதனை என தம்பட்டம் அடித்த பாஜக கப்சிப்...

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மொத்தம் 3 முறை சோதனை ஓட்டத்திற்கு உட்படுத்தப்பட்டது. அப்போது சுமார் 7,000 கிலோ மீட்டர்கள் பயணம் செய்தது. இவ்வாறு அனைத்து சோதனைகளையும் முடித்து, செக்யூரிட்டி க்ளியரன்ஸ் பெற்ற பிறகுதான் இந்த ரயில் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.

தமிழகத்தை புறக்கணித்த மத்திய அரசுக்கு அவமானம்... மோடியின் சாதனை என தம்பட்டம் அடித்த பாஜக கப்சிப்...

அப்படி இருந்தும் கூட இரண்டாவது நாளிலேயே பழுது ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே எதிர்கட்சிகளும் இதனை சரமாரியாக விமர்சித்து வருகின்றன. மோடி அரசின் செயல்திறனுக்கு இந்த ரயில் ஒரு உதாரணம் என்பதே எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டாக உள்ளது.

தமிழகத்தை புறக்கணித்த மத்திய அரசுக்கு அவமானம்... மோடியின் சாதனை என தம்பட்டம் அடித்த பாஜக கப்சிப்...

டிரெயின்-18 ரயில் சென்னையில் தயாரிக்கப்பட்டாலும் இப்போதைக்கு தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் இயக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த விஷயத்திலும் மத்திய அரசு தமிழகத்தை புறக்கணிப்பதாக சர்ச்சை எழுந்தது. அத்துடன் சோதனை ஓட்டத்தின்போது டிரெயின்-18 ரயில் மீது கல்வீசு தாக்குதல் நடத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தகுந்த விஷயமாகும்.

Most Read Articles

Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Day After Launch By PM Modi, India's Fastest Train Vande Bharat Express Breaks Down Near Delhi. Read in Tamil
Story first published: Saturday, February 16, 2019, 16:49 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more