ராயல் என்பீல்டு பைக்கை ரோட்ல ஓட்டீட்டு போனது அவரா! சர்வ சாதாரணமாக சென்றதை பார்த்து வாயை பிளந்த மக்கள்!

இந்தியாவில் ராயல் என்பீல்டு (Royal Enfield) நிறுவனத்தின் பைக்குகளுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. குறிப்பாக ராயல் என்பீல்டு நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்துள்ள சூப்பர் மீட்டியோர் 650 (Super Meteor 650) பைக்கிற்கு தற்போது வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைக்க தொடங்கியுள்ளது.

ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக் இந்திய சந்தையில் நடப்பு 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போதைய நிலையில் இதன் ஆரம்ப விலை (Price) 3.54 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 3.84 லட்ச ரூபாயாக இருக்கிறது.

Dayanand Shetty Buys Royal Enfield Super Meteor 650

நாங்கள் இங்கே குறிப்பிட்டிருப்பது எக்ஸ் ஷோரூம் விலையாகும். ஆன் ரோடு விலை இன்னும் கொஞ்சம் கூடுதலாக வரும். அஸ்ட்ரல் (Astral), இன்டர்ஸ்டெல்லர் (Interstellar) மற்றும் செலஸ்டியல் (Celestial) என மொத்தம் 3 வேரியண்ட்களில், ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

செயல்திறனை பொறுத்தவரையில், ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக்கில், 648 சிசி நான்கு ஸ்ட்ரோக் பேரலல் ட்வின் ஏர் கூல்டு இன்ஜின் (Engine) வழங்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 47 பிஹெச்பி பவர் மற்றும் 52 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

Royal Enfield Super Meteor 650

இதே இன்ஜின்தான் ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 (Royal Enfield Interceptor 650) மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 (Royal Enfield Continental GT 650) ஆகிய பைக்குகளிலும் வழங்கப்பட்டு வருகிறது. இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் வாய்ந்த ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக்கை, சாதாரண வாடிக்கையாளர்கள் மட்டுமல்லாது, பிரபலங்களும் வாங்கி வருகின்றனர்.

இந்த வரிசையில் பிரபல நடிகரான தயானந்த் ஷெட்டி (Dayanand Shetty) தற்போது சூப்பர் மீட்டியோர் 650 பைக்கை வாங்கியுள்ளார். ''Crime Investigation Department அல்லது CID என அழைக்கப்படும் பிரபலமான டெலிவிஷன் ஷோ-வில் தயானந்த் ஷெட்டி நடித்திருந்தார். இது இந்திய தொலைக்காட்சி வரலாற்றில் மிக நீண்ட காலம் ஓடிய ஷோக்களில் ஒன்றாகும்.

கடந்த 1998ம் ஆண்டில் இருந்து 2018ம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் இந்த டெலிவிஷன் ஷோ ஓடியது. இதில் மிக முக்கியமான நட்சத்திரங்களில் ஒருவராக தயானந்த் ஷெட்டி இருந்தார். இவர்தான் தற்போது ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக்கை புதிதாக வாங்கியுள்ளார்.

பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்தாலும் கூட ராயல் என்பீல்டு ஷோரூமுக்கு நேரடியாக சென்று, சூப்பர் மீட்டியோர் 650 பைக்கை, தயானந்த் ஷெட்டி டெலிவரி எடுத்துள்ளார். அந்த வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது. பைக்கை டெலிவரி எடுத்த பின் அவர் சாலையில் ஓட்டி செல்வதையும் இந்த வீடியோவில் நம்மால் பார்க்க முடிகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக்கானது, க்ரூஸர் மோட்டார்சைக்கிள் (Cruiser Motorcycle) ரகத்தை சேர்ந்தது ஆகும். அடிக்கடி தொலை தூர பயணங்களை மேற்கொள்பவர்கள், ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக்கை வாங்குவது குறித்து பரிசீலனை செய்யலாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, November 15, 2023, 13:08 [IST]
English summary
Dayanand shetty royal enfield super meteor 650 viral video all details
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+